Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கர்ப்ப காலத்தில் கருப்பு நிற மலம் வெளிப்பட்டால் ஆபத்தா?
கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான பிரச்சனை; கர்ப்ப காலத்தில் கருப்புநிற மலம் வெளிப்பட்டால் ஆபத்தா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களில் பல விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன; இந்த ஹார்மோன்கள் சுரப்பு பெண்ணின் உடலில் பல வகை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றங்கள் பெண்களுக்கு சில பல நன்மையையும் தீமையையும் அளிக்கும்; பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட, அவர்தம் உடலில் உண்டாகும் உபாதைகள் ஏற்பட்ட நன்மைகளையே மறக்க செய்து விடுகின்றன.

அந்த வகையில் பெண்களில் ஏற்படும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றத்தால் அவர்தம் உடலில் நிகழும் பாதிப்பு மலச்சிக்கல், மலத்தின் நிறம் மாறுபடுதல் போன்றவை ஆகும். இந்த பதிப்பில் கர்ப்பிணி பெண்களின் உடலில் இருந்து கருப்பு நிற மலம் வெளிப்பட என்ன காரணம் மற்றும் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா, கருப்பு நிறம் எதைக் குறிக்கிறது என்பது போன்ற தகவல்களை படித்து அறியலாம்.

கருப்பு நிறத்திற்கு காரணங்கள்
கர்ப்பிணி பெண்களில் கருப்பு நிற மலம் வெளிப்படுவது ஆபத்து, அது இது என்று பலவித கட்டு கதைகள் நிலவி வருகின்றன. ஆனால் உண்மையிலேயே கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் இருந்து கருப்பு நிற மலம் வெளிப்பட காரணங்கள் என்னென்ன என்று இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம், அதன் பின் அது பாதுகாப்பானதா அல்லது ஆபத்தானதா என்பது குறித்தும் படிக்கலாம்.

மருந்து மாத்திரைகள்!
கர்ப்ப காலத்தில் உட்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகள் உடலில் எதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டதோ, அந்த மருத்துவ மாற்றத்தோடு வேறு ஏதேனும் பக்க விளைவு மாற்றங்களையும் ஏற்படுத்தி விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராசிட்டமால், அண்டாசிட்ஸ், பண்டொப்ரஸோல், டொமெப்ரெடொனே போன்ற மருந்துகள் கருப்பு நிற மலம் உருவாக காரணமாகலாம்; மேலும் சில மருந்து மாத்திரை மற்றும் டானிக் வகைகள் கூட கருப்பு நிற மலத்திற்கு காரணமாகலாம்.

உட்கொள்ளும் உணவுகள்
சில சமயங்களில் கர்ப்பிணிகள் உட்கொள்ளும் உணவுகள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களால் கூட மலத்தின் நிறம் மாறலாம். இந்த அனுபவத்தை கர்ப்பிணிகள் மட்டும் இன்றி மற்ற அனைவரும் கூட தங்களது வாழ்வில் சந்தித்து இருக்கலாம். உட்கொள்ளும் உணவுகளை உடலால் ஏற்றுக் கொள்ள முடியாத போது, ஒத்துக் கொள்ள முடியாத போது அல்லது வேறுவகை மாற்றங்கள் நிகழ்வதால் உருண்டை உணவு கருப்பு நிற மலத்தை ஏற்படுத்தலாம்.

இரும்புச்சத்து மற்றும் பிற உபாதைகள்
கர்ப்பிணி பெண்கள் தங்களது உடலில் இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்க உட்கொள்ளப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் பெரும்பாலும் கருப்பு நிற மலத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளது, மேலும் கர்ப்பிணி பெண்களின் உடலில் உதிர போக்கு மற்றும் பிற நோய்க் குறைபாடுகள் இருந்தால், அதனால் கூட கருப்பு நிற மலம் வெளிப்படும்.

கருப்பு நிற மலம் ஆபத்தானதா?
கர்ப்பிணி பெண்களின் உடலில் மேற்கண்ட காரணங்களால் கருப்புநிற மலம் வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று கண்டறியப்பட்டு உள்ளது. கருப்பு நிற மலம் மேற்கண்ட காரணங்களால் பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்காது; இந்த காரணங்களால் உருவாகி வெளியாகும் மலம் ஓரிரு நாட்கள் மட்டுமே ஏற்படும்.

ஆபத்தான நிலை!
ஆனால், சில சமயங்களில் இந்த கருப்பு நிற மலத்துடன் இரத்தப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், மயக்கம், குமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி மற்றும் சிறுநீரக உறுப்புகள் வலித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அது கட்டாயம் ஆபத்தாக இருக்கலாம்.
இது மாதிரியான சூழ்நிலைகள் ஏற்படும் நேரத்தில், கர்ப்பிணி பெண்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து பிரச்சனைக்கான தீர்வு பெற வேண்டியது மிகவும் அவசியம்; இல்லையேல் இந்த மாற்றம் பெரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.

சிகிச்சை முறை
மேற்கூறிய ஆபத்தான உடல் மாற்றங்கள் கருப்பு நிற மலம் வெளிப்படும் நேரங்களில் நிகழ்ந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளல் வேண்டும். சோதனையின் பொழுது உடலில் எந்தக் குறையும் இல்லை, குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, குழந்தை ஆரோக்கியமாக தான் உள்ளது என்பதை உறுதி செய்ய வயிறு, மலக்குடல், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரக பகுதிகளை மற்றும் மருத்துவர் பரிந்துரை செய்யும் இடங்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்து உபாதையின் நிலையை நன்கு அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.

தடுக்க செய்ய வேண்டியது?!
கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலில் கருப்பு நிற மலத்தின் மாற்றத்தை சாதாரண நிலையில் மேற்கூறிய உடல் பாதிப்புகள் இன்றி கண்டால், அந்த சமயத்தில் நீங்கள் உட்கொள்ளும் மற்றும் உட்கொண்ட உணவுகளை ஆராய்ந்து பார்த்து ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை தவிர்த்தல், மாத்திரைகளால் ஏற்பட்டால் எந்த மாத்திரை என்று கண்டறிந்து மருத்துவருடன் விவாதித்தல், சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளல், போன்ற சிறு சிறு விஷயங்களை செய்ய வேண்டும்.

நீங்களாக எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்!
மேலும் அதிக நீர் பருகி உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்து இருத்தல் வேண்டும். மருத்துவர் அறிவுறுத்தல் இன்றி எந்த வித மருந்து மாத்திரைகள் உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்த்து விடுதல் நல்லது; கருப்பு நிற மலத்துடன் உடல் உபாதைகள் சேர்ந்து ஏற்படும் சமயம் உடனே மருத்துவரை அணுகி, தேவையான தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications