Latest Updates
-
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஏரொபிக்ஸ் செய்வது உகந்தா?
தண்ணீரில் ஏரோபிக்ஸ் செய்வது என்பது மேலோட்டமான நீர் பகுதியில் ஏரொபிகஸ் உடற்பயிற்சி செய்வதாகும். பொதுவாக இதை நீச்சல் குளத்தில் பயிற்சி செய்வார்கள்
அக்குவா ஏரோபிக்ஸ்சில் தண்ணீரில் நின்று கொண்டு பயிற்சி மேற்கொள்ளுவதே ஆகும். இதில் நீச்சல் கிடையாது. பெரும்பாலான கர்ப்பிணிகள் தங்களால் இதை செய்ய முடியுமா என்று சந்தேகப்படுவார்கள்.
உடற்பயிற்சி முக்கியமாக கர்ப்ப காலத்தில் உங்களது ஆரொக்கியத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது. இது உங்கள் அழுத்தத்தை குறைத்து, உடல் வலியிலிருந்து நிவாரணம் கொடுத்து,
மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கி இளைப்பாரச் செய்கிறது. ஆனால் இதை கர்ப்பமாய் உள்ளவர்கள் பயிற்சி செய்யலாமா? இதற்கு பதில் நிச்சயம் செய்யலாம் என்பதே!

தண்ணீரில் ஏரோபிக்ஸ் செய்வது மிகுந்த பாதுகாப்பான உடற்பயிற்சி முறையாக உள்ளது. அக்குவா ஏரோபிக்ஸ்சில் உள்ள அக்குவா சும்பா, தண்ணீர் யோகா, அக்குவா ஜாக் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பயிற்சிகளாகும்.
எளிய உடற்பயிற்சிகளும், தண்ணீரில் செய்யப்படும் ஏரோபிக்ஸ் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு ஏற்றதே ஆகும். அக்குவா ஏரோபிக்ஸ் மிகுந்த பயன் தரும் பய்ற்சியாகும். ஆனால் இதை குறித்து உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஒரு வேளை நீங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் இதை தவிர்ப்பது நல்லது.
அக்குவா ஏரோபிக்ஸ் செய்வதன் பயன்கள்:
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை: அக்குவா ஏரோபிக்ஸ்சில் செய்பவர்கள் எல்லாம் நல்ல நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆகையால் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு நீச்சல் தெரியவில்லை என்று கவலைப்படத் தேவை இல்லை. யாராக இருந்தாலும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.
கீழே விழும் வாய்ப்புகள் குறைவு: எந்த ஒரு உடற்பயிற்சியாக இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் கீழே விழுந்துவிடுவார்கள் என்று பயந்து எதையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு தண்ணீரில் பயிற்சியை மேற்கொள்வதால் நாம் கீழே விழுந்து விடுவோம் என்று கவலைபடத் தேவை இல்லை. ஆகையால் நாம் இதை தைரியமாக செய்யலாம்.
மன அழுத்தத்தை குறைத்தல்: ஏரோபிக்ஸ் செய்வது உடலின் சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தி, எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதனால் நாம் நல்ல இசையை அனுபவிக்க முடியும்.
நல்ல இரத்த ஓட்டம்: அக்குவா ஏரோபிக்ஸ் என்பது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இதய குழாய்களின் செயலை மேம்படுத்துகிறது. ஆகையால் இன்னும் பயம் வேண்டாம். இது மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான பயிற்சி வழியாகும்.
உடல் எடையை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளுதல்: கர்ப்ப காலத்தில் மிகவும் கவத்துடன் இருக்க வேண்டிய காரியம் நமது எடையாகும். அக்குவா ஏரோபிக்ஸ் செய்யும் போது உடல் எடையை நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். அது மட்டுமில்லாமல் இந்த பயிற்சியும் பாதுகாப்பானது தான்.
பிரசவத்தை எளிதாக்கின்றது: அக்குவா ஏரோபிக்ஸ் செய்வது கர்ப்பிணிகளின் தேவைகளை மற்றும் சுரப்பிகளை சம அளவில் வைக்க உதவுகின்றன. இதனால் எளிதாக முறையில் பிரசவிக்க முடிகிறது.
கால்களின் வீக்கங்களுக்கு தடை: நீர் அதிகம் சேருவதால் ஏற்படும் வீக்கத்தை இந்த பயிற்சி மூலம் குறைக்க முடியும். இது இரத்த ஓட்டத்தை சீர் படுத்தி நீர் சேராமல் தடுக்கிறது.
அக்குவா ஏரோபிக்ஸ் செய்வது ஒரு நல்ல காரியமாகும். ஆனால் மிகுந்த சிரமத்துடன் வேலை செய்வதை நிறுத்த வேண்டும். எப்போதும் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் என்ன சொல்லுகின்றாறோ அதை மட்டும் செய்தால் போதும். இந்த பயிற்சியை செய்வதற்கு உங்கள் உடலும் ஆரோக்கியமாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும். ஆகையால் மேற்கூறிய வகையில் இதை எல்லாம் பயிற்சி செய்தால் தான் அழுத்தம் குறைவாகவும், ஓய்வாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications