Just In
- 1 hr ago
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
- 1 hr ago
தம்பதிகள் குண்டா இருந்தா குழந்தை பிறக்காதா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- 2 hrs ago
குளிர்காலத்தில் கிடைக்கும் இந்த 'ஒரு' காய் உங்க இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க உதவுமாம்!
- 3 hrs ago
இந்த பொருட்களை இரவில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?
Don't Miss
- News
ஈரோடு இடைத் தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்! அண்ணன் சொன்னால் ஓகே தான்! இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த மாஜி!
- Movies
படத்தின் ரிசல்ட் நம்ம கையில் இல்லை.. கோபத்துடன் பதிலடி கொடுத்த வாரிசு பட இயக்குநர்!
- Sports
திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. டாம் லேதமுக்கு பாடம் புகட்டிய இஷான் கிஷான்.. ஷாக் ஆன அம்பயர்கள்!
- Finance
தங்கம் விலை அதிகரிப்பால் இப்படி ஒரு நல்ல விஷயமும் இருக்கா.?
- Automobiles
இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!
- Technology
ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
பெற்றோர்களே! உங்க குழந்தைகளை உலகம் தெரிந்தவர்களாக வளர்ப்பது எப்படி தெரியுமா?
குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கு கையேடு எதுவும் இல்லை. மேலும் குழந்தையின் தன்மை, குடும்பக் காரணிகள் மற்றும் பிற காரணங்களைக் கருத்தில் கொண்டு அதை உடைக்கும்போது அது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் கடமையாக தெரிகிறது. உள்முக சிந்தனை கொண்ட குழந்தையை வளர்ப்பது எளிதான வேலை அல்ல. வெளியில் செல்லாமல், யாருடனும் பேசாமல் தனிமையிலே இருக்கும் நபர்களை நாம் உள்முக சிந்தனையாளர்கள் என்கிறோம். உங்கள் உள்முக சிந்தனையுள்ள குழந்தைக்கு உலகில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை கற்பிப்பது மற்றும் வெளி உலகத்திற்கு ஏற்ப அவர்களை சரிசெய்ய உதவுவது மிகவும் கடினம். இந்த பிஸியான வாழக்கையில், உள்முக சிந்தனையாளராக இருப்பது மிகவும் கடினம்.
உள்முக சிந்தனை கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். ஏனெனில் அது எவ்வளவு முக்கியமானது மற்றும் வெளி உலகம் பற்றி அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உள்முக சிந்தனை கொண்ட உங்கள் குழந்தைகளுக்கு வெளி உலகத்தை சமாளிக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தோல்வியுற்றவர்களாக பார்க்காதீர்கள்
உள்முக சிந்தனையாளர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். வெளிப்புற சூழலில் ஒன்றிணைக்க இயலாமல் இருப்பதால், இந்த நபர்கள் மற்றவர்களை விட தாழ்ந்தவர்கள் இல்லை. உங்கள் குழந்தை உள்முகமான இயல்பைச் சமாளிக்க உதவும் பணியில் நீங்கள் இறங்கும்போது, அவர்களை தோல்வியுற்ற நபர்களாகப் பார்க்காதீர்கள். ஒரு வழிகாட்டியாகவும், பாதுகாவலராகவும், உள்முகமாக இருப்பது என்பது ஒரு தொடர்புடைய நோக்கத்திற்காகச் செலுத்தப்படக்கூடிய ஒரு பலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்ளுங்கள்
ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு குழந்தை உள்நோக்கத்தை வெல்ல உதவும் முதல் மற்றும் முக்கியமான படியாகும். மற்றவர்களிடம் பேசுவது கடினமாக இருக்கும் நபர்களுடன் பழகும்போது, ஒரு குழந்தைக்கு ஒரு அடி எடுத்து வைப்பது எப்போதும் நல்லது. அவர்களின் இயல்பான நடத்தையைப் பற்றி சண்டையிடுவதற்குப் பதிலாக அவர்களை புரிந்துகொள்ளுங்கள். இது அவர்களின் இயற்கையான குணம், நீங்கள் அதை எதுவும் செய்ய முடியாது அல்லது நீங்கள் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உணர்ச்சி வெளிப்பாட்டைக் கண்டறியவும்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்குகள் இருக்கலாம். இவை உணர்ச்சிகளில் இருந்து விடுபட உங்கள் குழந்தைகளுக்கு உதவும் சரியான வழி. உங்கள் குழந்தையிடம் அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது யோகா, ஓவியம், இசை, பாடல் அல்லது புதிய இடங்களுக்கு பயணம் செய்வது போன்ற எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பேச அவர்களை ஊக்குவிக்கவும்
உங்கள் குழந்தை பிரைவசியை விரும்பினால், அதை அவர்களுக்கு கொடுங்கள். இந்த குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணருவதால் அவர்களின் பிரைவசியை நீங்கள் ஆக்கிரமிக்க வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்காமல் படிப்படியாக அவர்களின் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.

அவர்களை கட்டாயபடுத்த வேண்டாம்
நீங்கள் கையாள்வது மனித இயல்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அணுகுமுறையில் மென்மையாக இருங்கள் மற்றும் முதலில் உங்கள் குழந்தையுடன் நம்பிக்கையின் அளவை உருவாக்க முயற்சிக்கவும். உங்கள் முயற்சியின் உண்மைத்தன்மையை உங்கள் பிள்ளை புரிந்து கொள்ள ஒரு நேரம் உருவாகும். மறுபுறம் குழந்தைகளை கட்டாயபடுத்துவது அவர் வெளி உலகத்தை ஏற்றுக்கொள்வதை சிதைப்பது மட்டுமல்லாமல், அது உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவையும் சிதைக்கக்கூடும்.