கர்ப்பிணிகளுக்கு ஆபத்தாகும் எக்ளாம்ப்சியா நோய்!

By Aashika
Subscribe to Boldsky

ப்ரீக்ளம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள்.

இது கரு உருவாகி 20வது வாரமோ அல்லது அதற்குப் பிறகு தான் ஏற்படும். ப்ரீகளம்ப்சியா கைமீறி செல்லும் போது ரத்த திட்டுக்களின் அளவு குறைந்திடும். அதே போல கிட்னி மற்றும் கல்லீரலிலும் அதன் தீவிரத்தை காட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் :

காரணம் :

இதற்கும் இது தான் என்று எதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை ஆனால் பரம்பரை குறைபாடு,முறையற்ற உணவுப்பழக்கம், ரத்த நாளங்களில் ஏற்படுகிற பிரச்சனைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது.

இரட்டை குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கருவை சுமப்பவர்கள், 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்கள், தலைப்பிரசவம்,உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள், சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக அதற்காக மாத்திரை சாப்பிடுபவர்கள்,கிட்னி பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

தடுக்க முடியுமா?

தடுக்க முடியுமா?

இதனை முன்கூட்டியே தடுக்க முடியாது, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து கொண்டு வந்தால் இந்த நோய் ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்று மேலும் வலுப்பெறாமல் தடுக்க முடியும். இந்தப் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த நோய் தீவிரமானால் கருவிற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் குறைந்திடும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

கர்பிணிகள் கண்டிப்பாக இந்த அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

எக்ளாம்ப்சியா' எனப்படும் கொடிய நோய் பிரசவத்திற்கு முன்னரோ அல்லது பிரசவ நேரத்திலோ அல்லது பிரசவத்திற்குப் பின்னரோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிக இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதப்போக்கு, உடல் வீக்கம், தலைவலி, கிறுகிறுப்பு, பார்வைக் கோளாறுகள், மேல்வயிற்று வலி, வலிப்பு மற்றும் நினைவு இழத்தல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

பளிச்சிடும் வெளிச்சம் தெரிவது, வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது அல்லது முழுமையாகக் கண் தெரியாமல் இருப்பது போன்ற பார்வைக் கோளாறுகள் இந்நோயாளிகளுக்கு ஏற்படும். சிலருக்கு வாந்திகூட இருக்கும்.

முதல் 24 மணி நேரம் :

முதல் 24 மணி நேரம் :

வலிப்பு முதலில் உடலெல்லாம் மிகவும் விறைப்பாக இருப்பதுபோல ஆரம்பிக்கும். கைகள் மடங்கி விரல்கள் எல்லாம் மடிக்கப்பட்டு கெட்டியாக எதையோ பிடித்திருப்பதைப்போல இருக்கும். பின்னர், உடலில் உள்ள தசைகள் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்கும்.

இந்த நிலை ஓரிரு நிமிடங்கள் நீடித்துவிட்டு முழுமையான மயக்க நிலைக்கு தாய்மார்கள் சென்றுவிடுவார்கள். மயக்க நிலைக்குச் சென்று விட்ட தாய்மார்களுக்கு வேகமான சுவாசம் வருவதோடு சிறிது காய்ச்சலும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வலிப்பு வரலாம். ஆனால், ஒரு சிலரோ மயக்க நிலையிலேயே நீடித்து இருப்பர் பிரசவத்திற்குப்பின் ஏற்படும் எக்ளாம்ப்சியா நோய் பிரசவம் ஆன முதல் இருபத்து நான்கு மணி நேரத்திலேயே ஏற்படும்.

கவனம் :

கவனம் :

இந்நோய் பிரசவத்திற்கு முன்னரே ஏற்பட்டால், அதிகபட்சமான தாய்மார்களின் இறப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அடிக்கடி வலிப்பு ஏற்பட்டாலோ, வலிப்புகளுக்கு இடையே குறைந்த இடைவெளி மட்டுமே இருந்தாலோ மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

இந்த எக்ளாம்ப்சியா நோயிலிருந்து உடல்நலம் தேறிய தாய்மார்களில் முப்பதிலிருந்து நாற்பது சதவீத பெண்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்து கொண்டேயிருக்கும்.

Image Courtesy

கரு :

கரு :

எக்ளாம்ப்சியா நோய் தாக்கிய தாய்மார்களுக்கு குறைப் பிரசவமாகக் குழந்தை பிறப்பது சாதாரணமாக நிகழக் கூடியதே. மேலும் கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவிற்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் கர்ப்பப் பையினுள்ளேயே குழந்தை இறந்துவிடலாம்.

வலிப்பினைக் கட்டுபடுத்த உபயோகிக்கும் மருந்துகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது சகஜம். இந்நோய்க்கு முறையான சிகிச்சை செய்ய வலிப்புக் கட்டுப்பாடு மருந்துகளையும், பிராணவாயுவையும், இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகளையும் கொடுக்கவேண்டியிருக்கும்.

Image Courtesy

பரிசோதனை :

பரிசோதனை :

மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிடுங்கள். முதலில் உங்களுடைய ரத்த அழுத்தம் சரி பார்க்கப்படும். பின்னர் சிறுநீர் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை எடுக்கப்படும். கல்லீரலில் இருக்கிற என்சைம்களின் அளவு என்ன ப்ளேட்லெட் அளவு குறித்து கணக்கிடப்படும்.

இதே நேரத்தில் வயிற்றிலிருக்கும் கரு ஆரோக்கியமாக இருக்கிறதா? அதன் அசைவு, வளர்ச்சி, இதயத்துடிப்பு ஆகியவை குறித்தும்,உங்கள் உடலின் நீர்ச்சத்து குறித்தும் கணக்கிடப்படும்.

தீர்வு :

தீர்வு :

குழந்தையை வெளியில் எடுப்பது தான் ஒரே தீர்வு. முடிந்த வரையில் தொடர்ந்து உங்களுக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் வராமல் இருக்கும் வரை கருவை தொடர வைப்பார். நீங்கள் 37 வாரங்களை கடந்து வீட்டீர்கள் அதோடு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் சிசேரியன் மூலமாக குழந்தை வெளியில் எடுக்கப்படும்.

இந்த காலத்தில் வெளியில் எடுக்கப்படும் குழந்தை முழு வளர்ச்சியை பெற்றிருக்கும் ஆனால் மினிமலி ப்ரீமெச்சூர்டாக இருக்கும்.

மைல்ட் :

மைல்ட் :

இந்த ப்ரீக்ளப்சியா அறிகுறி மைல்டாக தெரிய ஆரம்பிக்கும் போதே கர்பிணிகள் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். முதலில் முழுமையான ஓய்வு அவசியம், உணவில் அதிகப்படியான சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீராகாரங்களை அதிகளவு குடிக்க வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு ரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்து ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சையளிக்கப்படும்.

தாமதம் :

தாமதம் :

இதற்கான அறிகுறிகளை கவனிக்கமால் விட்டாலோ அல்லது உரிய காலத்திற்குள் குழந்தையை வெளியில் எடுகக்வில்லை என்றால் அது உங்களை மட்டுமல்ல குழந்தையையும் கடுமையாக பாதிப்பினை உண்டாக்கும்.

கருவின் இதயத்துடிப்பில் மாற்றங்கள் தெரியும். சராசரியை விட குறைவது, தாய்க்கு வயிற்று வலி அதிகரிக்கும், சிறுநீர் பிரிவதில் சிக்கல்கள் ஏற்படும், உதிரப்போக்கு, கல்லீரலைச் சுற்றி நீர் கோர்த்திடும். ஆக, இது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே தொல்லை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Pre Eclampsia in Pregnancy Symptoms

    Pre Eclampsia is the most common serious medical disorder of human pregnancy. It can affect both the mother and her unborn baby. It usually arises during the second half of pregnancy, and can even occur some days after delivery.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more