For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகாலத்தில் முகப்பருவா? கவனமா இருங்க!

By Mayura Akilan
|

Acne
இளம் வயதில் முகப்பரு பலரையும் வாட்டி வதைக்கும். கர்ப்பகாலத்தில் முகப்பரு வந்தால் அதற்கு சிகிச்சை செய்வது என்பது என்பது பலரது கேள்வி. கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும் 'முகப்பருவிற்காக' சிகிச்சை செய்திருப்பார்கள். கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய முகப்பரு சிகிச்சைகள் குறித்து ஆலோசனை கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

ரிலாக்ஸ் ஆக இருங்கள்

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு டென்சன் அதிகரிக்கும், மன அழுத்தமும் ஏற்படும் இதுவே பருக்கள் தோன்ற காரணமாகிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா மேற்கொள்ள வேண்டும். மூச்சுப்பயிற்சி செய்தாலும் மன அழுத்தம் குறையும்.

ஊட்டச்சத்துணவுகளை உண்ணுங்கள்

சரிவிகித ஊட்டச்சத்துணவு உண்ணாவிட்டாலும் பரு ஏற்படும். எண்ணெய் பலகாரம் அதிகம் சாப்பிடுவதாலும் கொழுப்புகள் அதிகரித்து ஆங்காங்கே முத்துப் போன்ற பருக்கள் தோன்றும். எனவே பழங்கள், காய்கறிகள் அதிகம் கொண்ட சரிவிகித ஊட்டச்சத்துணவுகளை உட்கொள்ளவேண்டும்.

அடிக்கடி கழுவுங்கள்

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும். இதனால் முகத்தில் ஆங்காங்கே பருக்கள் தோன்றலாம். எண்ணெய் அதிக அளவில் சுரந்தாலும் பரு உருவாகும். அடிக்கடி முகத்தை கழுவுங்கள். கிளின்சர் கொண்டு தினசரி இரண்டு முறை முகத்தை துடைக்கலாம். இதனால் பரு தோன்றுவது தடுக்கப்படும்.

தேன் தடவுங்கள்

தேன் சிறந்த இயற்கை மருந்துப்பொருள். பரு உள்ள இடத்தில் முகத்தில், வயிற்றில், மார்பு பகுதியில் தேனை தடவி 15 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் பருக்கள் படிப்படியாக காய்ந்து உதிர்ந்து விடும்.

பென்சாயில் பெராக்ஸைடு

கர்ப்பகால பருக்கள் அதிக அரிப்பை ஏற்படுத்தும். அவசரப்பட்டு சொறியும் போது நகம் பட்டு ரத்தம், சீல், வெளியேறினாலும் அது முகத்தில் புண்களை ஏற்படுத்தி வலியை அதிகரித்து விடும். எனவே பென்சாயில் பெராக்ஸைடு பூசுங்கள். அது முகப்பருவிற்கு சிறந்த நிவாரணம் தரும்.

முகப்பரு கிரீம்


முகப் பருவிற்காக போடப்படும் கிரீம்களில் 'டிரிடீநாய்ன்' TRETINOIN' மற்றும் 'ஐஸோடிரிடீநாய்ன்' 'ISOTRETINOIN' என்ற பொருள் அடங்கியுள்ளது. இது வைட்டமின் 'ஏ'வான 'ரெட்டினாய்க்' அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.

கருவை பாதிக்குமா?

ஆரம்பகாலத்தில் இந்த 'டிரிடீநாய்ன்' கிரீம்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள் ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் 'கிரீம்களை' கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

English summary

5 Tips to Eliminate Acne during Pregnancy | கர்ப்பகாலத்தில் முகப்பருவா? கவனமா இருங்க!

Acne during pregnancy, this is often caused by many changes occurring inside your body, with the hormonal changes being the most influential cause for your acne. Other causes of acne during pregnancy are dietary and stress level changes.
Story first published: Tuesday, May 1, 2012, 11:17 [IST]
Desktop Bottom Promotion