For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

64 சதவீதம் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ‘அந்த’ பிரச்னை வருதாம்...

generally women are affected by insomnia.particularly they suffered at the time of pregnancy/ பொதுவாக பெண்களுக்கு உண்டாகிற பல்வேறு மன அழுத்தங்களின் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, கர்ப்ப கால

By Stalin Felix
|

தூக்கமின்மை என்பது நரம்பியல் கோளாறு. இரண்டு நாள் தூங்காமல் இருந்தால் நம்முடைய முகத்தை நம்மாலேயே கண்ணாடியில் பார்க்க முடியாது.

health

ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் பலருக்கும் கர்ப்ப காலம் முழுக்க தூக்கமின்மை பிரச்னை அதிகமாக இருக்குமாம். இது மேலும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவையும் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

ஸ்பெயினில் உள்ள புகழ் பெற்ற கிரானடா பல்கலைக்கழகம் அதிர்ச்சியான ஆய்வு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அந்தப் பல்கலைக்கழகம், மேலும் சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சுமார் 486 கர்ப்பிணி பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஆய்வு முடிவுகளின்படி, கர்ப்ப காலத்தின் மூன்றாவது கட்டத்தில் மட்டும் சுமார் 64 சதவீத பெண்கள் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறது.

64 சதவீதம் பெண்கள்

64 சதவீதம் பெண்கள்

கர்ப்ப காலத்தின் முதல் ட்ரைமஸ்டரில் சுமார் 44 சதவீத பெண்களும், இரண்டாவது ட்ரைமஸ்டரில் 46 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சராசரியாக, பெண்களில் சுமார் 6 சதவீத பேர் மட்டுமே தூக்கமின்மை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், கர்ப்ப காலத்தில் இதனைவிட சுமார் பத்து மடங்கு அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என மேலும் பீதியை கிளப்புகிறது அந்த ஆய்வு.

குறை பிரசவங்கள்

குறை பிரசவங்கள்

மூன்றாவது ட்ரைமஸ்டரில் அதிகரிக்கும் இந்த தூக்கமின்மை வியாதி, கர்ப்பிணிகளின் உடல்நலத்தை மிகக் கடுமையாக பாதிக்கிறது. இதனால், உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, நீரழிவு நோய், முதுகுவலி துவங்கி சில நேரம் குறை பிரசவங்களும் நிகழ வாய்ப்பு அதிகரிக்கிறது.

கருத்தியல்

கருத்தியல்

கிரானடா பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து மற்றும் பொது சுகாதார துறை ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மருத்துவர் டாக்டர் மரியா டெல் கார்மென் பின்வருமாறு கூறுகிறார் "ஏற்கனவே பெண்களுக்கு இருக்கும் தூக்கமின்மை வியாதி, கர்ப்பகாலத்தில் இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது. அதை தவிர, மேலும் புதிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. 'கர்ப்பகாலத்தில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை இயல்பானது, அதனால் ஏற்படும் உடல்நல அசௌவுரியங்களும் இயல்பானது. அதை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும்' என்ற கருத்தியல் பெருவாரியான பெண்களிடம் உள்ளது. ஆனால், அது உண்மை இல்லை" என்கிறார்.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பை சாடும் டாக்டர் மரியா, "WHO அமைப்பானது தூக்கமின்மை நோயை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இதனால் நமது சுகாதார அமைப்புகளும், கர்ப்பகாலத்தில் பெண்களின் தூக்கமின்மை பிரச்னையைக் கண்டு கொள்ளாமலே இருக்கின்றன. முழுமையான கண்காணிப்பும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலும் இந்த பிரச்னைக்கு மிக முக்கியமான தீர்வாக அமையும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பொய் பிரசவ வலி

பொய் பிரசவ வலி

இயற்கை பிரசவங்கள் குறைந்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கும் இந்த தூக்கமின்மை நோய் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. மன அழுத்தம், பொய் பிரசவ வலி போன்றவற்றிற்கும் இந்த தூக்கமின்மை நோய் வித்திடுகிறது என்கிறது இந்த ஆய்வு. தொடர்ச்சியாக தூக்கம் இன்மையை கவனித்து, கட்டுப்படுத்தினால் மட்டுமே இது போன்ற சிக்கல்களில் இருந்து மீண்டு வர முடியும்.

இன்னொரு ஆய்வாளரான டாக்டர் மரியா கூறும் போது, "இரவு மட்டும் பகல் நேரங்களில் எவ்வளவு நேரம் ஒரு கர்ப்பிணி தூக்கம் இன்மையால் தவிக்கிறார் என்று கணக்கிட வேண்டும். தொடர்ச்சியாக இப்படி தகவல்களை திரட்டி, அவருக்கு மருந்துகள் இல்லாமல் இந்த தூக்கமின்மை நோயை எப்படி விரட்டி அடிக்கலாம் என்பதற்கு பயிற்சியைக் கொடுக்க வேண்டும். "

குழந்தைக்கு பாதிப்பு

குழந்தைக்கு பாதிப்பு

அந்த பல்கலைகழகத்தின் இன்னொரு பேராசிரியாரான அவுரோரா கூறும்போது, "ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் முன்பே அவர் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை கவனிக்க வேண்டும். தொடர்ந்து கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை கண்காணித்தல் அவசியம். சிலநேரம், அந்த பெண் அதிக எடை கொண்டிருந்தாலோ, இல்லை அந்த பெண்ணுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலோ, அது அவருடைய தூக்கத்தை பாதிக்கலாம். எனவே முழுமையான ஒரு ஆய்வு அவசியம்" என்கிறார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

கர்ப்பகாலத்தில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்னைக்கு இந்த ஆய்வு ஒரே ஒரு முக்கிய தீர்வை முன்வைக்கிறது, அது 'உடற்பயிற்சி'. தொடர்ச்சியாக மிதமான உடற்பயிற்சியை அந்த பெண்கள் மேற்கொண்டு வந்தால், இந்த தூக்கமின்மை சிக்கலில் இருந்து வெளியே வரலாம் என்கிறது இந்த ஆய்வு. மேலும் யோகாசனங்கள் செய்ய பெரிதும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

64% of women suffer from insomnia in late pregnancy

Insomnia causes numerous problems. It affects the quality of life of pregnant women, which apart from being of great importance per se, is also a risk factor for high blood pressure and pre-eclampsia, gestational diabetes, depression, premature birth and unplanned caesarean sections. Consequently, the issue must be tackled systematically.
Desktop Bottom Promotion