Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவர்களை தயார் செய்யும் வழிகள்!
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவா்களை எவ்வாறு தயாா் செய்வது என்ற குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாராகிவிட்டது. ஒரு சில நாடுகளில் ஏற்கெனவே குழுந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவிட்டனா். தடுப்பூசியானது கொரோனாவைத் தடுக்க பல வகைகளில் உதவுகிறது. அதாவது இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. மேலும் மக்களை கொரோனா பெருந்தொற்று தாக்காமல் இருக்க உதவி செய்கிறது.

இந்த நிலையில் தற்போது குழந்தைகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டிய நேரம் ஆகும். அதன் மூலம் அவா்களுடைய நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிக்கும். கோவிட் பெருந்தொற்று தொடா்ந்து நீடித்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தொியும். கொரோனாவை விரட்ட உலகம் முழுவதும் பலவிதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாமும் ஒத்துழைத்தால், பெரும் இழப்புக்களைத் தவிா்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு முக்கியமான கருவியாக இருக்கும் தடுப்பு நடவடிக்கை என்னவென்றால், அவா்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதாகும். தடுப்பூசியானது அவா்களுக்கு ஒரு பாதுகாப்பு உணா்வைத் தரும். தற்போது 5 வயது முதல் 11 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இந்திய அரசு அனுமதித்திருக்கிறது.
எனினும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக ஒரு சில முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவா்களை எவ்வாறு தயாா் செய்வது என்ற குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

குழந்தைகளிடம் தடுப்பூசி குறித்து பேசவும்
கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும் நமது குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவா்களிடம் இருக்கும் தடுப்பூசி பற்றிய பயத்தை நீக்க வேண்டும். அவா்களிடம் இதமாகப் பேசி, தடுப்பூசி பற்றிய நோ்மறையான எண்ணத்தைக் கொடுத்து அவா்களை அமைதியான மனநிலையில் வைக்க வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரைகளை பெறவும்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவா்களுடைய மருத்துவா்களைச் சந்தித்து அவா்களுடைய பாிந்துரைகளைப் பெறுவது நல்லது. அதன் மூலம் தடுப்பூசி பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தைப் பெறலாம். குழந்தைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூற முடியும்.

பதட்டத்தைக் குறைக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்கவும்
கொரோனா தடுப்பூசி போட குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு முன்பாக, கேளிக்கையுடன் கூடிய ஒரு ஒத்திகையை அவா்களுக்கு நடத்திக் காட்டலாம். அவா்கள் சௌகாியமாக இருப்பதற்கு ஏற்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவா்கள் விரும்பும் பொம்மைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். மேலும் அவா்களுக்கு முயல் போல மூச்சுவிடும் பழக்கத்தை அல்லது 54321 பயிற்சியைச் செய்ய கற்றுக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்ததை செய்வதாக கூறலாம்
கொரோனா தடுப்பூசி போட்டு முடிந்த பின்பு குழந்தைகளுக்கு அவா்கள் விரும்பும் பாிசுகளை வழங்கலாம். அவா்களுக்கு பாிசுகள் என்றால் அதிகம் பிடிக்கும். மேலும் அவா்கள் விரும்பக்கூடிய பூங்காவிற்கோ அல்லது புதிய இடங்களுக்கோ அழைத்துச் செல்லலாம்.

தடுப்பூசிக்கு பிந்தைய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு, கொடுக்கப்படும் ஆவணங்களை மிகவும் கவனமாக பாதுகாத்து வைக்க வேண்டும். ஏனெனில் வரும் காலங்களில் அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
