கர்ப்பகாலத்தில் தோன்றும் இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்க வேண்டாம்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான காலம். அதிலும் முதல் முறையாக கர்ப்பமடைந்தவர்கள் சற்று திணறிப்போய்விடுவார்கள். கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் அளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா? அறியாத தகவல்கள்

எனவே கர்ப்பகாலத்தை பற்றிய தெளிவான சிந்தனை ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றின் மேல் அல்லது நடுவில் வலி

வயிற்றின் மேல் அல்லது நடுவில் வலி

அடிவயிற்று வலி மற்றும் வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்படுவது வாந்தி மற்றும் குமட்டல் ஆகிவற்றுடன் தொடர்புடையது. இது நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், உணவு செரிமானமின்மை, புட் பாய்சன் போன்ற பிரச்சனைகளால் உண்டாகலாம். ஆனால் இது சில சமயங்களில், ப்ரீக்ளாம்ப்ஸியா என்று அழைக்கப்படும் கர்ப்பத்தை பாதிக்கும் ஒரு கடுமையான நிலைமையைக் குறிக்கலாம். இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.

அடிவயிற்றில் வலி

அடிவயிற்றில் வலி

அடிவயிற்று வலி சாதாரணமானதாகவும் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் இது நச்சுக்கொடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் முன்கூட்டியே பிரசவமாதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

காய்ச்சல்

காய்ச்சல்

உங்களுக்கு சளித்தொல்லை எதுவும் இல்லாமல், 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கண் பார்வை குறைபாடு

கண் பார்வை குறைபாடு

கண் பார்வை மங்கலாக தெரிவது, பொரிப்பொரியாக தெரிவது என்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் மருத்துவரிடம் இதைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள்.

கைகளில் வீக்கம்

கைகளில் வீக்கம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மூட்டு பகுதி மற்றும் முகங்களில் வீக்கம் உண்டாவது இயல்பு தான். ஆனால் அதுவே வயிற்று வலி மற்றும் கண் பார்வை குறைபாட்டுடன் தொடர்பு இருந்தால் மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டியது அவசியம்.

தலைவலி

தலைவலி

கர்ப்ப காலத்தில் தலைவலி உண்டாவது பொதுவானது தான். ஆனால் அது ப்ரீக்ளாம்ப்ஸியா பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் தலைவலி உண்டாவது பொதுவானது தான். ஆனால் அது ப்ரீக்ளாம்ப்ஸியா பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.

அதிகமான தாகம்

அதிகமான தாகம்

சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் எடுப்பது ஆகியவற்றை நன்றாக கவனிக்க வேண்டும். உங்களது சிறுநீர் மிகவும் அடர்ந்த மஞ்சள் நிறத்திலும், மேலும் உங்களுக்கு அதிகமான தாகம் எடுப்பதாகவும் தோன்றினால் மருத்துவரிடம் இது பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல் யுடிஐ தொற்றால் உண்டாகிறது. இதற்கு நீங்கள் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

வாந்தி

வாந்தி

வாந்தி என்பது கர்ப்பகாலத்தில் வழக்கமாக ஏற்படுவது தான். ஆனால் இது ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இருந்தால், உங்களது ஆற்றலை இது குறைக்கும். உங்களுக்கு தொடர்ந்து அதிக முறை வாந்தி இருந்தால் இதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை இது ப்ரீக்ளாம்ப்ஸியாவால் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms That Shouldn’t Be Ignored During Pregnancy

Here are the Symptoms That Shouldn’t Be Ignored During Pregnancy
Story first published: Wednesday, June 14, 2017, 18:00 [IST]