For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும். மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும்.

சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Causes Of Abdominal Pain During Pregnancy
* கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப் போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

* கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

* சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

* கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 ஆவது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும்.

இவையே கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான காரணங்கள். வேறு ஏதாவது காரணங்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Causes Of Abdominal Pain During Pregnancy | கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

You have different kinds abdominal pains at different stages of pregnancy. Some amount of pains in the early stages of pregnancy is common. But once you enter the second trimester, severe pains are rare. Here are some of causes of abdominal pains during pregnancy that you must be aware of.
Story first published: Wednesday, April 3, 2013, 17:28 [IST]
Desktop Bottom Promotion