Just In
- 8 hrs ago
ஒயிட் சாஸ் பாஸ்தா
- 8 hrs ago
உங்க ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் மாத்திரைகள 60% தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்!
- 9 hrs ago
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போடுவது எப்படி?
- 9 hrs ago
அமேசானில் உடலை வலிமையாக்கும் புரோட்டின் பவுடரை 50% தள்ளுபடி ஆஃபரில் வாங்குங்கள்...!
Don't Miss
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Movies
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
தாய்ப்பால் அளிக்கையில் கருத்தடை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்மார்கள் மிகவும் கவனமாக அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் வயிற்றில் குழந்தை இருந்த பொழுது எவ்வித புறம் சார்ந்த நோய்த் தொற்றுகளின் தாக்குதலும் இல்லாமல், அன்னையான நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள். இப்பொழுது அவர்கள் பிறந்த பின், வயிற்றில் பார்த்துக் கொண்டதை விட பல மடங்கு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருக்கும் நிலையில், கர்ப்ப காலத்தின் பொழுது உங்கள் துணையை உடலால் பிரிந்து இருந்திருப்பீர்; உங்களை போல உங்கள் கணவரும் உங்களுடன் சேர முடியாமல் தவித்திருப்பார்.

சூழல் கடினமாகி விடும்!
இப்பொழுது குழந்தை பெற்று அதற்கு பால் கொடுக்கும் நிலையில் கூட குழந்தையுடன் இரவு பகலாக இருக்க வேண்டிய நிலையும், தாய்ப்பால் கொடுக்கும் பொழுது கணவருடன் சேரும் பொழுது மீண்டும் குழந்தை உருவாகி விடுமோ என்ற பயம் நிலவும் சூழலில் பெண்கள் இருப்பர்; அதே போல அவர்தம் கணவன்மார்களும் குழந்தை பாசம் மற்றும் மனைவியுடன் கூட வேண்டும் என்ற ஆசையும் கொண்டு இருப்பர்.

என்ன படிக்க போகிறோம்!
ஆகையால் ஒரு குழந்தையை பெற்று எடுத்து அதற்கு தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் நிலையில் இருக்கும் நிலையில் உள்ள தம்பதியர் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது கலவியில் கூடலாமா, அப்படி கூடுவதால் குழந்தை கருத்தரிப்பு ஏற்படுமா, அப்படி கரு உருவாகாமல் இருக்க கருத்தடை பயன்படுத்தலாமா, அவ்வாறு பயன்படுத்துவது என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

தாய்ப்பால் ஒரு கருத்தடை!
பல தம்பதியர்கள் தாய்ப்பால் அளிக்கும் பொழுது அந்த நிகழ்வில் மாதவிடாய் எதுவும் ஏற்படாததால், அந்த சமயத்தில் கருத்தரிப்பு ஏற்படாது; தாய்ப்பால் அளிக்கும் செயலே கருத்தடையாக செயல்படுகிறது என்று எண்ணுவதுண்டு. ஆனால், இப்படி தம்பதியர் எண்ணுவதை முழு உண்மை என்றும் கூற இயலாது; முழுமையான பொய் என்றும் கூற முடியாது. உண்மை திரிந்து கதையாக மாறி அறியப்பட்ட கட்டுக்கதை என்று தான் இந்த விஷயத்தை குறிப்பிட வேண்டும்.

ப்ரோலாக்டின் ஹார்மோன்!
பெண்களின் உடலில் கர்ப்ப காலத்தின் பொழுதே குழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு ஏற்ற வகையில் பெண்களின் மார்பகத்தை பால் சுரக்கும் வகையில் மாற்ற புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் பல குழந்தைகள் கருத்தரிப்பை தடுத்து, ஏற்பட்ட கருத்தரிப்பு நன்கு வளர உதவும்; மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பொழுதும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சுரப்பு நிகழந்து கொண்டிருப்பதால் கருத்தரிப்பு தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பெண்கள் செய்ய வேண்டியது!
ஆனால், இந்த ஹார்மோன் சரியாக செயலாற்ற பெண்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் அளிப்பது, அவர்தம் உடலில் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளல், ஆறு மாதம் வரை இடைவெளி இன்றி குழந்தைக்கு தேவையான அளவு பால் அளித்தல் போன்ற செயல்களை சரியாக செய்து வர வேண்டியது மிகவும் அவசியம். அப்படி செய்தால் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் கருத்தரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படும்.

மாற்று வழி என்ன?
பெண்கள் சரியான உணவு முறையை, பால் சுரப்பதற்கான உணவுகளை உட்கொண்டு வந்திருந்தால், பால் அளித்தால் கருத்தரிப்பு தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஏதாவது ஒரு காரணம் காரணமாக தாய்ப்பால் சுரப்பு நின்று, அதை கவனியாது கலவியில் ஈடுபட்டு கருத்தரிப்பு நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது?
ஆகையால், தாய்ப்பால் சுரப்பு நிற்கும் தருணத்தை கணக்கில் கொண்டு அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பொழுதே கலவி இன்பம் அனுபவிக்க என்னும் பொழுது, கருத்தரிப்பு நிகழாமல் இருக்க கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ஹார்மோன் கருத்தடை சாதனங்கள்!
ஹார்மோன் மூலம் கருத்தடையை ஏற்படுத்துபவை ஹார்மோன் கருத்தடை சாதனங்கள் எனப்படும்; இந்த வகையை சார்ந்த கருத்தடை சாதனங்களான கருத்தடை மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், பிறப்புறுப்பு மோதிரம் போன்றவற்றை பயன்படுத்த முயலலாம்.
ஆனால் இதில் எந்த ஒன்றை பயன்படுத்தும் முன்னரும் மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது; ஏனெனில் எடுத்துக் கொல்லப்படும் ஹார்மோனால் எதாவது தீங்கு உங்களுக்கோ குழந்தைக்கோ நேர வாய்ப்பு உண்டு.

ஹார்மோனில்லா கருத்தடை சாதனங்கள்!
ஹார்மோனை பயன்படுத்தாமல் கருத்தடையை அளிக்கும் சாதனங்கள், ஹார்மோனில்லா கருத்தடை சாதனங்கள் என்று அழைக்கப்படும். இவற்றில் ஹார்மோனால் எந்த பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் இல்லை; இந்த வகையை சேர்ந்த கருத்தடை சாதனங்களான காப்பர் டி, காண்டம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு முறை போன்றவற்றில் உங்களுக்கு பொருந்தும் ஓரு முறையை தேர்ந்து எடுத்து பயன்படுத்தலாம்.

இயற்கை முறை கருத்தடை!
இயற்கை முறையில் கருத்தரிப்பு நிகழாமல் இருக்க, தம்பதியர் கலவியில் ஈடுபடாமல் இருப்பது தான் ஒரே வழி. மேலும் அப்படியே மோகம் உங்களுக்குள் மூண்டு எழுந்தாலும், தொடுதல், பேசுதல், விந்தணுக்கள் பெண்ணுக்குள் நுழையாமல் உடலால் கூடி இன்பம் காணுதல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஆனால், இதில் விந்தணுக்கள் பெண்ணுக்குள் செல்லவில்லை என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பெண்ணின் பிறப்புறுப்பில் உள் நுழைத்தல் செய்தால் கூட விந்து வெளிப்படும் முன் ஆணின் பிறப்புறுப்பு வெளியேற்ற பட்டுவிட வேண்டும். இது கவனமாக இருந்தால், கண்டிப்பாக பக்க விளைவுகள், ஆபத்துகள் ஏதும் இன்றி பலனளிக்க கூடிய சிறந்த முறை.

குழந்தைக்கு ஆபத்தா?
இவ்வாறு கருத்தடை பயன்படுத்தினால், அதன் விளைவு தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்று கேட்டால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஹார்மோன் முறை கருத்தடையை பின்பற்றும் நேரத்தில் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில் அந்த உபகரணங்களில் பயன் படுத்தப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களின் உடலுக்குள் செல்ல நேர்ந்தால், அது கண்டிப்பாக கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு; எனவே கருத்தடை முறையை தேர்வு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.