சாதாரண கர்ப்பம் போலவே தெரியும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தால் ஆபத்து உண்டாகுமா?

Written By:
Subscribe to Boldsky

முத்துப்பிள்ளை கர்ப்பம் என்பது கர்ப்பம் போன்ற அறிகுறிகளுடன் வரக்கூடிய ஒன்று தான். இந்த முத்துப்பிள்ளை கர்ப்பத்தின் போதும் கூட வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற கர்ப்ப கால அறிகுறிகள் உண்டாகும். பொதுவாக இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றினாலே நாம் கர்ப்பம் என்று நினைத்து சந்தோஷப்பட தானே செய்வோம்...! ஆனால் இறுதியில் இந்த கர்ப்பத்தின் மூலம் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரிந்தால், நமது மகிழ்ச்சிகள் அனைத்தும் வீணாய் போக தானே செய்யும்...?

முத்துப்பிள்ளை கர்ப்பம் பற்றி நம்மில் பலருக்கு விரிவான விளக்கங்கள் தெரியாமல் இருக்கலாம். இந்த முத்துப்பிள்ளை கர்ப்பத்தை எப்படி கண்டறிவது, முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் அடுத்து என்னென்ன செய்யலாம், இதனால் உண்டாகும் ஆபத்துகள் என்னென்ன என்பதை பற்றி எல்லாம் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்துப்பிள்ளை கர்ப்பம்?

முத்துப்பிள்ளை கர்ப்பம்?

ஆண் உடைய 23 குரோமோசோம்களும், பெண்ணுடைய 23 குரோமோசோம்களும் இணைந்து 46 குரோமோசோம்களாக மாறுவது என்பது தான் இயல்பான கர்ப்பம் எனப்படுகிறது. ஆனால் முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் இவ்வாறு இல்லை..

மாறாக முத்துப்பிள்ளை கர்பத்தில் கருமுட்டையில் பெண்ணின் குரோமோசோம்கள் இருக்காது. மேலும் ஆணின் குரோமோசோம்கள் இரட்டிப்பாக இருக்கும். தாயின் குரோமோசோம்கள் முற்றிலும் இல்லாமல் இருப்பதால், கருவோ, கரு வளரும் பையோ அல்லது நஞ்சு திசுக்களோ இருப்பது இல்லை.

சாதரண கர்ப்பம்

சாதரண கர்ப்பம்

இந்த முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் நஞ்சானது திராட்சை கொத்து போன்ற வடிவமைப்பில் காட்சியளிக்கும். இதனையே முத்துப்பிள்ளை கர்ப்பம் என்று கூறுகிறோம். சாதாரண கர்ப்பத்தில் இருக்க கூடிய அனைத்து அறிகுறிகளும் இந்த கர்ப்பத்திலும் இருக்கும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

சாதாரண கர்ப்பத்தின் அறிகுறியான மாதவிடாய் தள்ளி போதல் இந்த முத்து பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் அந்த பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு உண்டாகும்.

சில பெண்களுக்கு ரத்தப் போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம்.

கண்டுபிடிப்பது எப்படி?

கண்டுபிடிப்பது எப்படி?

முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட மிகப் பெரியதாக இருக்கும். அதாவது, மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, மிக பெரிதாக இருக்கும்.

ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி. ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

கர்பத்திற்கு உரிய அறிகுறிகளான வாந்தி, மயக்கம், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற அறிகுறிகளை கண்டு நீங்கள் சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்தால் கூட சிறுநீர் பரிசோதனையில் முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தாலும். பாசிடிவ் என்று தான் வரும். ரத்தப் பரிசோதனையிலும் பாசிடிவ் தான் வரும்.

ஸ்கேன்

ஸ்கேன்

கர்ப்பமான 45 நாட்களில் ஸ்கேன் எடுத்து பார்ப்பதன் மூலமாக மட்டுமே முத்துப்பிள்ளை கர்ப்பத்தை கண்டறிய முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்று தெரிந்தால், அந்த கருவை கலைப்பதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பத்தை கலைத்ததோடு பிரச்சனை முடிந்துவிட்டது என்று நீங்கள் அலட்சியமாக இருந்து விட கூடாது.

டெஸ்ட்

டெஸ்ட்

கரு வெளியேறிய பிறகும் கூட எங்கேயாவது ஓட்டிக் கொண்டிருக்கும் திசுக்களின் முலமாக அது கேன்சராக மாறக் கூடிய வாய்ப்பு 2 சதவீதம் உள்ளது. எனவே ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், பீட்டா ஹெச்.சி.ஜி என்கிற ஹார்மோன் டெஸ்ட் செய்து, முத்துப்பிள்ளை கர்ப்பத்தின் திசுக்கள் ஏதேனும் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அது ரத்தத்தில் தெரிய வரும். திசுக்கள் இல்லாமல் சுத்தமாகி விட்டால், நெகட்டிவ் எனக் காட்டும்.

மீண்டும் கர்ப்பம்?

மீண்டும் கர்ப்பம்?

சுமார் ஒரு வருடத்துக்கு இதைப் பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம், இரண்டு வருடங்கள் கழித்து பிறகு மறுபடி கருத்தரிக்கலாம். கருக்கலைப்புக்குப் பிறகு அது புற்றுநோயாக மாறாமல் தவிர்க்க பிரத்யேகமாக இருக்கும் ஊசி போட்டுக் கொள்ளலாம்.

மீண்டும் இது போல் ஆகுமா?

மீண்டும் இது போல் ஆகுமா?

ஒரு முறை முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட்டுவிட்டால் மீண்டும் இது போன்று முத்துப்பிள்ளை கர்ப்பம் உண்டாக 2 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது.

யாருக்கு எல்லாம் வரலாம்?

யாருக்கு எல்லாம் வரலாம்?

இந்த முத்துப்பிள்ளை கர்ப்பம் மிகவும் இளம் வயதில் கர்ப்பமாகும் பெண்களுக்கும். மிக தாமதமாக கர்ப்பமாகும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் குறைபாடு உள்ளவர்களுக்கும் இத்தகைய கர்ப்பத்துக்கான அபாயம் உண்டு. அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும், இந்தியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகமாக பாதிப்படைகின்றனர் என்று தெரிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms and Treatments of Ectopic pregnancy

Symptoms and Treatments of Ectopic pregnancy
Story first published: Friday, December 29, 2017, 10:00 [IST]