Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உங்க குழந்தையை மாஸ்க் போட வைக்கவே முடியலையா? அப்ப இத படிங்க…
குழந்தைகளை முக கவசம் அணிய செய்வது மிக மிக கடினம் தான். பெரியவர்களாகிய நமக்கே முக கவசம் சிறிது அசௌகரியமாக இருக்கும் போது, சிறு குழந்தைகளுக்கு அதை எப்படி செய்ய தோன்றும்.
கொரோனா தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அடிக்கடி கை கழுவுவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முக கவசம் அணிவது ஆகியவை இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானவை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களுக்கு இதனை பின்பற்றுவது மிகவும் சுலபம். ஆனால், குழந்தைகளை இவற்றையெல்லாம் பின்பற்ற செய்வது மிகவும் கடினமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது.

உலகில் இத்தகைய அசாதாரண நோய் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரியவர்களே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து தான் நிற்கின்றனர். இந்நிலையில், குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் எடுத்து கூறி புரிய வைப்பது என்பது பெரும் சவால் தான். அதிலும் குழந்தைகளை முக கவசம் அணிய செய்வது மிக மிக கடினம் தான். பெரியவர்களாகிய நமக்கே முக கவசம் சிறிது அசௌகரியமாக இருக்கும் போது, சிறு குழந்தைகளுக்கு அதை எப்படி செய்ய தோன்றும். அதிலும். பள்ளிகள் திறப்பு குறித்த செய்தி எப்போது வெளிவரும் என்ற பதற்றமும் பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. எனவே, குழந்தைகளுக்கு தற்போதைய சூழலை எப்படியாவது புரிய வைக்க வேண்டியது பெற்றோராகிய ஒவ்வொருவரின் கடமையாகும்.

குழந்தைகளுக்கு முக கவசம்
பள்ளிகள் திறந்தால் குழந்தைகள் எப்படியும் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் தான். இதுவே அனைத்து பெற்றோரின் பெரும் கவலையாக மாறிவிட்டது. எனவே, அனைத்து பெற்றோரின் கவலைகளையும் போக்கும் வகையில், குழந்தைகளை முக கவசம் அணிய செய்வது குறித்த சில ஆலோசனைகளை நிபுணர்கள் கூறியுள்ளனர். அவற்றை பற்றி தான் தற்போது தங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம். முழு விவரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.

முக கவசம் அணிவதன் நன்மைகள் குறித்து தெரியப்படுத்துங்கள்
முக கவசம் அணிய குழந்தைகளை ஒருபோதும் வற்புறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ வேண்டாம். அதற்கு பதிலாக, முக கவசங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளை அவர்களுக்கு விளக்கி, அதனை அணிய செய்ய அவர்களை ஊக்குவிக்குவியுங்கள். தற்போதைய ஆபத்தான தொற்றுநோயைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் சாதாரணமாக பேசுங்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்களுக்கு புரியும் மொழியில் விளக்குங்கள்.
இது காலத்தின் தேவை என்றும், நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள். மேலும், அவர்கள் தங்கள் முக கவசத்தை தேர்வு செய்ய அனுமதியுங்கள். அப்போது தான், அவர்களுக்கு அதன் மீது ஓர் ஆர்வமும், அதனை பயன்படுத்துவதற்கான உற்சாகமும் உண்டாவதோடு, அதன் மீது தன்னுடையது என்ற உரிமையை உணர தொடங்குவர்.

இப்போது இருந்தே பயிற்சி செய்யத் தொடங்குங்கள்
முக கவசம் அணிய பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை மிகவும் தொந்தரவு செய்யவோ அல்லது குழந்தைகளை கட்டாயப்படுத்தவோ வேண்டாம். அதை வேடிக்கையான முறையில், அவர்களே ஆர்வம் காட்டும் விதத்தில் செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஒரு முகமூடி அல்லது துணியைக் கொடுத்து, அதை அவர்களுக்கு பிடித்தமான பொம்மைகளுக்கு அணிய செய்யுங்கள்.
அதை எப்படி அணிவதென்று நீங்களே அவர்களுக்கு செய்து காட்டுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஜெராக்ஸ் எடுத்தது போல் செய்வார்கள். எனவே, நீங்களே முக கவசம் அணியவில்லை என்றால், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களை நம்ப வைப்பது மிகவும் கடினமாகிவிடும்.
ஆனால், முக கவசம் அணிவது போன்ற புதிய இயல்பைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், முககவசத்தை அணியும்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவென்று அவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கான வேறு வழிகளைக் காண முடியும்.

சிறு குழந்தைகளுக்கு முக கவசம் பாதுகாப்பானதா?
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) புதிய வழிகாட்டலை வெளியிட்டுள்ளது. இது 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகள், அடிப்படை சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் உட்பட, அனைவரும் பாதுகாப்பான முறையில் முக கவசங்களை அணியலாம் என்று கூறுகிறது.
முக கவசங்கள் உங்கள் குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். குறிப்பாக அவர்கள் மற்ற குழந்தைகளுடன் இருக்கும் போது இது சிறந்த பாதுகாப்பு முறையாகும். இது கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க உதவலாம் என்றும் ஏஏபி கூறுகிறது.
பெரியவர்களைப் போலவே, குழந்தைகளும் முக கவசத்தை அவர்களுக்கு தேவைப்படும் நேரம் வரை அணியலாம் என்று ஏஏபி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்
குழந்தைகளை முக கவசம் அணிய வைப்பது குறித்து பெற்றோருக்கு பல கவலைகள் உள்ளன. முக கவசம் குழந்தைகளுக்கு சுவாசிக்க கடினமாக இருக்கும் அல்லது அவர்களின் நுரையீரல் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கின்றனர். மேலும், சிலர் குழந்தைகள் முக கவசம் அணிந்தால் பள்ளியில் சரியாக கவனம் செலுத்த மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். ஏஏபி கருத்துப்படி இவை அனைத்துமே கட்டுக்கதைகள் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











