For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவில் இருக்கும் சிசு என்னென்ன சேட்டைகள் செய்யும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் குழந்தை தாயின் கருவறைக்குள் என்னென்ன சேஷ்டைகள் செய்யும் என்பது பற்றி இங்கே கண்டபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

கருவறைக்குள் குழந்தைகள் செய்யும் விஷயங்கள்

குழந்தைகள் என்றாலே அழகு தான். அவர்களுடைய சிரிப்பு, அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுதல் உறங்குவது என் அத்தனையுமே ஒருவித அழகு தான். ஆனால் கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களையெல்லாம் குழந்தைகள் செய்யும் உங்களுக்கு தெரியுமா?

unny things of unborn babies

நாம் மேற்கூறிய பல விஷயங்களைக் குழந்தை கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடம். இனிப்பு ஃப்ளூயிட்களை குழந்தைகள் கருவிலேயே ரசித்து விழுங்கும். அம்மாவின் குரலைக் கேட்டு அசைவது என கருவறைக்குள் குழந்தைகள் செய்யும் லூட்டிகள் இன்னும் நிறைய.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுகை

அழுகை

Image Courtesy

கருவில் இருக்கும் குழந்தை என்ன செய்கிறது என்பதை அறிய அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்து பார்த்த பொழுது, நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் குழந்தை கருவில் அழுது கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

பிணைப்பு

பிணைப்பு

இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே எப்போதுமே நெருக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு இடையே இருக்கின்ற இந்த பிணைப்பு என்பது கருவறைக்குள்ளேயே தொடங்கிவிடுகிறது. இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களில் அம்மா பேசுவதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும்.

விக்கல்

விக்கல்

முதல் மூன்று மாதத்தின் பொழுதிலிருந்தே குழந்தைககு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். இதை கர்ப்பிணிகளால் உணர்ந்த கொள்ள முடியாது. நன்கு கூர்ந்து கவனித்தால் சின்ன சின்ன நகர்வுகளை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.மற்றபடி இவற்றை அல்ட்ரா சவுண்ட் கருவியின் மூலம் தான் பார்க்க முடியும்.

புன்னகை

புன்னகை

குழந்தை கருவறைக்குள் இருக்கும் 26 வது வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரியாக்ட் செய்துவிட ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் தான் கருவறைக்குள் இருக்கும் முதன்முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கும்.

கொட்டாவி

கொட்டாவி

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே மிக அழகாக இருக்கும். அதிலும் குழந்தை அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் பொழுது, அழகாக கொட்டாவி விட்டால் எப்படி இருக்கும்?... எவ்வளவு அழகாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து ரசித்துப் பாருங்கள்.

சிறுநீர்

சிறுநீர்

வயிற்றில் கரு உற்பத்தியாகி, மூன்று மாதங்கள் ஆன பின்பு குழந்தைக்கு சிறுநீர் உற்பத்தி ஆக ஆரம்பித்துவிடும். அதன்பின் வயிற்றுக்குள் கருவறைக்குள்ளேயே குழந்தை சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விடுகிறது.

கண்களைத் திறப்பது

கண்களைத் திறப்பது

Image Courtesy

வயிற்றுக்குள் கரு தோன்றி, 28 வது வாரத்தில் தான் குழந்தை முதன் முதலாகக் கண்களைத் திறக்க ஆரம்பிக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதி அதிக வெளிச்சத்தில் படுகிற பொழுதுதான் முதன் முதலாக குழந்தை கண்ணைத் திறக்க ஆரம்பிக்குமாம். சிறிது நேரம் மட்டும் தான் கண் திறந்திருக்குமாம். இதுபோன்ற அதிக வெளிச்சத்தை உணருகின்ற போதெல்லாம் சிசு கண் திறந்து மூடுமாம்.

ருசி (சுவை)

ருசி (சுவை)

கர்ப்பிணி பெண்கள் எந்த உணவை உட்கொண்டாலும் அந்த சுவையை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு சுவையை உணர்ந்து கொள்ளுமாம். இதைப் பற்றி நிபுணர்கள் கருத்து சொல்லுகிற போது, இதன்மூலம் பல இனிப்பு ஃபுளூயிட்டுகளை ருசித்து விழுங்குகிறது என்று குறிப்பிடுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

funny things of unborn babies while during pregnancy

here we found some funny things of unborn babies while during pregnancy
Story first published: Monday, August 27, 2018, 15:52 [IST]
Desktop Bottom Promotion