குழந்தைக்கு முழு ஆரோக்கியமும் கிடைக்க, கர்ப்ப காலத்தில் நீங்க இதை சாப்பிட்டே ஆகனும்!

Written By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவுகள் தான் குழந்தைக்கு அதிகமாக சத்துக்களை கொடுக்கின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகள் வாயிலாக தான் குழந்தைகளின் மூளை, எலும்புகள் போன்ற ஒவ்வொரு பகுதிகளும் வலுப்பட தாய் சாப்பிடும் உணவுகள் முக்கியப்பங்கு வகிக்கிறது.

நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும். நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும்.

why pregnant women should eat egg

அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள். சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.

முட்டை என்பது ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் அதிகளவு புரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை முட்டை அள்ளித்தருகிறது. இந்த பகுதியில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலர்ஜி

அலர்ஜி

கர்ப்ப காலத்தில் எந்த காரணத்தை கொண்டும் முட்டை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

முட்டை மற்றும் நிலக்கடலை போன்றவை அலர்ஜியை தரும் உணவுகளாக கருதப்படுகின்றன. அதை நினைத்து முட்டை, நிலக்கடலை போன்ற உணவுகளை நீங்கள் சாப்பிடாமல் இருக்க கூடாது. நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னர் நீங்கள் இதனை உண்பது மிக மிக சிறந்ததாகும்.

ஆய்வு

ஆய்வு

கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது, சிசுவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. எதிர்காலத்தில் பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளின் டயட் தொடர்பாக அமெரிக்காவின் இதாகா நகரில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேரி காடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள்

நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் ஏழு மாத, எட்டு மாத கர்ப்பிணிகள் 24 பேர் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முட்டையில் உள்ள கோலைன் சத்து 480 மி.கி. அல்லது 930 மி.கி. அளவுக்கு கிடைக்கும் வகையில் தினமும் முட்டை சாப்பிடுமாறு கூறப்பட்டது. பிரசவம் வரை அவர்கள் முட்டை சாப்பிட்டு வந்தனர்.

கர்ப்ப காலம் டென்சன்

கர்ப்ப காலம் டென்சன்

ஆய்வில் தெரியவந்த தகவல் குறித்து மேரி காடில் கூறியதாவது:

கர்ப்ப காலத்தில் இயல்பாகவே தாய்மார்கள் அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். ஒருவித மன அழுத்தம், இறுக்கம், குழந்தை நல்லபடியாக பிறக்குமா என்ற பயத்துடன் காணப்படுவார்கள். அதிகப்படியான பயம், மன அழுத்தம் ஆகியவை தாய்க்கு மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும். மேலும், கர்ப்ப காலத்தின்போது, கார்டிசால் சுரப்பு குறைந்தால் தொப்புள்கொடி பாதிக்கப்படும்.

ஆரோக்கியமான மூளை வளர்ச்சி

ஆரோக்கியமான மூளை வளர்ச்சி

சிசுவுக்கு முறையாக சத்துகள் கிடைக்காது. முட்டை அதிகம் சாப்பிடுவதால், கார்டிசால் சுரப்பு சீராகிறது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. சிசுவின் நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

கருவிற்கு நல்லது

கருவிற்கு நல்லது

இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் ரத்தஓட்டம், டென்ஷன், சர்க்கரைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது. அது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் தாய்க்கு நோய்த் தொற்று ஏற்படாமல், வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வராமலும் கோலைன் காப்பாற்றுகிறது.

மஞ்சள் கரு

மஞ்சள் கரு

ஒரு முட்டையில்- முக்கியமாக மஞ்சள் கருவில் 125 மி.கி. அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. இதுதவிர புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம்.

முட்டையின் முக்கியத்துவம்

முட்டையின் முக்கியத்துவம்

சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது. முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான உணவாக மாற்றுகிறது.

கொழுப்பு சத்து

கொழுப்பு சத்து

குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் ஏன் எல்லோரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

நன்கு வேக வைத்து சாப்பிடவும்

நன்கு வேக வைத்து சாப்பிடவும்

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

why pregnant women should eat egg

why pregnant women should eat egg
Story first published: Tuesday, November 28, 2017, 16:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter