For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் மீன் சாப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

By Ashok CR
|

மீன் என்பது ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரச்சத்துக்களின் வளமையான மூலமாகும். கர்ப்பமாக இருக்கும் போது அவைகள் உங்களுக்கும் உங்களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் பல நன்மைகளை அளிக்கும். ஆனால் வயிற்றில் உள்ள உங்கள் சிசுவிற்கு எந்த ஒரு பாதிப்புள் ஏற்படாமல் இருக்க, கடல் உணவுகளை உண்ணும் போது நீங்கள் கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் சில மீன் வகைகளில், குறிப்பாக பெரிய அளவிலான கடல்வாழ் மீன்களில் பாதரசத்தின் தடயங்கள் இருக்கும். வயிற்றில் உள்ள உங்கள் சிசுவின் வளர்ச்சிக்கும் வளர்ச்சி அமைப்பிற்கும் இது பல ஆபத்துக்களை உண்டு பண்ணலாம்.

பொதுவாக தொழிற்சாலை கழிவுகள் மூலமாக கடல் நீரில் பாதரசம் கலக்கப்படும். இது மெத்தில் மெர்குரியாக மாறி விடும். அசுத்தமாகும் இந்த நீரில் வாழும் மீன்களுக்குள் இந்த ஆபத்தான பொருள் போய் சேரும். அது கடல்வாழ் உயிரினங்களின் தசைகளில் ஒன்றிடும். மீனை நன்றாக சமைத்தாலும் கூட இது அப்படியே தான் இருக்கும். கர்ப்ப காலத்தில் கூடுதல் அளவிலான பாதரசத்தை உட்கொண்டால், சிசுவின் மூளை மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பின் வளர்ச்சியை இது வெகுவாக பாதிக்கும்.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீன்கள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வாரம் ஒரு முறை என மாற்றிக் கொள்ளுங்கள். மீனை முழுவதுமாக தவிர்த்தால் அது முற்றிலும் பாதுகாப்பாக அமையலாம். ஆனால் மீனால் கிடைக்கும் வளமையான புரதச்சத்தும் ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் கிடைக்காமல் போகும். இதுவும் கூட சிசுவின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு சற்று தடையாக இருக்கும்.

அதனால் கர்ப்ப காலத்தில் மீன் உண்ண வேண்டும் என்றால், கீழ்கூறிய விதிமுறைகளை பின்பற்றவும்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்

நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்

நீங்கள் உண்ணும் மீன் பச்சையாக இல்லாமல் நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும். சரியாக சமைக்கப்படாத மீனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஒட்டுண்ணி அல்லது பாக்டீரியா நோய்கள் தாக்கக்கூடும். இது அப்படியே சிசுவிற்கு பரவும். அதனால் எதிர்பாரா விளைவுகள் ஏற்படலாம்.

கடல் மீன்களை தவிர்க்கவும்

கடல் மீன்களை தவிர்க்கவும்

வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன் போன்ற பெரிய கடல் மீன்களை தவிர்க்கவும். மாறாக உள்ளூர் குளத்தில் கிடைக்கும் வஞ்சிரம் மீன், கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ணலாம்.

பதப்படுத்தப்பட்ட மீன்களை தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட மீன்களை தவிர்க்கவும்

டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்க்கவும்.

ஒமேகா-3 நிறைந்த இதர உணவுகள்

ஒமேகா-3 நிறைந்த இதர உணவுகள்

கடைசியாக, ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அடங்கிய மற்ற உணவுகளான ஆளி விதை, தயிர் மற்றும் முட்டைகள் போன்றவைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் மீன் இல்லாமலேயே அவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy Tip – Be Cautious While Eating Fish

Fish can be an excellent source of omega-3 fatty acids and proteins, that can do a great deal of good to you and your baby during your pregnancy.
Story first published: Saturday, September 13, 2014, 18:04 [IST]
Desktop Bottom Promotion