அம்மா ஆகப் போகும் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

Written By:
Subscribe to Boldsky

கர்ப்பம் தரித்த பின் அது ஒவ்வொரு பெண்ணிற்கும் உணர்வுபூர்வமான நேரம்தான். என்ன குழந்தை, எப்படி இருக்கும், நமக்கு ஏதாவது நேருமா என பல விதமாக அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்படி குழப்பிக் கொள்ளவே தேவையில்லை.

Things you must do after confirmation of pregnancy

மருத்துவரின் அறிவுரையின் படி நடந்து சரியான நேர்த்திற்கு உண்வருந்தினாலே இயல்பாய் எந்த வித சிரமமின்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். அந்த காலக் கட்டத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மூத்த அனுபவமிக்க பாட்டி ஒருவர் கூறுகின்றார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சமவீத உணவு

சமவீத உணவு

தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

போலிக் அமிலம் மாத்திரைகள்:

போலிக் அமிலம் மாத்திரைகள்:

நீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கர்ப்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் ஃபோலிம் அமில மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், கோழி, , தானியங்கள் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விட்டமின் ஏ

நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழந்தைபிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.

 ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும்.

தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கர்ப்பமானவுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம்.

மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், ரத்த அல்லது நீர் கசிந்தால், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you must do after confirmation of pregnancy

Things you must do after confirmation of pregnancy
Please Wait while comments are loading...
Subscribe Newsletter