For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகப்பிரசவம் நடைபெற வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பயம் என்னவென்றால், சிசேரியன் பிரசவத்தைப் பற்றி தான். இத்தகைய சிசேரியன் பிரசவம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் கர்ப்பமாக இருக்கும் போதே சரியான உணவு முறை மற்றும் போதிய உடற்பயிற்சியை மேற்கொள்ளாதிருத்தலே ஆகும். ஆம், உண்மையிலேயே சரியான உணவுப்பழக்கவழக்கத்துடன், அளவான உடற்பயிற்சியை மேற்கொண்டால், வயிற்றில் உள்ள குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, சுகப்பிரசவத்தையும் மேற்கொள்ளலாம்.

அதிலும் முதன்முறையாக கருத்தரித்த பெண்கள், மருத்துவரை அணுகி எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று கேட்டு அதற்கேற்றாற் போல், உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சில உணவுகள் உடலின் எடையை அதிகரித்துவிடும். ஆகவே சுகப்பிரசவம் நடைபெற வேண்டுமானால், ஒருசில செயல்களை சரியாக பின்பற்ற வேண்டும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்தை சந்திக்க ஒருசில செயல்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், சிசேரியன் பிரசவத்தில் இருந்து தப்பித்து, சுகப்பிரசவத்தை மேற்கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட்

கருத்தரித்திருப்பது உறுதி ஆனப் பின்னர், பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் தான் சரியான உணவுகளை உட்கொள்வது. அதிலும் பழங்களில் ஜிங்க் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது.

அரை மணிநேரம் நடக்கவும்

அரை மணிநேரம் நடக்கவும்

நல்ல ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்ளும் போது, தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், சிசேரியன் பிரசவத்தில் இருந்து தப்பிக்கலாம்.

நீண்ட நேரம் நிற்க வேண்டாம்

நீண்ட நேரம் நிற்க வேண்டாம்

கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நின்றால், கருப்பையானது ஈர்ப்பு விசையினால், கீழ்நோக்கி இழுக்கப்படும். இதனால் சுகப்பிரசவம் நடைபெறுவது தடைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

யோகா

யோகா

யோகாவை தினமும் மேற்கொண்டு வந்தால், சிசேரியன் பிரசவத்தில் இருந்து விடுபடலாம். மேலும் யோகா மேற்கொள்ளும் போது, உடலின் சுவாச உறுப்பு மற்றும் இதயத் துடிப்பு சீராக இருப்பதால், உடலானது ரிலாக்ஸாக இருக்கும். மேலும் இது சுகப்பிரசவம் நடைபெற உதவியாக இருக்கும்.

பிரசவ வகுப்புக்கள்

பிரசவ வகுப்புக்கள்

தற்போது கர்ப்பிணிகளுக்காக நிறைய வகுப்புக்கள் உள்ளன. இந்த வகுப்புக்களில் கலந்து கொண்டால், பிரசவத்திற்கு முன் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று விரிவாக கூறுவார்கள். இதனால், அதனைப் பின்பற்றும் போது, சுகப்பிரசவத்தை சந்திக்கலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் தண்ணீரை அதிகம் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்த்து, குழந்தை வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

சுறுசுறுப்புடன் இருக்கவும்

சுறுசுறுப்புடன் இருக்கவும்

சில கர்ப்பிணிகள் நன்கு ஓய்வு எடுத்தால், சுகப்பிரசவம் நடைபெறும் என்று நினைத்து, எப்போதும் ஓய்வு எடுக்கின்றனர். ஆனால் உண்மையில், சுகப்பிரசவம் நடைபெற வேண்டுமானால், நன்கு சுறுசுறுப்புடன் வீட்டில் சிறுசிறு வேலைகளை செய்ய வேண்டும்.

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

சுகப்பிரசவத்திற்கு ஆசைப்பட்டால், முதலில் மன அழுத்தத்தை தவிர்த்து, சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த செயலால் கர்ப்பிணிகள் மட்டுமின்றி, குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

வளையல்களை அணியவும்

வளையல்களை அணியவும்

சொன்னால் நம்பமாட்டீர்கள், கர்ப்பிணிகள் கை நிறைய கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்வதாலும் சுகப்பிரசவத்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். எப்படியெனில், வளையல்களில் இருந்து வெளிவரும் ஓசையானது, இடுப்புத்தசைகள் மற்றும் தசைநார்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, சுகபிரசவத்திற்கு வழிவகுக்குமாம். அதன் காரணமாகவும் வளைகாப்பு நடத்தப்படுகிறதாம்.

கார உணவுகளை சாப்பிடவும்

கார உணவுகளை சாப்பிடவும்

சுகப்பிரசவம் நடைபெற வேண்மென்றால், கார உணவுகளையும் சாப்பிட வேண்டும். அதிலும் அளவாக சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் கார உணவுகளை உட்கொள்ளும் போது, உடலானது சற்று வெதுவெதுப்பாவதால், அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Pregnancy Tips For Normal Delivery

If you want to have a normal delivery, you need to follow certain pregnancy tips. Lets take a look at some of the healthy pregnancy tips for normal delivery.
Story first published: Wednesday, September 11, 2013, 14:23 [IST]
Desktop Bottom Promotion