For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகாலத்தில் பெண்கள் செய்யக் கூடாத வீட்டு வேலைகள்...!

இங்கே நீங்கள் கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

கர்ப்பகாலத்தில் வேலைகளை செய்வது மிகவும் நல்லது என்று நினைத்து சில கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

கர்ப்ப காலத்தில் வேலை செய்வது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்றாலும், ஒரு சில வேலைகளை செய்யாமல் இருப்பது சிறந்தது.

புத்திசாலியான மற்றும் வெள்ளையான குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் இந்த வேலைகளை கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் வேலையை கெமிக்கல்களை பயன்படுத்தி செய்ய வேண்டாம். நீங்கள் வீட்டை துடைத்து சுத்தமாக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்டுகள், சோப் ஆயில்கள் மற்றும் க்ளீனிங் ஏஜென்டுகள் போன்றவை கர்ப்ப காலத்தில் சென்சிடிவ்வாக இருக்கும் உங்களது ஸ்கின்னில் அலர்ஜியை உண்டாக்கும்.

#2

#2

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் அதிகமாக வளைவது ஆபத்தை உண்டாக்கும். வீடு துடைக்கும் வேலையை செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

#3

#3

கர்ப்ப காலத்தில் உங்களது மூட்டுகள் மற்றும் எலும்புகள் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே நீங்கள் மிக அதிகமாக உங்களது உடலை வருத்திக்கொள்ள கூடாது. நீங்கள் வீட்டை சுத்தம் செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், மாப்களை பயன்படுத்துவது சிறந்தது.

#4

#4

நீங்கள் வீட்டில் பூனை வளர்த்துபவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அதை குளிக்க வைக்க வேண்டாம்.

#5

#5

குளியறை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த வேலைகளை செய்ய வீட்டில் உள்ளவர்களின் உதவியை நாடலாம்.

#6

#6

துணி துவைப்பதும் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாத வேலைகளில் ஒன்றாகும். நீண்ட நேரம் குனிந்து நிறைய துணிகளை துவைப்பது உங்கள் இடுப்புக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். துணி துவைக்கும் இடங்களில் உள்ள சோப்பு நுரைகளால் நீங்கள் கீழே விழக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் என்பதால் இது போன்ற வேலைகளில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

#7

#7

கனமான பொருட்களை தூக்க வேண்டிய வேலைகளை தவிர்க்க வேண்டும். இது உங்களது முதுகு பகுதிக்கு சிறந்தது அல்ல. ஏணிகளில் ஏறுவது போன்ற வேலைகளை செய்வதும் கர்ப்ப காலத்தில் கட்டாயமாக கூடாது.

ஒருவேளை இது போன்ற பாதுகாப்பற்ற வேலைகளை செய்ய நேர்ந்தால், நீங்கள் அவசியம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid These Domestic Tasks During Pregnancy

Avoid These Domestic Tasks During Pregnancy
Desktop Bottom Promotion