அலுவலகம் செல்லும் பெண்களுக்கான தாய்ப்பால் சேமிப்பு வழிமுறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை பிறந்து மூன்று மாதமோ அல்லது ஆறு மாதங்களோ கழித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் குழந்தைக்கு தேவையான பாலை எடுத்து வைப்பதும் உண்டு. தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தம் :

சுத்தம் :

தாய்ப்பால் சிறிய கண்டய்னரில் எடுப்பதற்கு முன்னதாக கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதே போல பால் சேமிக்கும் கண்டய்னரும் சுத்தமாக இருக்க வேண்டும். சாதாரண ப்ளாஸ்டிக் பாட்டிலில் சேமிப்பதை தவிர்க்கவும்.

லேபிள் :

லேபிள் :

குழந்தையை டே கேரில் விடுபவராக இருந்தால் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் பாலில் உங்கள் குழந்தையின் பெயர் அன்றைய தேதி எழுதிக் கொடுக்கவும்.

பழையதும் புதியதும் :

பழையதும் புதியதும் :

நீங்கள் எடுத்துக் கொடுத்தப்பால் சிறிதளவு மீதம் இருந்தால் அதிலேயே ஃப்ரஷான பாலை மீண்டும் சேர்க்கக்கூடாது. அதே போல ஏற்கனவே பால் எடுத்துக் கொடுத்த கண்டய்னரில் சுத்தம் செய்யாமல் மீண்டும் அதிலேயே பால் எடுத்துக் கொடுக்கக்கூடாது.

ஓவன் :

ஓவன் :

பாலை சூடுபடுத்த ஓவனை பயன்படுத்தக்கூடாது? ஏனென்றால் ஓவனில் ஒரே மாதிரியான சூடு இருக்காது. மேலே அதிக சூடாகவும் கீழே குறைவான சூடாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கும் டெம்ப்பரேச்சரை குழந்தை குடிக்கும் போது அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.

அதே போல ஓவனில் அதிகப்படியான டெம்ப்பரேச்சர் இருக்கும். இது, பாலின் சத்துக்கள் ஆவியாகி வீணாவதற்கு காரணமாகிவிடும்.

சுடுபடுத்தும் முறை :

சுடுபடுத்தும் முறை :

தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது. டபுள் பாய்லிங் முறைப்படி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் தாய்ப்பால் கண்டய்னரை வைத்து சூடுபடுத்தலாம். அதிக சூடாக்குவதோ அல்லது வேகமாக குலுக்குவதோ கூடாது.

கண்டய்னர் :

கண்டய்னர் :

கண்ணாடி குடுவையில் தாய்ப்பாலை சேமிப்பது ஆரோக்கியமானது. அல்லது தாய்ப்பாலை சேமிப்பதற்க்கென்றே சந்தையில் கிடைக்கும் மில்க் பேக் பயன்படுத்தலாம்.

தாய்ப்பால் நிரப்பும் போது கண்டய்னர் முழுவதும் வருமாறு நிரப்பக்கூடாது. மூன்று இன்ச் வரை இடைவேளி இருக்க வேண்டும்.

டிஸ்போஸிபிள் :

டிஸ்போஸிபிள் :

தினமும் கொடுக்க வேண்டும் என்பதற்காக சுத்தம் செய்யும் வேலை குறைவு என்று டிஸ்போஸிபிள் பாட்டிலில் தாய்ப்பால் எடுத்துக் கொடுக்ககூடாது. அதன் வாழ்நாள் குறைவு என்பதுடன் தாய்ப்பாலில் ப்ளாஸ்டிக் சேர்வதற்கான வாய்ப்புண்டு.

பிரிட்ஜ் :

பிரிட்ஜ் :

தாய்ப்பாலை பிரிட்ஜில் சேமித்து வைக்கும் போது ப்ரீசரில் நடுவில் வைப்பதையே வழக்கமாக கொள்ளுங்கள். பிரிட்ஜின் ஓரங்களில் அல்லது கீழே வைப்பதால் ஒரே மாதிரியான குளிர் பரவாது.

இரண்டாம் முறை :

இரண்டாம் முறை :

24 மணி நேரம் வரை தாய்ப்பாலை பதப்படுத்தி பயன்படுத்தலாம். வெளியில் எடுத்து சூடுப்படுத்திய பின்னர் பயன்படுத்தலாம். இரண்டாம் முறை மூன்றாம் முறை என சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Guidance for preserving breast milk

Guidance for preserving breast milk
Story first published: Monday, August 7, 2017, 17:19 [IST]
Subscribe Newsletter