For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா? இதோ அதற்கான தீர்வுகள்!

தற்போது லாக் டவுன் காலகட்டத்தில் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடி வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையில் மூழ்கி இருக்கின்றனர். குழந்தைகளின் நேரம் மொபைல், ஐபேட் என்று நீண்டுக் கொண்டே இருக்கிறது.

|

தற்போது லாக் டவுன் காலகட்டத்தில் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடி வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையில் மூழ்கி இருக்கின்றனர். குழந்தைகளின் நேரம் தொலைக்காட்சி, மொபைல், ஐபேட் என்று நீண்டுக் கொண்டே இருக்கிறது. இவ்வகை திரையில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் வறட்சி, அரிப்பு, மயோபியா போன்ற பாதிப்புகள் உண்டாகும் என்பதை நம்மில் பலரும் அறிவோம். இந்த வகை பாதிப்பு குழந்தையின் கண் பார்வையை பாதிக்கும்.

Ways To Limit Your Child’s Screen Time During The Lockdown

2-5 வயது வரை உள்ள குழந்தைகள் திரைகளைக் காணக்கூடிய நேரம் ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளின் கண்களை பாதுகாக்க சில குறிப்புகளை பின்பற்றலாம். அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி கண்களை சிமிட்டச் சொல்லுங்கள்

அடிக்கடி கண்களை சிமிட்டச் சொல்லுங்கள்

உங்கள் பிள்ளைகள் நீண்ட நேரம் திரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு வினாடி கூட கண் சிமிட்ட மாட்டார்கள். கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் வெறித்துப் பார்ப்பதால் கண்ணின் ஈரப்பதம் குறைந்து வறண்டு விடும். கண் வறட்சி ஏற்பட்டால் கண் தொடர்பான பல பாதிப்புகள் உண்டாகலாம். சில நேரம் தலைவலி மற்றும் பார்வை மங்குதல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக பிள்ளைகள் கூறலாம். அதனால் திரைகளை காணும்போது அவ்வப்போது கண்சிமிட்ட அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

பல்வேறு செயல்பாடுகளில் உங்கள் குழந்தையை ஈடுபடச் செய்யுங்கள்

பல்வேறு செயல்பாடுகளில் உங்கள் குழந்தையை ஈடுபடச் செய்யுங்கள்

வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத இந்த காலகட்டத்தில் வீட்டிற்குள் குழந்தைகளை பொழுதுபோக்க வைப்பது மிகவும் கடினமாக இருக்கும். எப்போதும் போரடிக்கிறது என்று அவர்கள் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பொழுதை போக்க உங்கள் மொபைல்போன் போன்றவற்றைக் கொடுப்பதை விட கைவினைப் பொருட்கள் செய்ய அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அல்லது விடுகதை அல்லது புதிர்களை தீர்ப்பது , தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, புத்தகம் படிப்பது போன்ற பொழுதுபோக்கை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

அவ்வப்போது அவர்களுக்கு இடைவேளை விடுங்கள்

அவ்வப்போது அவர்களுக்கு இடைவேளை விடுங்கள்

படிப்பதற்காக அல்லது ப்ராஜெக்ட் செய்வதற்காக அவர்கள் திரையை பார்த்துக் கொண்டிருந்தாலும் நீண்ட நேரம் அதனை செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். 20-20-20 என்ற விதியை அவர்களுக்கு சொல்லுங்கள். அதாவது 20 நிமிடம் திரையை பார்த்தால் அடுத்த 20 நிமிடம் 20 மீட்டர் தொலைவில் உள்ள வேறொன்றை அவர் பார்க்க வேண்டும். இதனால் கண்ணுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும். படுக்கை அறையில் அல்லது இரவு உணவிற்கு முன்னர் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற சில விதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அவர்கள் அங்க நிலைகளை சரி செய்யுங்கள் மற்றும் திரையின் தூரத்தை சரி செய்யுங்கள்

அவர்கள் அங்க நிலைகளை சரி செய்யுங்கள் மற்றும் திரையின் தூரத்தை சரி செய்யுங்கள்

நீண்ட நேரம் சரியில்லாத அங்க நிலையில் அமர்ந்து கொண்டு போன் அல்லது லேப்டாப் பயன்படுத்துவதால் கண்களுக்கு தீங்கு ஏற்படுவது மட்டுமில்லாமல் , மூட்டுகளிலும் வலி ஏற்படலாம். அவர்கள் பயன்படுத்தும் கேட்ஜெட்கள் கண் நிலைக்கு சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்கள் சரியான நிலையில் அமர்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் திரையில் எழுத்துகளின் அளவை அதிகரித்துக் கொண்டு பார்ப்பதால் கண்கள் அதிகம் அழுத்தம் ஏற்படாமல் பார்க்க முடியும்

வெளிச்ச அளவை பரிசோதியுங்கள்

வெளிச்ச அளவை பரிசோதியுங்கள்

உங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையின் வெளிச்சத்தை பரிசோதியுங்கள். குறைவான வெளிச்சம் அல்லது பிளூரோசென்ட் விளக்குகள் உள்ள அறையில் திரைகளை பார்ப்பதால் கண் மிகுந்த அழுத்தத்தை அடையும். மேலும் திரையில் பிரகாசத்தை சரி செய்து கொள்ளுங்கள் மற்றும் திரையில் பின்புல நிறத்தை கூல் க்ரே போன்ற நிறத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Limit Your Child’s Screen Time During The Lockdown

Children are spending more hours watching screen during lockdown. Here is what you need to do.
Desktop Bottom Promotion