For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்மையை உறுதி செய்யும் போலிக் அமில உணவுகள்!

By Mayura Akilan
|

8 Fertility Foods to get Pregnant Fast
நாம் உண்ணும் உணவுதான் நமது உடலின் ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்கிறது. ஆணோ, பெண்ணோ ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்களால் அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக உருவாக்க முடியும். திருமணமான தம்பதிகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படுவது கூட அவர்களின் சந்ததியை மனதில் கொண்டுதான். எனவே பெண்களுக்கு தாய்மையை அளிக்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அறிவுறுத்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

பாக்கெட் உணவு வேண்டாம்

பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களை தவிர்த்துவிடுங்கள் அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும். ரசாயன கலப்பில்லாத பழங்கள் காய்கறிகளை உட்கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

உயர்தர நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். பயறுவகைகள், பழுப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ், பீன்ஸ் போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.

பச்சைக் காய்கறிகள்

பச்சை நிறமுடைய கீரைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது கர்ப்பம் தரித்தலை விரைவாக்கும். இந்த காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் இரும்பு சத்து போலிக் அமிலம் ஆகியவை உடலின் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

போலிக் அமில உணவுகள்

போலிக் அமிலமானது பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் பெண்கள் எளிதில் கருத்தரிக்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள சோயா, உருளைக்கிழங்கு, கோதுமைமாவு, முட்டைக்கோஸ், பீட்ரூட், வாழைப்பழம், புருக்கோலி, முட்டை ஆகியவற்றில் போலிக் அமிலம் அதிகம் காணப்படுகிறது. எனவே இதுபோன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது பெண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மாதவிலக்கு பிரச்சினை

பெண்களின் கருத்தரித்தலில் முக்கிய பங்கு வகிப்பது மாதவிலக்கு பிரச்சினை. அந்த சுழற்றி முறை சரியாக இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. எனவே முறையற்ற மாதவிலக்கு கொண்ட பெண்கள் அதை சீராக்க கேரட், பட்டாணி, திராட்சை பழங்களை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் மாதவிலக்கு சுழற்றி முறை சீராகும்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி உணவுகள் கருத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யாப்பழம், ப்ருக்கோலி, காலிஃப்ளவர், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரீஸ், ஆகியவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர் உணவியல் நிபுணர்கள்.

பால் உணவுகள்

பால், வெண்ணெய், சீஸ், யோகர்ட், முட்டை, மீன் ஆகியவை பெண்களின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் உணவுகள். இவற்றை தவறாமல் உட்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். அதேபோல் ஒமேகா 3 அதிகம் உள்ள பாதாம், வால்நட், போன்றவைகளும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது உணவியல் நிபுணர்களின் ஆலோசனையாகும்.

நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் அபரிமிதமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பெண்கள் நிலத்தைப் போன்றவர்கள். எனவே தங்களின் உடலை ஆரோக்கியமாகவும், வளமாகவும் பேண வேண்டும் என்பது உணவியல் நிபுணர்கள் அறிவுரையாகும். இதன்மூலம் ஆரோக்கியமான சந்ததியை பெறமுடியும்.

English summary

8 fertility foods to get pregnant fast | தாய்மையை உறுதி செய்யும் போலிக் அமில உணவுகள்!

When you are trying to get pregnant, you want to try everything which is safe for the health and is effective too! Often pregnant women are advised to be cautious with their diet and avoid foods which are unhealthy or dangerous for the baby. Did you know there are few fertility foods which can help you get pregnant fast? Take a look at the fertility foods which can be included in your diet while you are trying to conceive.
Story first published: Tuesday, March 20, 2012, 10:54 [IST]
Desktop Bottom Promotion