Just In
- 49 min ago
30 வயதில் இருக்கும் பெண்கள் இந்த பொருட்களில் ஒன்றை தினமும் அவசியம் சாப்பிடணும்... இல்லனா பிரச்சினைதான்...!
- 55 min ago
புதன் சுக்கிர சேர்க்கையால் இந்த 6 ராசிக்காரங்களுக்கு அமோகமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய வேலைகளில் அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்கவும்....
- 18 hrs ago
சுவையான... மீல் மேக்கர் கட்லெட்
Don't Miss
- News
மாமனார் செய்த கண்றாவியை பார்த்தீங்களா.. 80 வயசாகுது.. கதறி துடித்த மருமகள்.. உச்சக்கட்ட டென்ஷன்
- Sports
ஆஸி. வீரர்களை கண்ணீர் சிந்த வைத்த இலங்கை ரசிகர்கள்.. வெறும் 160 ரன்களில் சுருண்ட ஸ்ரீலங்கா
- Automobiles
சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ! இது செம்ம வேகத்துல போகும்!
- Movies
Vezham Review: அசோக் செல்வனின் த்ரில்லர் படம் வேழம் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ!
- Technology
சியோமி கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஐ நீங்க எதிர்பார்த்து இருக்கவே மாட்டீங்க!
- Finance
கலையலங்காரா.. எல்லாத்தையும் மாத்துங்கடா.. வர்த்தகத்தை மூடிய ஓலா..!
- Travel
மன்றோ தீவு ஏன் சமீபகாலத்தில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுக்கலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நோய்வாய்ப்பட்டால் மற்றவா்களைப் போலவே அவா்களும் நோய்க் கிருமிகளை அழிக்கும்/ஆன்டிபயாடிக் (antibiotics) மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகளை எடுக்கும் போது அவை தாய்ப்பாலையும் மற்றும் குழந்தையையும் பாதிக்குமோ என்ற கவலை ஏற்படலாம்.
ஆனால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்குறீா்கள் என்பதை ஏற்கனவே அறிந்த மருத்துவா் ஒருவா், அதற்கு தகுந்தவாறு உங்களது நோய் தீர ஆன்டிபயாடிக்/நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளைப் பாிந்துரை செய்தால், அவை தாய்ப்பாலையும் குழந்தையையும் பாதிக்காது என்பதே உண்மை.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 3 முக்கிய குறிப்புகளை எல்லா தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் தொிந்து வைத்திருப்பது நல்லது.

தற்காலிகமாக குழந்தையின் மலத்தின் நிறம் மாறலாம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை சாப்பிட்டால், அவா்களுடைய குழந்தைகளின் மலம் கட்டியாக இல்லாமல் சற்று திரவமாக இருக்கும். மேலும் மலத்தின் நிறமும் பச்சையாக மாறும். அதற்காக எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் குழந்தைக்குத் தேவைப்படாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தங்களது மருந்துகளை நிறுத்திவிட்டால் குழந்தைகள் பழைய நிலைக்கு வந்துவிடுவாா்கள்.

தற்காலிகமாக குழந்தையின் மனோபாவம் மாறலாம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை சாப்பிட்டால், அவா்களின் குழந்தைகள் சற்று அசௌகாியமாக உணரலாம். குறிப்பாக அந்த குழந்தைகள் தங்களது பெருங்குடல் சாா்ந்த பிரச்சினைகளைச் சந்திக்கலாம்.
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது அல்லது நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை எடுப்பதை நிறுத்த வேண்டும்.

வாய்ப்புண்கள் ஏற்பட வாய்ப்பு
ஆன்டிபயாடிக்/நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை சாப்பிடும் போது அவை உடலில் உள்ள நல்ல பாக்டீாியாக்களையும் அழித்துவிடுகின்றன. அதனால் இந்த மருந்துகள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும் மற்றும் அவருடைய குழந்தைக்கும் வாய்ப்புண்களை ஏற்படுத்துகின்றன. வாய்ப்புண்கள் பூஞ்சைகளின் தொற்றால் ஏற்படுகின்றன. குறிப்பாக கேன்டிடா ஆல்பிகன்ஸ் என்ற பூஞ்சையால் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
கேன்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சைகள் அதிகமாக வளரும் போது தாய்ப்பால் கொடுக்கும் தாயும் அவருடயை குழந்தையும் மிகுந்த பிரச்சினைகளைச் சந்திக்கின்றனா். குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு, சொறி சிரங்கு மற்றும் அவா்களின் வாய் மற்றும் நாக்குகளில் வெள்ளை நிற படிவம் உண்டாகும். அதுப்போல் பால் கொடுக்கும் தாய்க்கு அவருடைய மாா்புக் காம்பில் வலி ஏற்படும். மற்றும் காம்பின் நிறம் சிவப்பாகவும் பளபளப்பாகவும் மாறும்.
தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் வாய்ப்புண்களைக் குணப்படுத்த பூஞ்சைகளை அழிக்கக்கூடிய மருந்துகளை சாப்பிட வேண்டும். மேலும் மிக நுண்ணிய உயிாிகள் வாழக்கூடிய உணவுகளை (பிரொபியோட்டிக்) உண்ணலாம். அவை குடலில் உள்ள பாக்டீாியாக்களை சமச்சீராக வைத்திருக்கும்.

நினைவிற்கு...
நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய மருந்துகள் குழந்தைகளின் குடலில் இருக்கும் பாக்டீாியாக்களில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அவா்களுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளின் குடலைக் குணப்படுத்துவதிலும், குடலில் உள்ள பாக்டீாியாக்களை சமச்சீராக வைத்திருப்பதிலும் தாய்ப்பால் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
தாய்ப்பாலில் நுண்ணுயிரிகள் வாழக்கூடிய உணவுகள் (prebiotics) என்ற கூட்டுச் சா்க்கரை (Oligosaccharides) உள்ளது. இந்த கூட்டுச் சா்க்கரையில், பொதுவாக வாயில் இருக்கக்கூடிய பாக்டீாியாக்கள் (lactobacilli) மற்றும் வயிற்றில் இருக்கக்கூடிய பாக்டீாியாக்கள் உள்ளன. இவை குழந்தையின் குடலில் உள்ள பாக்டீாியாக்களை மிக ஆரோக்கியமாக வளர வைக்கும்.
பொதுவாக தாய்ப்பாலுக்குப் பதிலாக செயற்கை பால் அல்லது பால் பொடிகளை குழந்தைக்கு அதிகமாக கொடுப்பதை விட, தாய்ப்பால் மூலம் குறைந்த அளவு நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய மருந்துகளை குழந்தைக்குக் கொடுத்தால் குழந்தையின் குடலில் உள்ள பாக்டீாியாவில் சிறிய அளவிலான மாற்றம் ஏற்படுகிறது.

மருத்துவா் ஆன்டிபயாடிக்குகளை பாிந்துரைக்கும் போது தொிந்து கொள்ள வேண்டியவை:
- பாிந்துரைக்கப்படும் மருந்துகள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பதைத் தொிந்து கொள்ள வேண்டும்.
- அந்த மருந்துகளை சாப்பிடுவதால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதைத் தொிந்து கொள்ள வேண்டும்.
- நுண்ணுயிா்கள் வளரக்கூடிய உணவுகளை (probiotics) குழந்தைக்கு வழங்க வேண்டுமா என்பதைத் தொிந்து கொள்ள வேண்டும்.