Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
பெரியவங்க துணையில்லையா ? கர்ப்பகாலத்தில் கவனிங்க

சத்தான உணவு கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தானியவகைகள், முட்டை, இறைச்சி,பால்,பழவகைகள்,காய்கறி வகைகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது. எனவே சரியான நேரத்திற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவும்.
சரியான மாத்திரைகள்
நீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த 12வாரங்கள் வரை போலிக் அமில மாத்திரையை தினமும் தவறாமல் எடுக்க வேண்டும். ஏனெனில் முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்கவும், மூளை வளர்ச்சிக்கும் போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் பரிந்துரை செய்கின்றனர். கீரை வகைகள், புரக்கோழி, தானியங்கள் தானியங்கள் உள்ளிட்டவை போலிக் அமிலம் நிறைந்தவையாகும். அவற்றை கர்ப்பிணிகளுக்கு வாங்கி கொடுக்கலாம். அதே சமயம் மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் கடைகளில் கண்ட மருந்துகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது.
கண்டதை சாப்பிடாதீங்க
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள், நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, சரியாக வேகாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வைட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.
ஒட்டுண்ணி நோய்கள்
டோக்சோ பிளாஸ்மோசிஸ்என்பது கர்ப்ப காலங்களில் ஒட்டுண்ணியால் ஏற்படகூடிய ஒரு வகை நோய்.இந்நோய் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்போது குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்களைத் தோற்றுவிக்கும். எனவே அனைத்து விதமான உணவுகளை உண்ணும் போதும் நன்கு கழுகி,வேகவைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
ஓய்வெடுப்பது அவசியம்
கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் எளிதாக சுகப்பிரசவத்திற்கும் உதவும்.
மருத்துவரை அணுகவேண்டும்
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், பிறப்புறுப்பில் ரத்தம் அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகவும். பெரியவரின் துணை இல்லாதவர்களுக்கு பிரசவ காலம் சற்று சிரமமானதுதான். எனவே மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் சிக்கலின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
