For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களா? இந்த உணவுகளைக் கொடுத்து சரி பண்ணலாம்.

குழந்தைகளிடம் கவனக்குறைவு அதிகமாக இருக்கிறதா? துறுதுறுவென்று இருக்கிறார்களா? அவர்களுக்கு ஏடிஹெச்டி உளவியல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பீன்ஸ், வாழைப்பழம், சோயா, சால்மன் மீன். கொட்டைகள், அன்னாசி, ஆளிவி

|

உங்கள் குழந்தை எந்த விசயத்திலையும் கவனமே இல்லாம இருக்கானா? துறு துறுன்னு இருக்கான் ஆனால் தேர்வில் மார்க் எடுப்பதாக இருக்கட்டும். ஒரு வேளையைச் செய்யிறதா இருக்கட்டும் தோத்துப் போறானா? அவனை அடிக்காதீங்க.

Is Child Suffering From Adhd? Make Smart Food Choices For Them

அடித்து வளர்த்தால் சரியாகிவிடுவதற்கு அவன் ஒன்னும் வேண்டுமென்றே இதெல்லாம் செய்யவில்லை. அவனுக்கு எடிஹெச்டி எனும் நோய்க் குறைபாடு இருக்கு. புரியும் படி சொன்னா உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கான் அப்டின்னு அர்த்தம். உணவுக் கட்டுப்பாட்டாலும் அன்பாலும் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவே மருந்து

உணவே மருந்து

ஊட்டச்சத்து நிபுணர்கள் கரைத்துக் குடித்திருந்த அத்துனையும் நம் வீட்டில் அம்மாவின் கைப்பக்குவத்துக்குள்ளே அடங்கி போய் இருந்தது. உடல் சுமையைக் குறைக்க நாகரீக வளர்ச்சிப் பக்கம் போனதே இதற்கான காரணமாகும். ஒழுங்கான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டால் இந்த மனநோயிலிருந்து உங்கள் குழந்தைக்கு விடுதலை அளிக்கலாம்.

Most Read : உங்கள் குழந்தை எப்பப் பாத்தாலும் சேட்டை பண்றானா.. அவனோட ஜாதகம் இங்க இருக்கு படிங்க

திரைப்படங்கள்

திரைப்படங்கள்

தங்கமீன்கள், பசங்க 2, இன்னும் எத்தனை எத்தனை படங்கள் குழந்தைகளின் உளவியல் சார்ந்து வந்தாலும் கூட பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளின் உடல் குறைபாட்டை கணக்கில் கொள்ளாமல் அவர்களை தினமும் அடித்து துன்புறுத்துகின்றனர்.

எடிஹெச்டி

எடிஹெச்டி

எடிஹெச்டி என்பது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சினையாகும். இது பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பெரும்பாலும் பாதிக்கிறது. உங்கள் குழந்தை கவனக்குறைவு, அதீத செயல்பாடு, குறைந்த தன்மதிப்பீடு போன்றவற்றைக் கொண்டிருக்கிறான் என்றால் எடிஹெச்டி கோளாறுக்கு ஆளாகி இருக்கிறான் என்று அர்த்தம்.

குழந்தைகளின் படிப்பை பாதிக்கிறது

குழந்தைகளின் படிப்பை பாதிக்கிறது

இது குழந்தைகளின் சமூகமாக வாழும் திறனையும் கல்வி சார்ந்த அறிவித் திறனையும் தான் அதிகமாக பாதிக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோல்வி அடைகிறான் என்றால் அதற்கு அவன் காரணம் இல்லை. அவன் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

நோய் ஏற்படுவதற்கான காரணம்

நோய் ஏற்படுவதற்கான காரணம்

மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுகிற பாதிப்புகள் தான் இந்நோயிக்கான முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தாயின் குடிப்பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கம் மூலமாகவும் குழந்தைகளுக்கு இவ்வகை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மருந்துகளை நாடலாமா?

மருந்துகளை நாடலாமா?

ஆரம்பத்திலேயே கண்டறிந்து இதைத் தடுக்காவிட்டால் மனநல நோயாக அது மாறிவிடும். அப்படி இறுதிக் கட்டத்தை அடையும் போது மருந்துகளை உட்கொள்ளலாம். ஆனால் அதனால் ஏற்படுகிற பக்கவிளைவுகள் அதிகம். உதாரணமாக நடுக்கம், பிரம்மை, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மற்றும் தீவிர மனநிலை மாற்றங்களுக்கு இந்த மாத்திரைகள் வழிவகுத்துவிடும்.

உணவுக் கட்டுப்பட்டு எதற்கு?

உணவுக் கட்டுப்பட்டு எதற்கு?

உணவுக் கட்டுப்பாடு குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி சிறந்த உணவுகளை தேடி உண்பது குழந்தைகளின் மனநல பாதிப்புகளுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். உதாரணமாக காபி, சர்க்கரை, பால், கோதுமை மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் எடிஹெச்டி பாதிப்புகளின் அறிகுறிகளிலிருந்து சிறந்த பலன்களை அளிக்கிறது.

Most Read: பிறந்த குழந்தைகளுக்கு கொசுவிரட்டிகள் பாதுகாப்பானதா ? இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க

வைட்டமின் பி

வைட்டமின் பி

வைட்டமின் பி உணவுகள் மூளையின் நரம்பு மண்டலங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் பி 6 மூளையின் முக்கியமான இரசாயனங்களை உருவாக்குகிறது. இந்த இரசாயனங்கள் குழந்தையின் நடத்தை மற்றும் கவனத்திறனில் முன்னேற்றத்தை அளிக்கிறது.

உணவு - பீன்ஸ், வாழைப்பழம், சோயா, சால்மன் மீன்

புரதம்

புரதம்

புரத்த உணவுகளில் ட்ரிப்டோபான் என்னும் அமினோ அமிலம் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அமிலம் மூளையிலுள்ள செரோட்டனின் எனும் இராசயத்தை உற்பத்தி செய்கிறது. இந்த இராசயம் குழந்தைகளின் மனக்கிளர்ச்சியை குணப்படுத்துகிறது.

உணவு - கொட்டைகள், அன்னாசிப் பழம் மற்றும் சால்மன் மீன்

ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையில் சிரிப்பு ஹார்மோனை அதிகரிக்கிறது. மருத்துவ முறையிலும் இவ்வகை நோயைக் குணப்படுத்த இதே முறைத் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்நோயின் முக்கிய அறிகுறிகளான அதீத செயல்பாடு, கவனக்குறைவு போன்றவற்றை ஒமேகா கொழுப்பு அமிலங்கள் சரி செய்கிறது.

உணவு - சால்மன் மீன், துணா மீன், ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், அவகோடா

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை அதிகமுள்ள உணவுகள்

சர்க்கரை இவ்வகை பாதிப்புள்ள குழந்தைகள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் போது ஓய்வற்றவர்களாகவும், அமைதியற்றவர்களாகவும் மாறி விடுகிறார்கள். மேலும் அதிக சர்க்கரை பயன்பாடு குழந்தைகளுக்கு கவனக்குறைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெறிவிக்கின்றன.

கோதுமை சார்ந்த உணவுகள்

கோதுமை சார்ந்த உணவுகள்

கோதுமை சார்ந்த உணவுகளில் கிளட்டன் எனும் புரதப் பொருள் உள்ளது. ஏடிஹெச்டி பாதிப்புள்ள குழந்தைகள் இதை உண்ணும்போது செரிமானப் பிரச்சினைகளை மேற்கொள்கிறார்கள். மேலும் இது வயிற்றுப் போக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வீக்கம், வாந்தி, மோசமான வளர்ச்சி, வளர்ச்சி தாமதங்கள் மற்றும் கற்றல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

பால் சார்ந்த பொருட்கள்

பால் சார்ந்த பொருட்கள்

பசும் பாலில் கேசின் என்ற புரதம் இருக்கிறது. இந்த புரதம் செரிமான பிரச்சினைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. மேலும் இது உளவியல் பிரச்சினைகளுக்கும் அடித்தளமிடுகிறது. எனவே பால் சார்ந்த எந்தப் பொருளையும் குழந்தைக்கு அளிக்காமல் இருப்பது நல்லது.

காபி

காபி

காபி பருகுவதால் நியாபக சக்தி, கவனிக்கும் திறன் போன்றவை அதிகரிக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவலை மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

Most Read: கர்ப்பகாலத்தில் அதிமதுரமா வேணவே வேணாம் ? கருச்சிதைவுக்கு நீங்களே காரணம் ஆகாதீர்கள்

பாட்டிலில் அடைத்துவைக்கப்பட்ட உணவுகள்

பாட்டிலில் அடைத்துவைக்கப்பட்ட உணவுகள்

பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், காய்கறிகள், பீன்ஸ், போன்றவற்றில் நைட்ரேட்கள் அதிகமாக உள்ளன. இவை சர்க்கரை வியாதியையும் குறிப்பிட்ட வகை புற்றுநோயையும் உண்டாக்க வல்லது. எனவே இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Child Suffering From Adhd? Make Smart Food Choices For Them

ADHD is a psychological and behavioural disorder that interferes with your child’s social skills and academic performances. However, the right foods can help ease the symptoms.
Story first published: Tuesday, August 6, 2019, 16:14 [IST]
Desktop Bottom Promotion