For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் தரும் பெண்கள் குளிர்பானங்கள் குடிக்கலாமா?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குளிர்பானங்கள் பருகுவது நல்லதா என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பெரியவர்கள் பால் கொடுக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார்கள். அவை எல்லாம் அர்த்தம் இல்லாத மூட நம்பிக்கை என நீங்கள் நினைக்க வேண்டாம்.

பெரியவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தின் பின்னணியிலும் ஒரு வலுவான காரணம் இருக்க தான் செய்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டாம் என்றும், குளிர்ச்சியான நீரை பருக வேண்டாம் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் பின்னணியை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தாய்க்கு சளி பிடிக்கும்

1. தாய்க்கு சளி பிடிக்கும்

குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களுக்கு தாயின் உடல் சற்று ஆரோக்கியமில்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் குளிர்ந்த நீரில் குளித்தாலோ, குளிர்பானங்கள் அல்லது குளிர்ந்த நீரை பருகினாலோ அவர்களுக்கு சளி பிடிக்க கூடும்.

2. குழந்தைக்கும் ஆபத்து

2. குழந்தைக்கும் ஆபத்து

தாய்க்கு சளி பிடித்திருந்தாலும் கூட, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு சளி பிடிப்பதில்லை. ஏனெனில் வைரஸ் தொற்றுகள் தாய்ப்பாலை பாதிப்பதில்லை. ஆனால், தாயின் உடலில் இருந்து வெளியேறும் சளி அல்லது நீர்மங்கள் குழந்தையின் மீதுப்பட்டால் குழந்தைக்கும் சளி பிடிக்கிறது. தாய்க்கு சளியின் அறிகுறி தெரியும் முன்னரே குழந்தைக்கு சீக்கிரமாக சளி பிடித்துவிடும்.

3. பாலை மாற்றுவதில்லை

3. பாலை மாற்றுவதில்லை

குளிர்ச்சியான பானங்களை குடிப்பது பாலின் தன்மையை மாற்றுவதில்லை. ஆனால் அதிகமாக ஐஸ் சேர்த்து குடிப்பதை நிறுத்திவிட்டு, அதிகளவில் நீர்மங்களை பருகுவது சிறந்தது. இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவும்.

4. சத்தான உணவு

4. சத்தான உணவு

பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவு புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமின்றி நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட பாலூட்டும் போது 400 கலோரிகள் அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம்.

5. குளிர்பானங்கள் பருக கூடாதா?

5. குளிர்பானங்கள் பருக கூடாதா?

உங்களுக்கு குளிர்பானங்களை பருக பிடித்தால், பிரஷ் ஜீஸில் ஐஸ் போட்டு, கோடைகால மதிய வேளைகளில் பருகுங்கள். இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் உண்டாகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

can Mother drink cold drinks during breast feeding

can Mother drink cold drinks during breast feeding
Story first published: Friday, July 14, 2017, 12:00 [IST]
Desktop Bottom Promotion