கர்ப்பம் உறுதியானதும் கர்பிணிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான்!

By Aashika
Subscribe to Boldsky

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

விந்தணு உடன் இணைந்த கரு முதலில் ஒரேயொரு முழு 'செல்’லாக இருக்கும். இது நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் என்பது இதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள் :

காரணங்கள் :

இந்த எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட இது தானென்றே தனித்து எதையும் சொல்ல முடியாது. ஆனால் இவை எல்லாம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிற விஷயங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஃபெலோப்பியன் டீயூப்களில் ஏதேனும் கட்டி அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது அல்லது அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கு கரு ஃபெலோப்பியன் டியூபிலேயே கரு தங்கிட வாய்ப்புண்டு. சில நேரங்களில் ஹார்மோன் மாறுதல்கள், மரபணு கோளாறுகள், பிறப்பிலேயே இருக்கக்கூடிய சில குறைபாடுகள்.

Image Courtesy

யாருக்கு ஏற்படும் :

யாருக்கு ஏற்படும் :

இந்த காரணங்களைத் தாண்டி யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது தெரியுமா?

முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்கள், கருத்தரித்து பலமுறை அப்ராஷ்டன் செய்தவர்களுக்கு, பெல்விக் டிசீஸ் பின்னனி கொண்டவர்கள், முதல் குழந்தை எக்டோபிக் ப்ரெக்னன்சியாக இருந்தால் இரண்டாவது குழந்தையும் எக்டோபிக் ப்ரெக்னென்சியாக மாற வாய்ப்புண்டு. பாலியல் நோய் கொண்டிருப்பவர்கள். அந்த டியூபின் வடிவத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

உமட்டல், வாந்தி, மார்பகம் தளர்ந்து போவது போன்றவை கருத்தரித்தலுக்கான அடிப்படை அறிகுறிகள். இவையே இவர்களுக்கும் இருக்கும் இதைத் தாண்டி சில தனிப்பட்ட அறிகுறிகள் என்று பார்த்தால் கழுத்து, ஷோல்டர் ஆகிய பகுதிகளில் எல்லாம் அடிக்கடி வலியெடுக்கும். வயிற்றில் எதோ கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாகும். சிலருக்கு வயிற்றில் ஒரு பக்கம் மட்டும் வலியெடுக்கும் என்பதால் இதனை கிட்னி ஸ்டோன் என்று தவறாக நினைத்திடவும் வாய்ப்புண்டு.

இதைத் தவிர உதிரப்போக்கு ஏற்படும். இவற்றில் ஏதேனும் ஒரு சில அறிகுறிகள் தெரிந்தால் கூட ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கண்டுபிடிக்க :

கண்டுபிடிக்க :

வெளித் தோற்றத்தை வைத்தோ அல்லது வயிற்றின் வடிவத்தை வைத்தோ அல்லது தாய்மார்களுக்கு வெளிப்படுகிற அறிகுறிகளை வைத்து மட்டுமே இந்த கர்ப்பத்தை உறுதி செய்ய முடியாது. மருத்துவருக்கும் இதே சந்தேகம் வந்தால் ட்ரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் எடுப்பார்.

குச்சி வடிவில் இருக்கக்கூடிய கருவியை உங்களின் பிறப்புறுப்பு வழியாக செலுத்தி கரு எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும். அதே நேரத்தில் ரத்தப்பரிசோதனை மூலமாக உங்கள் உடலில் ஹெச் சி ஜி மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் கண்காணிப்பார்.

Image Courtesy

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சை :

பரிசோதனையின் போது கரு கர்பப்பையில் இல்லை என்றாலோ ரத்தப் பரிசோதனையின் மூலமாக பரிசோதிக்கப்படும் ஹார்மோன் அளவு தொடர்ந்து குறைந்தால் அவை எக்டோபிக் ப்ரெக்னென்சி என்று உறுதி செய்வார்கள். ஆரம்ப நிலையில் தான் இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் உங்களுக்கு கடுமையான வலி மற்றும் உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருவை கலைத்திடுவார்கள்.

கர்ப்பையில் அல்லாமல் இப்டி ஃபெலோப்பியன் டியூப்களில் கரு வளர்வதால் தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே ஆபத்து.

சிக்கல்கள் :

சிக்கல்கள் :

ஃபெலோப்பியன் டியூபில் வளரும் கரு பிற கருவின் வளர்ச்சியைப் போல முழு வளர்ச்சி பெற முடியாது அதே போல அதனால் ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டுப்பிடிப்பது அவசியமாகும். உங்களுக்கு தெரிகிற அறிகுறிகள் மற்றும் கருவின் வளர்ச்சி,ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை எல்லாம் கணக்கிட்டு உங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

சிகிச்சை :

சிகிச்சை :

பெரும்பாலும் மெதோட்ரெக்ஸேட் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இதை எடுத்துக் கொள்வதால் செல்கள் அதிகளவு பிரிவது தவிர்க்கப்படும். இந்த மருந்து சரியாக வேலை செய்கிறதா என்பதை தொடர் ரத்தப்பரிசோதனையின் மூலம் கண்காணிக்கப்படும். இவை எதற்கும் சரியாகவில்லை என்றால் தான் அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும்.

மருத்துவர்கள் ஃபெலோப்பியன் குழாயில் வளரும் கருவை கர்ப்பப்பைக்கு இடமாற்றுவதை விட அதை மொத்தமாக நீக்கவே வலியுறுத்துகிறார்கள். ஏனென்றால் கருவின் வளர்ச்சியில், செல்களில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும் இவை குழந்தை பிறந்த பிறகோ அல்லது கருவில் வளரும் போதே பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஓய்வு :

ஓய்வு :

இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்திலும் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் தையல் போட்ட இடத்தை தினமும் சுத்தமாக்கி ட்ரையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த இடம் சிவந்து போவது, வீக்கம் அல்லது ரத்தக்கசிவு அல்லது ஏதேனும் வாடை வீசினாலோ உடனடியாக மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.

இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் சிலருக்கு லேசான உதிரப்போக்கு ஏற்படலாம். இந்தப் பிரச்சனை ஆறு வாரங்கள் வரை தொடரும். இதைத் தவிர அதிக எடையுள்ள பொருட்களை தூக்காமல் இருப்பது, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது,செக்ஸுவல் ரிலேஷன்சிப் இல்லாமல் இருப்பது அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்குவது போன்ற வேலைகளை செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

ஃபெலோபியன் டியூபில் கருத்தரித்து சில பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை நல்லபடியாக பிறந்திருந்தாலும் அதே போல எல்லாருக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் இதில் எந்த அசட்டையையும் காட்ட வேண்டாம்.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது.

நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம்.

சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு'வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.

இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் அளவுக்கு மீறி செல்லும் போது வெடித்துவிடவும் வாய்ப்புண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Ectopic Pregnancy Symptoms and risk factors

    An ectopic pregnancy is one in which the fertilized egg attaches itself in a place other than inside the uterus. Almost all (more than 95 percent) ectopic pregnancies occur in a fallopian tube; hence the term "tubal" pregnancy.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more