For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைப்பிடிப்போரின் அருகில் கர்ப்பிணிகள் இருந்தால், அது குழந்தையை எப்படி பாதிக்கிறது?

By Ashok CR
|

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது! அது புகைப்பிடிக்கும் நபருக்கு மட்டுமல்லாது, அவரை சுற்றியுள்ளவர்களையும் சேர்த்து தான். புகை பிடிக்கவில்லை என்றாலும் கூட, புகையிலையில் உள்ள ஆபத்தான வெளிப்பாடுகளின் அருகில் இருந்தாலே போதும், அது பல ஆபத்தான தாக்கத்தை அவர்கள் மீது ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு புகையிலை புகை வெளிப்பாடுகளின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால், சிசுவின் உடல் ஆரோக்கியத்தை அது பல வகைகளில் பாதிக்கும். பேசிவ் ஸ்மோகிங்கால் கருவில் இருக்கும் சிசுவிற்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான தாக்கங்களைப் பற்றி கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கருவறையிலிருந்தே குழந்தைகளுக்கு ஞாபக சக்தி இருக்கிறதாம்! - ஆய்வில் தகவல்

பேசிவ் ஸ்மோகிங்கால் வயிற்றில் இருக்கும் சிசு பாதிப்படைவதற்கு பல ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பல ஆய்வுகள் இதனை முன்மொழிந்துள்ளது; இதனைப் பற்றி மெடிக்கல் ஜெர்னல், பீடியாட்ரிக்ஸ் கூட சமீபத்தில் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சிகரெட் புகையின் தாக்கம், மிகவும் ஆபத்தான மரபியல் ரீதியான பிறழ்வுகளை கூட உண்டாக்கிவிடும். இதனால் பிறக்க போகும் குழந்தை பிறப்பு குறைபாடுகளோடு பிறக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட சில ஆபத்தான தாக்கங்களைப் பற்றி தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

இரட்டை கருவை சுமப்பது பற்றிய சில கட்டுக்கதைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலூனம்

உடலூனம்

பேசிவ் ஸ்மோகிங்கால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏற்பட போகும் மிக முக்கியமான ஆபத்தாக விளங்குவது; அதிகமான வாய்ப்புகளை கொண்ட உடலூனம். சிகரெட்டில் உள்ள தீமையான பொருட்களின் தொடர்ச்சியான வெளிப்பாட்டினால் மரபு ரீதியான பிறழ்வுகளை ஊக்குவிக்கும். இதனால் கால், மூளை போன்ற உறுப்புகளில் ஊனம் ஏற்படலாம்.

பிறப்பு குறைபாடு

பிறப்பு குறைபாடு

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்கள் அருகில் தொடர்ச்சியாக நீங்கள் இருந்து வந்தால், உங்கள் குழந்தைக்கு சிறிய அல்லது பெரிய பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். புகைப்பிடிப்பவர்கள் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருப்பதால், அவர்கள் உடலில் நச்சுத்தன்மை மிக்க ஆபத்தான பொருட்கள் உள்ளேறும். இதனால் பல வகையான பிறழ்வுகளால் குழந்தை பாதிக்கப்படும்.

குழந்தை இறந்து பிறத்தல்

குழந்தை இறந்து பிறத்தல்

பேசிவ் ஸ்மோகிங் மற்றும் குழந்தை இறந்து பிறத்தலுக்கு இடையேயான உறவைப் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருக்கும் கர்ப்பிணி பெண்களில் 23% பேர்களுக்கு குழந்தை இறந்தே பிறக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிறக்கும் போது எடை குறைவு

பிறக்கும் போது எடை குறைவு

குழந்தையின் எடை குறைவிற்கு, தாங்கள் புகைப்பிடிப்பவர்களின் அருகில் அதிக நேரம் இருந்ததும் ஒரு முக்கிய காரணம் என்பதை பல பெண்கள் உணர தவறி விடுகின்றனர். வயிற்றில் குழந்தை ஒருக்கு போது அல்ட்ரா ஸ்கேனில் குழந்தையின் எடை குறைவாக தெரிந்தால், அது சிசு உயிர்வளிப் பற்றாக்குறை (ஃபீடல் ஹைபோக்சியா) மற்றும் நரம்புகள் சுருங்குதல் போன்ற காரணங்களால் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் நஞ்சுக்கொடிக்கு செல்லும் இரத்த அளவு குறைந்து விடும்.

குறைபாடுள்ள உட்புற உறுப்புகள்

குறைபாடுள்ள உட்புற உறுப்புகள்

புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு தங்கள் நஞ்சுக்கொடி வழியாக போதிய இரத்தம் செல்வதில்லை. இதனால் சிசுவின் இதயகுழலிய அமைப்பு, இரையக குடலிய அமைப்பு மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பு ஆகியவைகள் பாதிப்படையும். குழந்தைக்கு ஏற்படும் இயல்பற்ற நரம்பியல் குணாதிசய வளர்ச்சிக்கும், புகைப்பிடிப்பவர்கள் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருந்ததற்கும் நிறைய தொடர்பு உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.

சுவாச கோளாறு

சுவாச கோளாறு

புகைப்பிடிப்பவர்கள் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை; சிசுவிற்கு ஏற்படும் இயல்பற்ற சுவாச வளர்ச்சி. புகைப்பிடிப்பவர்கள் அருகில் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வகை பிறழ்வுகள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடித்து, குணப்படுத்த முடியாத பல சிக்கலான பிறப்பு குறைகளை உண்டாக்கி விடும்.

குறைப்பிரசவம்

குறைப்பிரசவம்

புகைப்பிடிப்பவர்கள் அருகில் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக இருப்பதால் உண்டாகும் மற்றொரு பிரச்சனை தான் குறைப்பிரசவம். இது குழந்தையின் இயல்பான வளர்ச்சியை பாதித்து, வருங்காலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Passive Smoking Affects Your Unborn Baby?

There are many evidences to show that second hand smoking harms your baby. Here are some of the most important harmful effects of passive smoking on unborn baby.
Desktop Bottom Promotion