For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களே! உங்க குழந்தைகிட்ட இந்த நடத்தைகள் இருந்தா உடனே கண்டிங்க...இல்லனா அவங்க லைஃப் அவ்வளவுதான்!

சூழ்நிலைக்கு ஏற்ப பொய் சொல்வது பாதிப்பில்லாதது என்று நினைக்கிறோம். ஆனால், உங்கள் குழந்தை உங்களிடம் பொய் கூறினால், அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தவறு.

|

பெற்றோர்களுக்கு, குழந்தைகளை நல்லவர்களாக ஒழுக்கமானவர்களாக வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. சிறுவயது முதலே, குழந்தைகளுக்கு பல விஷயங்களை நாம் கற்பிக்க வேண்டும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். அப்பாவி மற்றும் நேர்மையான குழந்தைகளைப் போலவே, மோசமான நடத்தை கொண்ட குழந்தைகளும் இருக்கலாம். குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பது பெற்றோரின் வளர்ப்பை பொருத்ததே. பெற்றோர்கள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தி குழந்தைகளை கடுமையான கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், குழந்தைகள் தவறாக நடந்துகொள்ளும்போது, உடனடியாக அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டும்.

negative-behaviours-in-kids-parents-should-correct-immediately-in-tamil

பொதுவாக மோசமான நடத்தை என்பது பலரிடம் பொருத்தமற்ற, முறையற்ற, தவறான அல்லது முரட்டுத்தனமான நடத்தை என்று பொருள்படும். அதாவது, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய எதிர்மறை பண்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரியாதைக் குறைவாக இருப்பது

மரியாதைக் குறைவாக இருப்பது

பெற்றோர்களின் முதல் கடமையே பிள்ளைகளுக்கு ஒழுக்கம் மற்றும் மரியாதை பழக்கங்களை சொல்லி தருவது. தேவையில்லாமல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அல்லது வயது வந்தவரிடமோ அல்லது உங்களிடமோ கூட மரியாதை இல்லாமல் பேசுவதும் இதில் அடங்கும். உங்கள் குழந்தை மரியாதை குறைவாக கட்டுக்கடங்காத தொனியில் பேசினால், அவர்களை தனியாக அழைத்துச் சென்று, அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக உடல் ரீதியான தண்டனைகளாக அடிக்க வேண்டாம். அன்பாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் கூற வேண்டும். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

வசதி குறைந்தவர்களை இழிவாகப் பார்ப்பது

வசதி குறைந்தவர்களை இழிவாகப் பார்ப்பது

உங்கள் குழந்தைக்கு அனைவரும் சமம் என்று மதிக்க கற்றுக்கொடுங்கள். எந்த நேரத்திலும் உங்கள் குழந்தை அவர்களை விட குறைவான சலுகை கொண்ட யாரையாவது அவமதிப்பதையோ அல்லது அவமரியாதை செய்வதையோ கண்டால், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்துங்கள். இது தவறு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். குழந்தைகள் எங்கிருந்து வந்தவர்கள், எவ்வளவு பணம், அதிகாரம் அல்லது அந்தஸ்து பெற்றவர்கள் அல்லது வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதனையும் சமமாக மதிக்கவும், சமமாக நடத்தவும் நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமான ஒன்று.

செல்லம் கொடுக்க வேண்டாம்

செல்லம் கொடுக்க வேண்டாம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விரும்பும் அனைத்தையும் பெற விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் உணராதது என்னவென்றால், அதிகப்படியான செல்லம் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லலாம். எனவே, ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு பணம் மற்றும் கடின உழைப்பின் மதிப்பைக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் தங்கள் வெகுமதிகளுக்காக உழைக்கட்டும். மேலும் அவர்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்திற்கும் கற்றுக் கொள்ளவும் நன்றியை தெரிவிக்கவும் உதவுங்கள்.

கொடுமைப்படுத்துதல்

கொடுமைப்படுத்துதல்

உங்கள் குழந்தை குற்றவாளியாக இருந்தாலும், கொடுமைப்படுத்துவதை பொறுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தை துன்புறுத்தப்படுவதை அறிந்துகொள்வது உங்களை எவ்வளவு காயப்படுத்துகிறதோ, அது உங்கள் குழந்தை கொடுமைப்படுத்துபவர் என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் பிள்ளை அவர்களின் உடன்பிறந்தவர்களை கொடுமைப்படுத்துவதையோ அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையோ அல்லது பள்ளியில் யாரையாவது துஷ்பிரயோகம் செய்வதையோ நீங்கள் கண்டால், உடனடியாக அதை கண்டிக்க வேண்டும். உங்கள் குழந்தை எவ்வளவு தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைத்து வருந்துவதைவிட, அவர்களை சரியான பாதையில் கொண்டு வர தேவையான திருத்தங்களை நீங்கள் செய்ய வேண்டும்.

பொய்

பொய்

சூழ்நிலைக்கு ஏற்ப பொய் சொல்வது பாதிப்பில்லாதது என்று நினைக்கிறோம். ஆனால், உங்கள் குழந்தை உங்களிடம் பொய் கூறினால், அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தவறு. அவர்கள் பொய் சொல்லும் ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை சரிய அனுமதித்தால், அது நாள்பட்டதாக மாறலாம் மற்றும் அவர்கள் வளரும்போது நிறைய பிரச்சனைகளை எழுப்பலாம். ஒரு பொய் எவ்வளவு பெரிய பிரச்சனையையும் உருவாக்கும். அது நடக்க வேண்டாம் என நீங்கள் விரும்பினால், உடனடியாக பொய் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று உங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Negative Behaviours In Kids Parents Should Correct Immediately in tamil

Here we are talking about the Negative Behaviours In Kids Parents Should Correct Immediately in tamil.
Desktop Bottom Promotion