For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேரியனுக்கு பிறகு பெண்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

பிரசவம் முடிந்த பிறகு பெண்கள் மீண்டும் தங்கள் பழைய உடலமைப்பை பெற விரும்புவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் உடல் ஒத்துழைக்காது. எனினும் சிறிய உடற்பயிற்சிகளை செய்யலாம். கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது.

By Saranraj
|

பிரசவம் முடிந்த பிறகான காலம் பெண்களுடைய வாழ்வின் முக்கிய தருணமாகும். ஏனெனில் அது அவர்களின் மறுஜென்மம் போன்றது. இந்த சூழ்நிலையில் பெண்களின் உடல் மிகவும் வலுவிழந்திருக்கும். நீங்கள் மனதளவில் வலிமையாக உணர்ந்தாலும் உடலளளவில் அந்த வலிமை இருக்காது. அதிலும் சுகப்பிரசவத்தை விட சிசேரியன் செய்தவர்கள் சகஜ நிலைமைக்கு அதிக நாட்களாகும்.

சிசேரியனுக்கு பிறகு நீங்கள் உடற்பயிற்சி செய்து கர்ப்பகாலத்தில் நீங்கள் பெற்ற இலவச இணைப்பான உடல் எடையை குறைக்க எண்ணுவீர்கள் ஆனால் உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்காது. அதற்காக எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் உங்கள் உடல் எடை முன்பைவிட அதிகரித்துவிடும். எனவே உங்களால் செய்ய முடியாக எளிய உடற்பயிற்சிகளை மட்டும் செய்யவும் அதுவும் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்தபின். இங்கே சிசேரியனுக்கு பிறகு நீங்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத பயிற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

செய்யக்கூடாதவை:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக எடை தூக்குதல்

அதிக எடை தூக்குதல்

கர்ப்பமாவதற்கு முன்னரோ ஏன் சிலர் கர்ப்பகாலத்தில் கூட அதிக எடையுள்ள பொருட்களை தூக்கி வேலை செய்திருக்கலாம் ஆனால் சிசேரியனுக்கு பிறகு அதுபோன்ற முயற்சிகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உங்கள் குழந்தையை விட அதிக எடையுள்ள எந்த பொருளையும் குனிந்து தூக்கக் கூடாது. அவ்வாறு அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது உங்கள் வயிற்று சதையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தையல் பிரிய கூட வாய்ப்புகள் உள்ளது. காயம் முழுவதுமாக குணமடையும்வரை பிறரின் உதவியை நாடுவதே உங்களுக்கு நல்லது.

கடினமான உடற்பயிற்சி

கடினமான உடற்பயிற்சி

அதிக உடலுழைப்பு தேவைப்படும் உடற்பயிற்சிகளான வேகமாக ஓடுதல், ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை தவிர்க்கவேண்டும். வயிற்று பகுதியை அசைக்க கூடிய எந்த உடற்பயிற்சியாய் இருந்தாலும் முழுமையாக குணமடைந்த பின்தான் செய்யவேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் உள்ள தசைகள் இப்பொழுதுதான் குணமடைய தொடங்கியிருக்கும். தேவைப்பட்டால் மிதமான நடைப்பயிற்சி செய்யலாம்.

உடலை வளைத்தல்

உடலை வளைத்தல்

உடலை வளைத்து செய்யக்கூடிய உடற்பயிற்சிகளான யோகா போன்றவற்றை செய்ய நினைத்துக்கூட பார்க்காதீர்கள். ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு உங்கள் உடலின் உள்புறம், வெளிப்புறம் என இரண்டு பக்கமும் தையல் போடப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் உடலை வளைத்து செய்யும் உடற்பயிற்சிகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

செய்யக்கூடியவை:

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

உடலில் மிகக்குறைந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உற்பயிற்சி நடைபயிற்சியாகும். உங்கள் குழந்தையை ஒரு ஸ்ட்ரோலரில் வைத்துகொண்டு காலையும், மாலையும் மிதமான நடைப்பயிற்சி செய்வது இருவருடைய ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதுடன் உங்களுக்கும் உடற்பயிற்சி செய்ய திருப்தியை கொடுக்கும். தினமும் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது நீங்கள் விரைவில் குணமாகக் கூடிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும். சிறிது சிறிதாக நடைப்பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

ஆழ்ந்த சுவாசம்

ஆழ்ந்த சுவாசம்

சுவாசிப்பதெல்லாம் உடற்பயிற்சியா என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். உண்மையில் இழுத்து மூச்சு விடுவது சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த உடற்பயிற்சியின் போது உங்கள் வயிற்று பகுதி தசைகள் நன்கு செயல்படும். தினமும் காலையில் எழுந்தவுடன் இதனை செய்வது நல்லது. தினமும் இதை செய்துவர நாளடைவில் உங்கள் வயிற்றுப்பகுதி சதைகள் வலுப்படும்.

முன்புறமாக வளைதல்

முன்புறமாக வளைதல்

நேராக நின்று கொண்டு உடலின் மேல்பகுதியை முடிந்தவரை வளைக்க வேண்டும். இது உடலில் உள்ள அனைத்து தசைகளையும் வேலை செய்ய வைக்கக்கூடிய உடற்பயிற்சியாகும். அதே சமயம் இதில் சிரமங்களும் இல்லாமல் இல்லை. முதல் முறை செய்யும்போதே வலி இருப்பின் அதற்குபின் தொடரவேண்டாம். காயம் முழுமையாக குணமடைந்த பின் மட்டுமே மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

கை சுழற்சி

கை சுழற்சி

உங்கள் கைகளை முன்னோக்கியும், பின்னோக்கியும் சுற்றுவது உங்கள் தசைகளை வலுவடைய செய்யும். இந்த பயிற்சியின் போது கைகளை வேகமாக சுற்றக்கூடாது.

கணுக்கால் வளைவு

கணுக்கால் வளைவு

இந்த பயிற்சிக்கு படுக்கையில் படுத்திருக்கும்போது கணுக்காலை மட்டும் மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் அசைக்க வேண்டும். அதே போல பக்கவாட்டிலும் இருபுறமும் அசைக்க வேண்டும்.

இந்த உடற்பயிற்சிகள் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் உடனே நிறுத்திவிடவும். ஏனெனில் உடலை வருத்தி நீங்கள் செய்யும் உடற்பயிற்சி உங்களை மேலும் சிரமப்படுத்தும். எங்கே போய்விட போகிறது காலம் பொறுமையாக பழைய உடலை பெற்றுக்கொள்ளலாம், காத்திருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dos And Don'ts Exercise After C Section

After cesarean women become weak physically. In that time they shouldn't do any hard exercises, but they can do small exercises like walking, deep breathing, etc.,
Story first published: Wednesday, July 11, 2018, 11:47 [IST]
Desktop Bottom Promotion