Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
புது அம்மாக்களுக்கான சூப்பர் உணவுகள்!!!
"எப்படியோ நல்லபடியாக பிரசவம் முடிந்துவிட்டது. இனிமேல் எந்த ஒரு டயட்டும் பின்பற்ற தேவையில்லை" என்று நிம்மதியுடன் புது அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் அவ்வாறு புது அம்மாக்கள், குழந்தையை மட்டும் கவனமாக பார்த்துக் கொண்டு இருக்காமல், தங்களது உடல் நலத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் பிரசவத்தின் போது நிறைய சத்துக்களை பெண்கள் இழந்திருப்பார்கள். எனவே அத்தகைய இழந்த சத்துக்களை மீண்டும் பெற பிரசவத்திற்கு பின் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் பிரசவத்திற்கு பின், உடல் நிலையானது மிகவும் சோர்வுடனும், தெம்பின்றி இருக்கும்.
ஆகவே பிரசவம் முடிந்த பின், பெண்கள் ஒருசில டயட்டை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய டயட் மேற்கொள்வதால், தாயின் உடல் நிலை நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, அத்தகைய உணவுகளால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிநது கொண்டு, மறக்காமல் உணவில் சேர்த்து, இழந்த சக்தியை மீண்டும் பெற்று, சந்தோஷமாக குழந்தையுடன் விளையாடுங்கள்.

தயிர்
பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் தயிரும் ஒன்று. இதனால் பிரசவத்தின் போது இழந்த கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்களை பெறலாம்.

வாழைப்பழம்
உடலுக்கு அளவில்லாத சக்தியை கொடுக்கும் உணவுப் பொருள் என்றால் அது வாழைப்பழம் தான். இத்தகைய வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடலில் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடும் போது, இதில் உள்ள சத்துக்களானது உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் தாய்ப்பால் கொடுக்கும் போது, தாயின் உடலில் இருந்து வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்டுவதற்கு, நெல்லிக்காய் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

தண்ணீர்
உடலை வறட்சியின்றி வைப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அதிலும் பிரசவத்திற்கு பின் பெண்கள் தண்ணீர் அதிகம் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். குறிப்பாக சிசேரியன் செய்தவர்களுக்கு, தண்ணீர் பருகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

உலர் பழங்கள்
ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் ஒரு கையளவு முந்திரி, உலர் திராட்சை, வால்நட் அல்லது பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும். மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, பாதாமை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

பசலைக் கீரை
கீரைகளில் பசலை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் கே, ஏ மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனையும் மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ்
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸை, பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், அவை எளிதில் செரிமானமடைந்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

பால்
டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் முக்கியமான ஒன்று பால். இந்த பாலில் உடலுக்கு வேண்டிய அளவில் புரோட்டீன் மற்றம் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் இரண்டு டம்ளர் பால் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.

பாகற்காய்
புது அம்மாக்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்ததாக பாகற்காய் கருதப்படுகிறது. இந்த பாகற்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடலில் இரத்த குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டால், இரத்த ஓட்டத்தை சீராக அதிகரிக்கலாம்.

முட்டை
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு முட்டை மிகவும் அவசியமான ஒரு உணவுப் பொருள். இந்த உணவுப் பொருளை பெண்கள் சாப்பிட்டால், பலம் கிடைப்பதோடு, குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளும் அளவில் சக்தியும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











