'அன்னாசி' கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழம்!

Posted By:
Subscribe to Boldsky

அன்னாசி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை மற்றும் அதன் மணம் தான். இந்த அன்னாசியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அதிலும் அன்னாசிப்பழமானது பெண்களுக்கு இறுதி மாதவிடாயின் போது மிகவும் நல்லது.

மேலும் அன்னாசிப்பழமானது நீர்ச்சத்து அதிகம் கொண்டதால், இது கோடையில் அதிகம் கிடைக்கிறது. என்ன தான் இதில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தாலும், இதனை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

'Pineapple' A Dangerous Fruit For Pregnant Women!

சரி, இப்போது அன்னாசிப்பழம் ஏன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமற்றது என்று பார்ப்போம்.

* அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழம் தொண்டையில் உள்ள புண்களை குணமாக்குவதோடு, வயிற்றில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலும் அழித்துவிடும். ஆனால் இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால், அதில் நிறைந்துள்ள அசிடிக் அமிலமானது சிசுவிற்கு அழிவை ஏற்படுத்தும்.

* கர்ப்பிணி பெண்கள் அன்னாசியை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உட்கொண்டால், அது கருப்பையை சுருக்கி, சிசுவின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தி ஏற்படுத்தும். அன்னாசியைப் போல் பப்பாளியும் கருப்பையை சுருக்கி சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். என்ன தான் பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்தாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானதே ஆகும்.

* ஆய்வு ஒன்றில் அன்னாசியில் உள்ள புரொமிலியன், கருப்பை வாயை மென்மையாக்கி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* சில கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப் பழத்தால் எவ்வித ஆபத்தும் நேர்ந்ததில்லை. இருப்பினும் சில மருத்துவர்கள், அன்னாசிப்பழமானது கர்ப்பிணிகளின் பிரசவ வலியைத் தூண்டும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருந்தாலும், கர்ப்பிணிகள் இதனை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ளுங்கள்.

English summary

'Pineapple' A Dangerous Fruit For Pregnant Women!

The benefits of pineapple is really not good during pregnancy. It will cause a lot of health hazards for pregnant women! So beware!
Story first published: Monday, January 5, 2015, 17:51 [IST]