For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான காரணங்கள்

By Ashok CR
|

கர்ப்பம் தரித்து ஒரு பிள்ளைச் செல்வத்தை பெற்றெடுப்பது தான் ஒரு பெண்ணுடைய மிகப்பெரிய கனவாக இருக்கும். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் அல்ல. பல கஷ்டங்களையும் இடர்பாடுகளையும் கடந்து தான் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதுவும் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் கேட்கவே வேண்டாம். பொதுவாக இந்த நேரத்தில் தான் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கருச்சிதைவு போன்ற ஆபத்துக்கள் நடப்படும் பெரும்பாலும் இக்காலத்தில் தான்.

கருவுற்ற முட்டை தனக்கு தானே கர்ப்பப்பை சுவற்றில் பதிந்து கொள்ளும் போது, கர்ப்பமான ஆரம்ப காலத்தில் சிறிதளவு இரத்த கசிவு ஏற்படும். அது இயல்பான ஒன்றே. இந்த கசிவு மிகவும் வெளிறி போய் இருக்கும். அதே போல் அதே சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் இரத்த கசிவு ஏற்பட்டால் அது பிரச்சனையாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட அதனை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 'மறைந்திருக்கும் பிரச்னையை குறிக்கும் விதமாக கூட இருக்கலாம் இந்த பெண்ணுறுப்பின் இரத்த கசிவு. இது உங்கள் கர்ப்பத்திற்க்கே கூட ஆபாத்தாய் போய் முடியலாம்.', என குர்கோனில் உள்ள பராஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் பூஜா மெஹ்டா கூறியுள்ளார். உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் உள்ளாடைகளில் இரத்த கரைகள் இல்லையென்றால் அதுவும் கூட கர்ப்பத்திற்கான அறிகுறியே.

சரி, கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்த கசிவை பற்றி பார்க்கலாமா?

Reasons For Spotting During The First Trimester

1. ஹார்மோன் குறைபாடு:
கர்ப்பமாக இருக்கும் போது புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் hCG (ஹ்யூமன் கோரியோனிக் கோனாடோட்ரோபின்) என்ற இரண்டு ஹார்மோன்கள் தான் உங்கள் உடலை ஆட்சி செய்கிறது. இந்த ஹார்மோன்களில் குறைபாடு இருந்தால் இரத்த கசிவு ஏற்படலாம்.

2. உடல் ரீதியான பயிற்சிகள்:
பளுவான பொருட்களை தூக்குதல், உடற்பயிற்சி அல்லது உழைப்பை செலுத்தும் போது கர்ப்பப்பையில் உள்ள சிசு வெளியேற்றப்படலாம். இதனால் இரத்த கசிவு ஏற்படும். அதனால் தான் கர்ப்பமான பெண்கள் கடினமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என டாக்டர் மெஹ்டா அறிவுறுத்துகிறார்.

3. கருப்பை வாயின் மீது அழுத்தம்:
கர்ப்பமாக இருக்கும் போது கருப்பை வாய் பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டத்தில் எழுச்சி இருக்கும். இந்நேரத்தில் இதுப்பு பரிசோதனை அல்லது உடலுறவு கொள்ளுதல் போன்றவைகள் இரத்த குழாய்களை சீர்கெட செய்யும். இதனால் இரத்த கசிவு உண்டாகும். இவ்வகையான இரத்த கசிவு ஆபத்தானது அல்ல. குழந்தைக்கும் சிசுவிற்கும் கூட எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும் பாதுகாப்பாக இருக்க உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

4. தொற்றுக்கள்:
பெண்ணுறுப்பு பகுதி அல்லது கர்ப்பப்பை பகுதியில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் இரத்த கசிவு உண்டாகலாம். இரத்த கசிவுடன் அரிப்பு மற்றும் அசௌகரியம் இருந்தால் உடனே உங்கள் முத்துவரியா சந்தித்து, மேலும் சிக்கல்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. இடம் பெயர்ந்த கர்ப்பம்:
சில நேரங்களில் கருவுற்ற முட்டை கர்ப்ப வாய்க்கு வெளியே (பொதுவாக கருமுட்டை குழாய்களில்) சென்று அமர்ந்து கொள்ளும். கரு வளர வளர கருமுட்டை குழாய் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரத்த கசிவு ஏற்படலாம். இதனால் தாயின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். உடனடியான அறுவை சிகிச்சை மூலமாக தான் மேலும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

English summary

Reasons For Spotting During The First Trimester

here you can know about reasons for spotting during the first trimester
Desktop Bottom Promotion