தனது தாய்மை குறித்து பெருமிதம் கொள்ளும் பாலிவுட் நடிகைகள்!

Written By:
Subscribe to Boldsky

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. ஆனால் சில பெண்கள் தங்களது அழகை கருத்தில் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியத்தை விட நமது அழகு அவ்வளவு முக்கியமா என்ன?

தாய்மையை விட சிறந்த அழகு இந்த உலகில் வேறு எதுவும் இருந்துவிட முடியாது! தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசு. அதை கொண்டாட வேண்டியது மிகமிக அவசியம்! இந்த பகுதியில் தாய்ப்பால் கொடுப்பது பற்றி பிரபலங்கள் கூறிய அறிவுரைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராயின் அழகிய குழந்தை ஆராத்யா தற்போது ஐந்து வயதாகிறது. உலகி அழகியான ஐஸ்வர்யா ராய் கூட தனது பிரசவத்திற்கு பின் சற்று எடை கூடிவிட்டார். ஆனால் அவர் தனது குழந்தையின் நலனை தான் கருத்தில் கொண்டு செயல்பட்டாரே தவிர, தனது அழகை பற்றி கவலைப்படவில்லை.

அவர் தான் தாயாக முடிவு செய்தது தான் என் வாழ்வில் எடுத்த மிகச்சிறந்த முடிவு என்றும், தாய்மை தரும் அழகை வேறு எந்த அழகு சாதன பொருட்களும் தந்து விட முடியாது என்றும் கூறியுள்ளார்.

லாரா!

லாரா!

லாராவின் குழந்தை சாய்ராவிற்கும் தற்போது நான்கு வயதாகிவிட்டது. இவர் தனது குழந்தைக்கு நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுத்துவந்துள்ளார். இவரும் கர்ப்பத்தின் போது அதிகமாக எடை கூடிவிட்டார். இவர் தற்போது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்து வருகிறார். தாய்க்கும் சேய்க்கும் இடையே இதை விட சிறந்த பிணைப்பை உருவாக்க முடியாது என்கிறார் இவர்.

இவர் தாய்மை பெண்களின் வாழ்வில் நடக்கும் மிகச்சிறந்த விஷயம், அது முக்கியமான கடமையும் கூட, தாய்மார்கள், புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவங்களை விளக்க வேண்டும். உடற்பயிற்சி மற்றும் உணவை விட தாய்ப்பால் கொடுப்பது எனது அழகை கூட்டியது என்று கூறுகிறார்.

Image courtesy

கிருஷ்ணா கபூர்

கிருஷ்ணா கபூர்

கிருஷ்ணா கபூர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இவர் தனது உடல் எடை அதிகரித்து விடும் என்ற பயத்தில் இதை சாப்பிட வேண்டும், அதை சாப்பிட கூடாது என்று இருக்க கூடாது. குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பிட வேண்டும் என்கிறார்.

மேலும், பெண்கள் தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பது எல்லாம் கூடாது. நீங்கள் நன்றாக சாப்பிட்டால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். உணவில் அனைத்து விதமான சத்துக்களும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்.

ரவீனா!

ரவீனா!

பாலிவுட் நட்சத்திரமான ரவீனா, குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். குழந்தை பிறந்தவுடனேயே நீங்கள் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று ரிஸ்க் எடுக்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்!

கண்டிப்பாக டயட் இருப்பது கூடவே கூடாது. தாய்ப்பால் கொடுப்பதும் கலோரிகளை குறைக்க உதவும் என்கிறார் ரவீனா!

ரேணுகா!

ரேணுகா!

ரேணுகா தாய்ப்பால் கொடுப்பதை பற்றி மிக நன்றாக கூறியிருக்கிறார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைக்கு பசி எடுக்கும் போது, குழந்தை அழும். நீங்கள் அதை புரிந்து கொண்டு தாய்ப்பால் கொடுங்கள்.

தாய்ப்பால் குடித்த பின்னரும் குழந்தை அழுதால் குழந்தைக்கு ஏதோ சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்! அது என்னவென்று கவனிக்க வேண்டியது அவசியம். நான் எனது குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்தேன். இது ஒவ்வொரு குழந்தையை பொருத்தும் மாறுபடும் எங்கிறார் ரேணுகா!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Actress Sharing Their Breast Feeding stories

Bollywood Actress Sharing Their Breast Feeding stories
Story first published: Thursday, August 3, 2017, 17:21 [IST]