Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பிரசவத்துக்கு அப்புறம் வேலைக்கு போவது நல்லதா? கெட்டதா?
வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்கு பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது. அதிலும் அது அவர்களது பிரசவம் மற்றும் உடல் நிலையை பொறுத்து, ஒரு மாதத்தில் கூட வேலைக்கு போகலாமா வேண்டாமா என்று பரிசோதித்து கூறுவார்கள். ஆனால் சில பெண்கள் தங்களுக்கு பிரசவம் நடந்த ஒருசில வாரங்களிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள். அவ்வாறு வேலைக்கு செல்வது நல்லதா? கெட்டதா? என்பதை பார்ப்போமா!!!

* நிறைய மகப்பேறு மருத்துவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின், ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது நல்லது என்று கூறுகின்றனர். அதிலும் சிசேரியன் பிரசவம் என்றால், தையல் காய்ந்து, குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். அதிலும் அவர்கள் நடக்கும் போது, வேலை செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் தையல் பிரிந்து, கடுமையான வலியை ஏற்படுத்திவிடும். ஆகவே ஓய்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.
* பெண்கள் பிரசவத்திற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வேலைக்குச் சென்றால், அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது. அதிலும், பிரசவத்திற்குப் பின் உடல் நலம் சரியாகாத போது வேலை செய்தால், பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வேலைக்கு நிறைய நாட்கள் விடுமுறை போட் முடியாது என்று நினைப்பவர்கள், பிரசவத்திற்குப் பின் நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு, அதிக நேரம் வேலை செய்வதை தவிர்த்து ஓரளவு செய்து வந்தால், எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கலாம்.
* வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது மிகவும் சிறந்தது. இதனால் வேலையை பார்த்தது போலும் இருக்கும், குழந்தையை பார்த்துக் கொள்வது போலும் இருக்கும். ஆனால் நிறைய பெண்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆள் வைப்பார்கள். அது நல்லதல்ல. தாய் பார்த்துக் கொள்வது போல் எதுவும் வராது. அதுவும் அவ்வப்போது சரியான நேரத்திற்கு குழந்தைக்கு பால் கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், மார்பகப்புற்று நோய் வரும் நிலை ஏற்படும். ஆகவே எதுவோ, குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது.
* எங்கு வேலை செய்தாலும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பின் நிறைய ஓய்வு உடலுக்கு வேண்டும். சாதாரணமாக இருக்கும் போது அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, அப்போது செய்ய முடிந்த வேலை கூட, சில சமயங்களில் செய்ய முடியாமல் போகும். ஏனென்றால் அவ்வளவு உடல் சோர்வாக இருக்கும்.
ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, உங்கள் பிரசவத்திற்குப் பிறகு என்ன செய்வதென்று முடிவெடுங்கள்.



Click it and Unblock the Notifications
