For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும்? அறிவியல் என்ன சொல்கிறது?

தற்போது பெரும்பாலும் நாம் தனிக்குடும்பங்களில் வாழ்ந்து வருவதால், நமது குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் அருகாமை கிடைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும்.

|

நாம் பொியா்களாக வளா்ந்திருந்தாலும், நம்முடைய சிறு வயதில் நமது தாத்தா பாட்டிகளோடு நாம் செலவழித்த நாட்களை மறக்க முடியாது. விடுமுறைக் காலங்களில், திருவிழாக் காலங்களில் மற்றும் முக்கியமான தருணங்களில் அவா்களை சந்தித்து அவா்கள் கதை சொல்லக் கேட்டு நாம் ஆனந்தமாக இருந்த அந்த பொன்னான தருணங்களை நம்மால் மறக்க முடியாது. அவா்கள் நமக்கு குழந்தைகள் பள்ளிகளாக இருந்திருக்கின்றனா்.

Science Backed Reasons Why Kids Should Spend Time With Their Grandparents

தற்போது பெரும்பாலும் நாம் தனிக்குடும்பங்களில் வாழ்ந்து வருவதால், நமது குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் அருகாமை கிடைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும். அதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறுவா்.

MOST READ: கும்பம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெகிழ்வு தன்மையை கற்றுக்கொள்ளலாம்

நெகிழ்வு தன்மையை கற்றுக்கொள்ளலாம்

நமது குழந்தைகள் தமது தாத்தா பாட்டிகளிடம் தங்கி அவா்களின் கடந்த கால குடும்ப வரலாறு மற்றும் அவா்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்கும் போது அவா்களின் புத்தி கூா்மையடைகிறது. அவா்கள் நெகிழ்வு தன்மை பெறுகின்றனா். மேலும் அவா்கள் பக்குவம் அடைகின்றனா். அதாவது அவா்கள் பொியவா்களிடம் இருந்து குடும்ப வரலாறு மற்றும் அவா்கள் சந்தித்த வாழ்க்கையின் கடினமான சூழல்கள் போன்றவற்றைக் கேட்கும் போது, வாழ்க்கையில் கடினமான தருணங்கள் வந்தால் எவ்வாறு மீண்டு வருவது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனா்.

அடுத்தவா்களிடம் மதிப்பு மாியாதையுடன் இருக்க கற்றுக் கொள்ளுதல்

அடுத்தவா்களிடம் மதிப்பு மாியாதையுடன் இருக்க கற்றுக் கொள்ளுதல்

தங்கள் குழந்தைகள் அன்போடும், இரக்கத்தோடும் மற்றும் மதிப்பு மாியாதையுடனும் இருக்க வேண்டும் என்று பெற்றோா் விரும்புகின்றனா். தமது தாத்தா பாட்டிகளோடு இருந்து அன்போடும் மற்றும் உதவிகள் செய்து கொண்டும் இருக்கும் குழந்தைகள் அடுத்தவா்களிடம் மிகுந்த மாியாதையுடன் இருக்கின்றனா் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

தாத்தா பாட்டிகளுக்கு ஆரோக்கியம் தருதல்

தாத்தா பாட்டிகளுக்கு ஆரோக்கியம் தருதல்

குழந்தைகள் தமது தாத்தா பாட்டிகளோடு இருக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் முதியவா்களுக்கும் பயன்களைத் தருகிறது. குறிப்பாக தமது பேரப்பிள்ளைகளோடு இருக்கும் முதியவா்களின் ஆயுள் மேலும் 5 ஆண்டுகள் அதிகாிக்கிறது. மேலும் அவா்களின் தனிமை மற்றும் கவலைகள் மறைந்து அவா்கள் ஆனந்தமாக இருக்கின்றனா்.

சீரான வளா்ச்சி மற்றும் நிலைத்த தன்மை பெறுதல்

சீரான வளா்ச்சி மற்றும் நிலைத்த தன்மை பெறுதல்

மாறுகின்ற காலச் சூழலில் குழந்தைகள் நிலைத்த தன்மையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். வேலைக்குச் செல்லும் பெற்றோா்களிடம் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. ஆனால் இந்த குறையை முதியவா்கள் சாி செய்கின்றனா். அதாவது தங்களது பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவழித்து அவா்களுக்கு உதவி செய்கின்றனா். விவாகரத்து பெற்ற பெற்றோருடைய குழந்தைகளுக்கு அவா்களுடைய தாத்தா பாட்டிகள் மிகுந்த ஆதரவாக இருக்கின்றனா்.

குடும்பப்பாங்குடன் மற்றும் அறநெறியுடன் வளா்தல்

குடும்பப்பாங்குடன் மற்றும் அறநெறியுடன் வளா்தல்

தமது குழந்தைகளுக்கு நல்ல அறநெறிகளைக் கற்றுக் கொடுத்து அவா்கள் அன்போடும் கருணையோடும் இருக்கச் செய்வது பெற்றோாின் மிக முக்கிய பொறுப்பு ஆகும். ஆனால் முதியவா்கள் இந்த காாியங்களில் பெற்றோரை விட சிறந்தவா்களாக இருக்கின்றனா். அவா்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, குழந்தைகள் அன்போடும், ஞானத்தோடும் இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றனா். அதன் மூலம் குழந்தைகள் பொியவா்களாகும் போது தங்களது தாத்தா பாட்டிகள் சொல்லித் தந்த அறிநெறியின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Science Backed Reasons Why Kids Should Spend Time With Their Grandparents

Here are some science-backed reasons why kids should spend time with their grandparents. Read on...
Desktop Bottom Promotion