For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தற்போது நிறைய பேருக்கு குழந்தை எடை குறைவில் பிறக்கிறது. இதற்கு காரணம் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே நன்கு சாப்பிடாமல் இருப்பதோடு, மனநிலையும் முக்கிய காரணம். பொதுவாக கர்ப்பத்தின் இறுதி மூன்று மாத காலத்தில் குழந்தை 1.5-1.8 கிலோ வரையாவது எடை இருக்க வேண்டும்.

Ways To Maintain Healthy Baby Weight During Pregnancy

ஆனால் வயிற்றில் வளரும் குழந்தை இதற்கு குறைவான எடையில் இருப்பதாக மருத்துவர் சொன்னால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசிலவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் குழந்தையின் எடையுடன் வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரி அளவை அதிகரிக்கவும்

கலோரி அளவை அதிகரிக்கவும்

கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் 300 கலோரிகளை எடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமான உடல் எடையுடன் பிறக்கும். அதற்கு நற்பதமான பழங்கள், புரோட்டீன், முழு தானியங்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் போன்றவை மிகவும் நல்லது.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். இந்த நல்ல கொழுப்புக்கள் ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், மீன்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

கர்ப்பிணிகள் மன அழுத்தத்துடனோ அல்லது மன கஷ்டத்துடனோ இருந்தால், அது குழந்தையின் எடையைப் பாதிக்கும். ஆகவே மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் மாத்திரைகள்

வைட்டமின் மாத்திரைகள்

மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை தவறாமல் தினமும் உட்கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும், எடைக்கும் உறுதுணையாக இருப்பதோடு, கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தொடர்ச்சியான பரிசோதனை

தொடர்ச்சியான பரிசோதனை

வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை அறிந்து கொள்ள மாதந்தோறும் தவறாமல் மருத்துவரை அணுகி உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Maintain Healthy Baby Weight During Pregnancy

If your doctor has identified that your baby is slightly underweight, here are a few steps you can take to ensure healthy baby growth.
Story first published: Wednesday, May 31, 2017, 16:13 [IST]
Desktop Bottom Promotion