For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலங்களில் உங்கள் மனைவி பதற்றமாக இருக்கிறாரா? இதைப் படிங்க முதல்ல...

By Super
|

வாழ்க்கை பயணத்தின் மிகவும் அழகிய பரிணாமங்களில் ஒன்றாக இருப்பது ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது தான். பெண்ணுக்கு தான் குழந்தையை சுமக்கும் முழுமையாக வலி இருக்கும் என்றாலும், குழந்தையை பெற்றெடுக்கும் வரையிலும் ஆண்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. உங்களுடைய மனைவி குழந்தையை வயிற்றுக்குள் தாங்கி இருக்கும் கர்ப்ப காலத்தில், அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது ஒரு கணவராக இருந்து நீங்கள் செய்ய வேண்டிய கடமையாகும். உங்களுடைய ஆதரவும், அரவணைப்பும் தாயாகப் போகும் மனைவிக்கு மனரீதியான பலமாக இருக்கும். ஏனெனில், உங்களுடைய மனைவி குழந்தையை சுமக்கும் நாட்களில், உங்களிடமிருந்து முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பார்.

கர்ப்பமாக இருக்கும் மனைவிகள் எப்பொழுதும் ஒரு சுமையுடனேயே இருப்பார்கள். அவர்கள் தனியாக இந்த சுமையை சுமப்பதை எண்ணி விரக்தியாகவும் இருப்பார்கள். அந்த விரக்தியை அன்பை விட வெறுப்பைக் கொண்டு அவர்கள் காட்டுவது அடிக்கடி நடக்கும். இந்நேரங்களில், நீங்கள் சற்றே பொறுமையாக இருப்பதும், சூழலை அன்பு மற்றும் பரிவுடன் எதிர்கொள்வதும் அவசியம். ஊங்கள் மனைவியிடன், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுவதால், அவளுடைய எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும் கர்ப்ப காலங்களை, எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். பெரிதாக உள்ள வயிற்றைத் தூக்கிக் கொண்டு செல்லும் அவருக்கு, உங்கள் உடல் ரீதியான ஆதரவும் தேவைப்படும்.

கர்ப்ப காலத்தில் கோபப்படும் மனைவிகளை சமாளிக்க சில வழிகள் உள்ளன. திடீர் திடீரென்று ஏற்படும் மனநிலை மாற்றங்களையும், காரணமற்ற கோபங்களையும் சந்திக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். ஒரு கணவராக, இருந்து 9-ம் மாதம் வரையிலும் தனியாக அவள் சுமக்கும் சுமைய சற்றே பொறுத்திருப்பதன் மூலம் குறைக்க வேண்டியது உங்கள் பணியாக இருக்கும். பொறுமையோடிருங்கள் மற்றும் மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தின் பல்வேறு சூழல்களிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் கோபமாக இருக்கும் மனைவிகளை அமைதிப்படுத்தும் சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆதரவும், பரிவும்

ஆதரவும், பரிவும்

ஆதரவாக இருப்பதற்கும், பரிவுடன் இருப்பதற்கும் எல்லை ஒன்றும் கிடையாது. சில நேரங்களில் அவள் காரணமில்லாமல் கோபப்படலாம். எனினும், நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்வதும் மற்றும் அந்த 9 மாதங்களுக்கும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்வதும் முக்கியமான விஷயமாகும்.

செல்லமே செல்லமே!

செல்லமே செல்லமே!

கோபமாக இருக்கும் உங்கள் மனைவியை எதிர்கொள்ள இருக்கும் சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் மனைவியை கொஞ்சுவது தான். அவ்வப்போது அவளுக்கு சில பரிசுகளை வாங்கி கொடுங்கள். அதன் அளவு அல்லது விலையைப் பற்றி யோசிக்க வேண்டாம், இந்த பரிசுகள் நீங்கள் எப்பொழுதும் அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவளுக்கு உணர்த்தும். வேலைக்கு போய்விட்டு வரும் போது பூ, சாக்லெட், ஸ்வீட் அல்லது காது வளையம் போன்று அவரைக் கவரும் பொருட்களை சஸ்பென்ஸாக வாங்கி கொடுங்கள்.

விரும்பியதை கொடுக்கவும்

விரும்பியதை கொடுக்கவும்

ஆம்! அவளுக்கு எது பிடிக்கிறதோ அதனை கொடுங்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, நீங்களே எதிர்பார்க்காத வித்தியாசமான ஆசைகள் வரும். இரவு 2 மணிக்கு அவள் சாக்லெட் கேட்டால், வாங்கி கொடுங்கள்! நீங்கள் முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது, மனைவி சைனீஸ் நூடுல்ஸ் கேட்டால், 'நோ' சொல்லாதீர்கள். வேண்டுமானால் சிறிது நேரம் கழித்து கண்டிப்பாக வாங்கி கொடுக்கவும்.

வசதியான கவனிப்பு

வசதியான கவனிப்பு

அவள் 9 மாதங்களுக்கு குழந்தையை சுமக்கிறாள் மற்றும் அதனால் தனியாக குழந்தையை சுமக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். எனவே கர்ப்ப காலத்தில் அவளை சுமை தெரியாத வண்ணம், வசதியாக மற்றும் ஓய்வாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அவளை டின்னருக்கோ, பூங்காவில் நடப்பதற்கோ, வெளியில் உள்ள உணவகங்களுக்கோ அழைத்துச் சென்று அவள் விரும்பும் தின்பண்டத்தை வாங்கி கொடுங்கள். அவளுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்திருப்பதை உறுதி செய்யுங்கள்.

தேவை உறுதி

தேவை உறுதி

குழந்தை பிறக்கும் போது ஏற்படும் வலி பற்றி யோசித்துக் கொண்டு உங்கள் மனைவி பதட்டமாகவே இருப்பார். நீங்கள் ஒவ்வொரு முறையும், இவையெல்லாம் சரியாகி விடும், குணமடைந்து விடும் என்று இறுதி வரையிலும் அவளிடம் சொல்ல வேண்டும். நீங்கள் மனவுறுதி படைத்தவராக இருந்தால், உங்கள் மனைவியின் பிரசவ அறைக்குள் நீங்கள் இருப்பீர்கள் என்றும், பிரசவத்தின் போது அவளுடைய கைகளை ஆதரவாக பிடித்திருப்பீர்கள் என்றும் உறுதியாக சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Looking After A Moody Pregnant Wife

There are several ways to deal with moody wives when they are pregnant. Most importantly you have to be mentally prepared for sudden and erratic mood changes to unreasonable demand for your support and care. Be patient and most importantly be tolerant in dealing with various situations during her pregnancy. Here are several ways you can deal with moody pregnant wife.
Story first published: Thursday, November 14, 2013, 16:45 [IST]
Desktop Bottom Promotion