For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகால தோல் நோய்களை பிரசவத்திற்கு பின் கவனிக்கலாம்!

By Mayura Akilan
|

Home Remedies
கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதால் கர்ப்பிணிகளின் தோலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முகத்தில் கருமை படர்வதோடு சில சமயம் பருக்களும் ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தில் இவற்றைப் போக்க ஏதாவது உபயோகித்தால் அதிக அளவில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்று அஞ்சி விட்டுவிடுவார்கள். பிரசவத்திற்குப் பின்னர் இதன் மீது கவனம் செலுத்தினால் கண்டிப்பாக தோல் நோய்களில் இருந்து உடலை பழைய நிலைக்கு மீட்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கருமை போக்கும் ஆலிவ் எண்ணெய்

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருப்பினும் சிலருக்கு கருமை நிறம் தங்கிவிடும். இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதைதேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.

ஆலிவ் எண்ணெய் முகத்தின் கருமையை போக்கி பளபளப்பாக்கும். இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சு எடுத்துக்கொண்டு அதில் தொட்டு முகம் முழுவதும் அப்ளை செய்யவும். பின்னர் 25 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். தினசரி இதனை செய்து வர முகத்தின் கருமை முற்றிலும் மாறி முகம் பொலிவடையும்.

ஜோஜோபா எண்ணெய்

கர்ப்பகாலத்தில் உடல்களில் தசைகள் விரிவடைகின்றன. பிரசவத்திற்குப் பின்னர் அவை சுருங்குவதால் வரிகள் ஏற்படும். இந்த தழும்புகளைப் போக்க சில எண்ணெய்கள் உள்ளன. ஜோஜோபா எண்ணெயை தடவி மசாஜ் செய்தால் வரிகள் மறையும்.

வரிகள் அழுத்தமாக இருந்தால் ஒரு மாதங்களுக்கு தொடர்ந்து ஜோஜோபா எண்ணெயை பூசி 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் படிப்படியாக தழும்புகள் மறையும்.

ஆவகேடோ எண்ணெய்

அவகேடோ எண்ணெய் கருமையை போக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது. கர்ப்பகால தழும்புகளை போக்கவும் இது சிறந்த எண்ணெய். ஆவகேடோ எண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனை சருமத்தில் கருமை உள்ள இடங்களிலும், வரி உள்ள இடங்களிலும் அப்ளை செய்யவும். மிருதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒரு மாதம் தொடர்ந்து இதுபோல் செய்து வரலாம். பிரசவ கால தழும்புகள் மறையும்.

English summary

Home Remedies for Skin Problems After Childbirth | கர்ப்பகால தோல் நோய்களை பிரசவத்திற்கு பின் கவனிக்கலாம்!

While skin problems are very common after childbirth, they are often embarrassing and uncomfortable for many women. However, medical treatments for the most common skin problems are expensive and often invasive. Luckily, there are a few natural home treatments that can help you remedy skin problems often associated with childbirth. These home remedies have not been approved by the FDA however, so consult your doctor before starting any new treatments.
Story first published: Tuesday, September 11, 2012, 14:31 [IST]
Desktop Bottom Promotion