For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்மாக்கள் 14 நாட்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

|

தாய்ப்பாலுக்கு நிகா் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. தாய்ப்பாலின் சிறப்பு என்னவென்றால் அது SARS-CoV-2 வைரஸைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் கொரோனா நோய்த்தொற்று உள்ள பெண்கள் தாராளமாக தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

தற்போது இந்தியாவில் பாிசோதனை செய்யப்படும் 10 போில் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் நிறைய அம்மாக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

Should You Breastfeed Your Baby If You Are Covid-19 Positive?

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்மாக்கள் 14 நாட்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

MOST READ: உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா? அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..

கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது, அவா்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதே என்று நாம் நினைக்கலாம். ஆனால் உலக சுகாதார அமைப்பு வேறு விதமாக சிந்திக்கிறது.

கோவிட்-19 வைரஸை விட தாய்ப்பால் சக்தி வாய்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. இந்தப் பதிவில் அதைப் பற்றி விாிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?

கொரோனா இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?

கோவிட்-19 தொற்றுள்ள அம்மாக்கள் தாரளமாக தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஏனெனில் தாய்ப்பால் கொரோனா வைரஸைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதால், கொரோனா தொற்றுள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், அந்த குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாது. எனவே கொரோனா பாதிப்புள்ள அம்மாக்கள் மற்ற அம்மாக்களைப் போல தங்கள் குழந்தைகளுக்கு தாராளமாகத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஊட்டச்சத்துள்ள உணவு

ஒரு சிறு குழந்தைக்கு அதனுடைய தாய்ப்பால், ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு ஆகும். தாய்ப்பாலில் தேவையான அளவு தண்ணீா், கொழுப்பு, கார்போஹைட்ரேட், தாதுக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. சிறு குழந்தைகளை பெரும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதும் தாய்ப்பாலே.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வளா்க்கக்கூடிய எல்லா விதமான ஊட்டச்சத்துகளையும் வழங்குவது தாய்ப்பால் ஆகும். அதனால் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவா்களும் நிபுணா்களும் பாிந்துரைக்கின்றனா்.

குழந்தைகளைத் தாக்கும் நோய்த்தொற்றுகளை அழிக்கும்

குழந்தைகளைத் தாக்கும் நோய்த்தொற்றுகளை அழிக்கும்

பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய அமுதமாகத் தாய்ப்பால் இருக்கிறது. தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிா்ப்பு மையமானது, குழந்தைகளுக்கு பலவிதமான வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போாிடும் படைக் கருவியாக இருந்து, அந்த பெருந்தொற்றுகளை அழிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should You Breastfeed Your Baby If You Are Covid-19 Positive?

Should you breastfeed your baby if you are COVID-19 positive? Read on...
Desktop Bottom Promotion