For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“மருத்துவர் என் மீது அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார்” - புது அனுபவம்!

பிரசவம் என்பது ஒரு முக்கியமான விஷயம்; மருத்துவர் என் மீது அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார் - புது அனுபவம் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

|

பிரசவம் என்பது ஒரு முக்கியமான விஷயம்; கர்ப்ப காலத்தின் பொழுது பெண்கள் எவ்வளவு கவனமாக தனக்குள் வளரும் உயிரை பாதுகாத்து வந்தார்களோ, அதே போல் பிரசவம் என்பது நெருங்கும் பொழுது தனக்கு என்ன ஆக போகிறதோ என்ற பயம் மற்றும் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்ற பதைபதைப்பு போன்ற விஷயங்கள் பெண்களின் மனதில் இடம் பெற்று இருக்கும்.

Real Life Story: Doctor Sat On Me And Pushed My Baby

பிரசவத்தின் பொழுது பெண்கள் மருத்துவர் என் மீது அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார் - புது அனுபவம் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணி - மும்பை!

கர்ப்பிணி - மும்பை!

மும்பையை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் இரவு வழக்கம் போல் அவரின் கணவர் மற்றும் மாமியார் மாமனாருடன் கதை பேசி கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடித்தார்; இந்த பெண்மணி ஒரு நிறைமாத கர்ப்பிணி. பின்னர் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவரவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு உறங்க சென்று விட்டனர்.

திடீரென்று தனது பிறப்புறுப்பில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை அவர் கவனித்தார்; உடனே பாத்ரூம் சென்று பார்க்க விரைந்தார்.

என்ன மாற்றம்?

என்ன மாற்றம்?

பாத்ரூம் சென்று பார்த்த பொழுது பிறப்புறுப்பில் பிரௌன் நிற வெளிப்பாடு லேசாக வந்து உள்ளதை கவனித்தார்; பின்னர் பாத்ரூம் விட்டு வெளிவந்து தனது கணவரிடம் இதை பற்றி தெரிவித்தார். இந்த நிலையை கணவருக்கு தெரிவித்த பின், மருத்துவருக்கு உடனடியாக போன் செய்து தெரிவிக்கலாம் என்று இந்த பெண்மணி கூறினார்.

தொந்தரவு செய்ய வேண்டாம்!

தொந்தரவு செய்ய வேண்டாம்!

அதற்கு அப்பெண்ணின் கணவர் உனக்கு வலி ஏற்படவில்லை அல்லவா, இதுவும் லேசாக வந்துள்ளது என்கிறாய் - நாளை காலை எப்படியும் மருத்துவரை நாம் காண செல்கிறோம் அப்பொழுது இது பற்றி கூறிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். மேலும் இப்பொழுது மணி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது; ராத்திரியில் மருத்துவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி விட்டார்.

மீண்டும் மாற்றம்!

மீண்டும் மாற்றம்!

சரி என்று அந்த கர்ப்பிணி பெண்ணும் உறங்க செல்ல, மீண்டும் சிறிது நேரத்திற்கு பின் பிறப்புறுப்பில் ஏதோ மாற்றம் ஏற்படுவதாக உணர்ந்தார்; மீண்டும் பாத்ரூம் சென்று பார்த்தால், பிறப்புறுப்பில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது. உடனே அந்த பெண்மணி தனது மருத்துவருக்கு போன் செய்து நிலையை கூறினார்.

அதற்கு மருத்துவர் உடனே மருத்துவமனை வந்து அட்மிட் ஆகும் படி கூற, கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் மாமியார் மாமனார் அனைவரையும் அழைத்து கொண்டு மருத்துவமனை விரைந்தார்.

மேலும் படிக்க: சிசேரியனுக்கு பின் மனைவியுடன் உடலால் இணைய எது சரியான நேரம்?

மருத்துவமனை - பரிசோதனைகள்!

மருத்துவமனை - பரிசோதனைகள்!

மருத்துவமனையை அடைந்த சிறிது நேரத்தில் சில பரிசோதனைகள் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்பட்டன. பரிசோதனை முடிவில் பயம் கொள்ள தேவையில்லை இன்னும் 3 நாட்களில் பிரசவம் நிகழ்ந்து விடும் என்று மருத்துவர்கள் கூறவே எல்லோரும் மனநிம்மதி அடைந்து மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வு எடுத்தனர்.

இன்னும் 3 நாட்களே என்பதால், அந்த கர்ப்பிணியை அங்கே அட்மிட் செய்து விட்டு உறவுகளும் ஓய்வு எடுக்க தொடங்கினர்.

திடீர் திருப்பம்!

திடீர் திருப்பம்!

திடீர் என்று கர்ப்பிணி பெண் கண் விழித்து தனது உடலில் முதுகு மற்றும் வயிறு பாகங்கள் லேசாய் வலிப்பதாய் உணர்ந்தார்; நேரமாக நேரமாக வலி விட்டு விட்டு ஏற்பட்டு மிகவும் தீவிரமடைந்து வந்தது. மருத்துவர்களை உடனே அழைத்து தன் நிலையை தெரிவித்தார் அந்த கர்ப்பிணி. மருத்துவர்கள் உடனே அந்த பெண்மணியை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

டாக்டர் உட்கார்ந்தார்..!

டாக்டர் உட்கார்ந்தார்..!

பிரசவம் பல மணி நேரங்களாக நீண்டு கொண்டு இருக்க, மருத்துவர்கள் அந்த கர்ப்பிணியை அழுத்தம் கொடுத்து அதாவது முக்கி குழந்தையை வெளியேற்றுமாறு அறிவித்த, அந்த பெண்மணியும் முயன்றாள்.

ஆனால் அவளின் அழுத்தம் சுத்தமாக பத்தாது என்பதை உணர்ந்த மருத்துவர், தானே அந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் அழுத்தம் கொடுத்தார்; அதுவும் பற்றாமல் போக, லேசாய் கர்ப்பிணியின் வயிறு மீது உட்கார்ந்து அழுத்தி குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து வெளியேற்றினார்.

குழந்தை பிறந்தது

குழந்தை பிறந்தது

பல மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தை வெளிவந்தது; மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஆரோக்கியமாக உள்ளது என்றே கூறினர். குழந்தை சுத்தப்படுத்தப்பட்டு, பிரசவம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த தாயிடம் தாய்ப்பால் அளிக்க கொடுக்கப்பட்டது.

அந்த பெண்மணி கையில் முதன் முறையாக குழந்தையை ஏந்தும் பொழுது பேரின்பத்தை அடைந்தார்; அவரின் மகிழ்ச்சியை அவரால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

மேலும் படிக்க: சிவனிடம் எந்தெந்த வேண்டுதலுக்கு என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும்?

கணவர் மற்றும் குடும்பம்!

கணவர் மற்றும் குடும்பம்!

கையில் முதன் முறையாக தான் பெற்ற குழந்தையை ஏந்துவது மிகவும் புதிதான அனுபவமாக இருந்தது அந்த பெண்மணிக்கு..! பின் அந்த பெண்மணியின் கணவர் மற்றும் குடும்ப நபர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த குடும்பமே தங்கள் குடும்பத்திற்கு வந்த புது வரவை கண்டு பேரானந்தம் கொண்டு, ஆனந்த கூத்தாடியது. ஒரு பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் இந்த சந்தோஷத்தை அனுபவித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Doctor Sat On Me And Pushed My Baby

Real Life Story: Doctor Sat On Me And Pushed My Baby
Story first published: Thursday, October 11, 2018, 15:35 [IST]
Desktop Bottom Promotion