கர்ப்பிணி பெண்ணின் வயிற்றின் அளவிற்கும், குழந்தையின் அளவுக்கும் தொடர்பு இல்லை! 7 காரணங்கள்

Written By:
Subscribe to Boldsky

கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் வயிற்றின் அளவிற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. வயிறு சிறிதாக இருப்பவர்களுக்கு கூட ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். வயிற்றின் அளவை வைத்து குழந்தையின் அளவை கணக்கிட முடியாது என்பதற்கான 7 காரணங்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரம்

உயரம்

நீங்கள் உயரமான பெண்ணாக இருந்தால் உங்களது வயிற்றின் உயரம் அதிகமாக இருக்கும். எனவே குழந்தை மேல் நோக்கி வளரும். இதனால் வயிறு பெரிதாக தெரியாது.

நீங்கள் குட்டையானவர்களாக இருந்தால், உங்களது வயிற்றின் அளவு சிறிதாக இருக்கும். எனவே உங்களது குழந்தை வெளிப்புறம் நோக்கி வளரும் இதனால் உங்களது வயிறு பெரிதாக தெரியும்.

முதல் கர்ப்பம்

முதல் கர்ப்பம்

முதல் கர்ப்பத்தின் போது வயிற்றில் சதைகள் அதிகமாக இருப்பது இல்லை. எனவே உங்களது குழந்தையை சதைகள் இறுக பிடித்துக்கொள்கின்றன. இதனால் குழந்தை வெளிப்புறமாக நோக்கி வளருவது இல்லை. எனவே உங்களது குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட உங்களது வயிறு சிறிதாக தான் காணப்படும்.

குழந்தையின் நிலை

குழந்தையின் நிலை

கர்ப்பப்பையிலேயே குழந்தை மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும். இதனால் குழந்தையின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். குழந்தை எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொருத்து தாயின் வயிற்றின் அளவு மாறுபடும். இரண்டாவது பருவ காலத்தில் குழந்தை தனது நிலையை அதிகமாக மாற்றிக்கொள்ளும். பிரசவ காலம் வரும் போது குழந்தையின் நிலை கீழ் நோக்கி இருக்கும்.

கர்ப்ப கால மாற்றம்

கர்ப்ப கால மாற்றம்

கர்ப்பமாக இருக்கும் போது நச்சுக்கொடி, தண்டு, திரவம் போன்றவை உங்களது உடலின் ஏதாவது ஒரு இடத்தில் பொருந்த வேண்டும். அப்போது உங்களது குடல் உங்களது கர்ப்பப்பைக்கு அருகில் சென்று விட்டால் உங்களது வயிறு பெரிதாக தெரியும்.

முந்தைய பிரசவம்

முந்தைய பிரசவம்

உங்களது முந்தைய பிரசவத்தின் போது ஏற்பட்ட தழும்புகள், வயிற்றில் சேர்ந்த கொழுப்புகள் ஆகியவை உங்களது வயிற்றை பெரிதாக காட்டும். வயிறு பெரிதாக தோன்றுவதால் வயிற்றில் உள்ள குழந்தை அதிக எடையுடன் இருக்கும் என அர்த்தம் இல்லை

திரவத்தின் அளவு

திரவத்தின் அளவு

உங்கள் குழந்தையை சுற்றியுள்ள திரவ அளவை பொருத்து வயிற்றின் அளவு மாறுபடும். முதல் 20 வாரங்களில், அமினோடிக் திரவத்தின் பெரும்பகுதி உங்கள் சொந்த உடல் திரவங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

பின்னர் கர்ப்பத்தில், உங்கள் குழந்தை அதிக அளவு அம்மோனிக் திரவத்தை உற்பத்தி செய்கிறது, முக்கியமாக நுரையீரல் சுரப்பு மற்றும் சிறுநீரகம் வெளிப்படுத்தும் திரவங்கள் இதில் அடங்கும். எனவே உங்களது வயிற்றில் எவ்வளவு திரவம் உள்ளது என்பதை பொருத்து உங்களது வயிற்றின் அமைப்பு வேறுபடும்.

குழந்தையின் அளவு

குழந்தையின் அளவு

வயிற்றின் வளரும் குழந்தையின் அளவு பெற்றோர்கள் மற்றும் ஜீன்களை பொருத்து குழந்தையின் அளவு வேறுபடும். குழந்தை அளவில் பெரியதாக இருந்தாலும் கூட சிலருக்கு வயிறு சிறிதாக தான் காணப்படும். எனவே வயிற்றின் அளவை வைத்து யாராலும் குழந்தையின் அளவை கணக்கிட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Belly Size Does not Always Equate To Baby Size

Belly Size Does not Always Equate To Baby Size
Story first published: Friday, August 11, 2017, 18:30 [IST]