கர்ப்பிணி பெண்கள் இதை பருகினால் என்னவாகும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கர்ப்பகாலத்தில் பெண்களது உடல் வறட்சியடையாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் அவசியமாக பொதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். சுத்தமான பில்டர் செய்யப்பட்ட நீரை குடிப்பது மிகச்சிறந்த ஒரு யோசனையாக இருக்கும். ஆனாலும் இனிப்பான இளநீரை குடிப்பது இன்னும் சிறந்த யோசனையாக இருக்கும்.

drinking coconut water during pregnancy

உண்மையில் கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் இளநீரை தினமும் பருகுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் கேன்களில் அடைக்கபட்ட இளநீரை பருகுவதை தவிர்ப்பது நல்லது. மரத்திலிருந்து கிடைக்கும் பிரஷ் ஆன இளநீரை குடிப்பது மிகச்சிறப்பு. இதில் கெமிக்கல்கள் இருக்காது எனவே இது உங்களுக்கும் உங்களது குழந்தைக்கும் நன்மையை விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதில் உள்ள சத்துக்கள் :

இதில் உள்ள சத்துக்கள் :

இதில் குளோரைடு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உடலுக்கு தேவையான அளவு சர்க்கரை மற்றும் புரோட்டின் உள்ளது. கூடுதலாக இதில் நார்ச்சத்து, மங்கனீசு, கால்சியம், விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

1. வயிற்றுப்போக்கு

1. வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு என்பது கர்ப்பகாலத்தில் வரும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது உடலில் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாவதாலும், இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதாலும் உண்டாகிறது. இளநீரில் உள்ள நார்ச்சத்துகள் கர்ப்பகாலத்தில் உண்டாகும் வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுகிறது. இது குடல் பாதையை சுத்தம் செய்து சரியாக செயல்பட உதவுகிறது.

2. நெஞ்செரிச்சல்

2. நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் கர்ப்ப காலத்தில் வரும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் கர்ப்பப்பை விரிவதால் வயிற்றில் ஏற்படும் அழுத்தம் போன்றவற்றால் உண்டாகிறது.

நெஞ்செரிச்சலுக்கான மாத்திரைகளை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது பரிந்துரை செய்யப்படுவதில்லை. இளநீர் அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதால் நெஞ்செரிச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது.

3. சோர்வு

3. சோர்வு

கர்ப்பகாலத்தில் உண்டாகும் சோர்வை போக்கு உங்களை சுறுசுறுப்புடன் இயங்க வைக்க இளநீர் பயன்படுகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது.

4. உடல் வறட்சி

4. உடல் வறட்சி

காலை நேர காய்ச்சல், வாந்தி போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பானது தான், ஆனாலும் இது உடலில் வறட்சியை ஏற்படுத்திவிடுகிறது. நீங்கள் இளநீர் பருகுவதன் மூலம் உடல் வறட்சியடைவதை தடுக்கலாம். கர்ப்பகாலத்தில் இளநீர் பருகுவதால், பிரசவத்திற்கு பிறகு வரும் தழும்புகளை விரைவாக மறைய செய்யலாம். இது சருமத்திற்கும் சிறந்தது.

5. பொட்டாசியம்

5. பொட்டாசியம்

இளநீரில் இருக்கும் முக்கிய பொருள் பொட்டாசியம் ஆகும். இது கால்களில் வரும் வெடிப்புகளில் இருந்து விடுபட உதவுகிறது. மேலும் இரத்த அழுத்த அளவை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

drinking coconut water during pregnancy

drinking coconut water during pregnancy
Story first published: Thursday, October 5, 2017, 16:41 [IST]