பிரசவ வலி நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பிரசவம் என்பது பெண்ணாணவள் தன் உயிரையே கொடுத்து அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு அற்புதமான தருணம். வெற்றிகரமான பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பிரசவம் என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. இத்தகைய பிரசவமானது நடைபெறும் போது பெண்கள் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். சாதாரணமாக முதல் பிரசவத்தை சந்திப்போருக்கு பிரசவ வலியானது 6-10 மணிநேரம் இருக்கும்.

ஆனால் சிலருக்கோ 10 மணிநேரத்திற்கும் மேலாக பிரசவ வலியானது இருக்கும். இப்படி அதிக நேரம் நீடிக்கும் போது, பல முயற்சிகளை எடுத்தும் சுகப்பிரசவம் நடைபெறாவிட்டால், மருத்துவர்கள் சிசேரியன் செய்யலாம் என்று சொல்வார்கள். இப்படி பிரசவ வலியானது நீண்ட நேரம் இருப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில் இக்காலத்தில் கர்ப்பிணிகள் அதிகமாக வீட்டு வேலைகளை செய்யாததால், பெண்கள் பிரசவ காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே பிரசவ காலத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டுமானால், கர்ப்பிணிகள் எப்போதும் போல வீட்டு வேலைகளை செய்து கொண்டு, சரியான ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அதே சமயம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சரி, இப்போது பிரசவ வலி நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலவீனமான சுருக்கம்

பலவீனமான சுருக்கம்

கருப்பை சுருக்கமானது பலவீனமாக இருந்தால், பிரசவ வலியானது நீண்ட நேரம் இழுக்கும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் கருப்பையை சுருக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பது

சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பது

சிறுநீர்ப்பையானது நிரம்பியிருந்தால், கருப்பையானது சுருக்கமடைவதில் இடையூறு ஏற்படும். எனவே பிரசவம் நெருங்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்.

தவறான நிலை

தவறான நிலை

தூங்கும் நிலையானது தவறாக இருந்தால், அதாவது எப்போதும் நேராக தூங்கினால், பிரசவமானது தாமதமாகும். எனவே தூங்கும் போது இடதுபுறம் தூங்குவதுடன், அடிக்கடி நடைப்பயிற்சி, ஸ்குவாட் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வர வேண்டும்.

குழந்தையின் தலை மேலே இருப்பது

குழந்தையின் தலை மேலே இருப்பது

பொதுவாக குழந்தையானது ஆரம்ப காலத்தில் நேராக இருக்கும். பிரசவம் நெருங்க நெருங்க, குழந்தை தலைகீழாக கருப்பை வாய்க்கு அருகில் குழந்தையின் தலையானது இருக்கும். ஆனால் சிலருக்கு பிரசவ காலத்தின் போது குழந்தை நேராக இருந்தால், குழந்தை தலைகீழாக வரும் வரை பிரசவ வலியானது நீடிக்கும்.

குறுகிய கருப்பை வாய்

குறுகிய கருப்பை வாய்

சில பெண்களுக்கு கருப்பை வாயானது குறுகிய நிலையில், குழந்தை வெளியே வர முடியாத அளவில் இருக்கும். அந்த நிலையில் பிரசவ வலியானது நீடிப்பதுடன், சிசேரியன் செய்யும் நிலையும் இருக்கும்.

பனிக்குட நீர் வெளியேறாமை

பனிக்குட நீர் வெளியேறாமை

கருப்பையில் உள்ள பனிக்குட நீரானது வெளியேறிவிட்டால், விரைவில் கருப்பையானது சுருங்கி, விரைவில் பிரசவம் நடைபெறும். ஆனால் 3-4 மணிநேரம் பிரசவ வலியை சந்தித்தப் பின்னரும், பனிக்குட நீர் வெளியேறாவிட்டால், நீண்ட நேரம் பிரசவ வலியை சந்திக்கக்கூடும்.

குழந்தை திரும்பியிருப்பது

குழந்தை திரும்பியிருப்பது

சில நேரங்களில் குழந்தை சரியான நிலையில் இருந்து திரும்பிவிடும். அப்படி குழந்தை திரும்பியிருந்தால், பிரசவம் கஷ்டமானதாக இருப்பதுடன், தாமதமாகவும் நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Vital Causes of Slow Labour

Slow labour pains can be frustrating and critical. The causes of slow labour are often not discovered. If you have signs of slow labour, read on..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter