ஒரு குழந்தை மட்டும் உள்ள பெற்றோரா நீங்கள்?... அப்போ இதெல்லாம் நீங்க செஞ்சுதான் ஆகணும்...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

நமது சமுதாயத்தில் குடும்பம் என்றாலே எண்ணற்ற கட்டமைப்பு கட்டுப்பாடுகளுடன் தான் காணப்படும். ஒரு குழந்தையை வளர்த்து சமுதாயத்தில் பெரிய நிலைக்கு கொண்டு வருவதில் குடும்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

single parent problem

அம்மா, அப்பா என்ற இரண்டு பெற்றோர்கள் இருந்தால் குழந்தை வளர்ப்பும் பெரும் கஷ்டமாக இருக்காது. ஆனால் நீங்கள் உங்கள் துணையிடமிருந்து விவாகரத்து பெற்றோ அல்லது உங்கள் துணையில்லாமல் தனி ஒருவராக இதை சமாளிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு சவாலான விஷயமாகத் தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதையை வகுத்தல்

பாதையை வகுத்தல்

நீங்கள் ஒருத்தராக இருப்பதால் தனியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. உங்கள் உதவிக்கு, உறுதுணைக்கு உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என்று இவர்களுடைய பக்க பலத்தையும் பெற்று கொள்ளலாம். இதைத் தவிர உங்களுக்கான ஒற்றைப் பெற்றோருக்கான ஆதரவு குழுக்கள், உங்களை மாதிரி ஒற்றை பெற்றோராகிய நபர்கள் இவர்களை நாடிச் செல்லலாம். அவர்களிடம் உங்கள் உணர்வுகள், கஷ்டங்கள் போன்றவற்றை பகிர மற்றும் அறிவுரைகளை பெற முயலலாம்.

பணக்கஷ்டம்

பணக்கஷ்டம்

கண்டிப்பாக ஒற்றை பெற்றோராக இருந்தால் குடும்ப சுமைகள் அனைத்தும் உங்கள் மீது தான் விழும். பண நெருக்கடி போன்ற பிரச்சினைகளும் குழந்தை வளர்ப்பும் ஒரு சேர ஏற்படும். வேலை, வீடு என்ற இரண்டையும் சமமாக கொண்டு போக வேண்டிய சூழ்நிலை நிலவும். எனவே ரொம்ப கஷ்டப்படாதீர்கள். குழந்தை வளர்ப்புக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவி செய்தால் பெற்றுக் கொள்ளுங்கள். மறுக்காதீர்கள். அப்பொழுது தான் உங்களால் வேலை போன்றவற்றில் கவனம் செலுத்தி நிதி நிலையை சரி கட்ட முடியும்.

வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்

வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்

உங்களுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தால் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சிகள், பெற்றோர்களுக்கான மீட்டிங் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளும் என்ஜாய் பண்ணுவதோடு அவர்களுக்கும் புதிய நண்பர்கள் கிடைக்கும். நீங்களும் ஒரு நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமையும். உங்கள் வார விடுமுறை நாட்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவை புரிய வைக்கும்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

உங்கள் வேலை நேரங்களை தவிர்த்து சில மணி நேரங்கள் உங்கள் குழந்தைகளுடன் இருங்கள். அவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் பூங்காவிற்கு அழைத்து செல்வது, ஐஸ் கிரீம் போன்று பிடித்த உணவுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பது, அவர்களுடன் உரையாடுவது, விளையாடுவது, உங்கள் பகுதிகளில் நிகழும் கொண்டாட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டு மகிழுங்கள்...

உங்களுக்கான நேரம்

உங்களுக்கான நேரம்

இது உங்களுக்கான நேரம். நாள் முழுவதும் வேலை, குழந்தை, வீடு என்று நேரம் ஒதுக்கி இருந்தாலும் உங்களுக்கென்று சில மணித் துளிகளாவது தேவை. உங்களுக்கு பிடித்த புத்தகம் படித்தல், பாட்டு கேட்டல், நண்பர்களுடன் உரையாடுதல், காலார நடத்தல் போன்ற செயல்களை ஒய்வு நேரத்தில் மேற்கொள்ளலாம். இது உங்களை மறுபடியும் உற்சாகமாகவும் ஊக்கத்துடனும் செயல்பட உதவும்.

மனமும் உடலும்

மனமும் உடலும்

நீங்கள் எதை செய்தாலும் அதில் முழுமனதாக செய்யுங்கள். குழந்தையுடன் உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா மேற்கொள்ளுங்கள். இது உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ரோல் மாடல்

ரோல் மாடல்

உங்கள் குழந்தைகள் பொற்றோராகிய உங்கள் இருவரைத் தான் ரோல் மாடலாக எண்ணுவார்கள். நீங்கள் ஒற்றை பெற்றோராக இருக்கும் சமயத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் உள்ள பெரியப்பா, மாமா அல்லது பெரியம்மா, அத்தை போன்ற நல்ல மனிதர்களையே அவர்களுக்கு இன்னொரு ரோல் மாடலாக தெரியப்படுத்துங்கள்.

உணர்வுகள்

உணர்வுகள்

பெற்றோராக இருப்பது கடினமான விஷயம் தான். சில நேரங்களில் நீங்கள் கோபமடையலாம் ஏன் விரக்தியின் விளிம்புக்கே செல்லலாம் ஆனால் உங்கள் உணர்வுகள் எப்பொழுதும் குழந்தைகள் மீது இருக்கட்டும். அவர்களை பேணி காக்கவில்லை என்றால் இந்த சமுதாயத்தில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். நீங்கள் அதிகமான விரக்தியில் இருந்தால் கண்டிப்பாக அதிலிருந்து மீள உதவி கேட்க முயலுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Being A Single Parent

Today’s families come in a variety of shapes and sizes. The “typical” household made up of 2 parents and 2.5 children is no longer typical. You may be raising your children on your own. Being a single parent can be challenging. Take a correct path, financial strain, things to be consider, time management these are the challenges there.
Story first published: Tuesday, March 27, 2018, 18:30 [IST]