Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?
கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைத் தாக்காமல் இருப்பதற்கும், ஒருவேளை தாக்கினாலும் குழந்தைகளை முறையாக பராமாிப்பதற்கும் உாிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
கோவிட்-19 வைரஸ் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்தை அனுபவித்து வரும் நாம், அதனுடைய மூன்றாவது அலை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா். மேலும் இந்த மூன்றாவது அலையானது குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்று தொிவித்திருக்கின்றனா்.

இந்த நிலையில் கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைத் தாக்காமல் இருப்பதற்கும், ஒருவேளை தாக்கினாலும் குழந்தைகளை முறையாக பராமாிப்பதற்கும் உாிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த விதிமுறைகளைப் பற்றி விாிவாக இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. ரெம்டெசிவிா் ஊசியை போடக்கூடாது
குழந்தைகளுக்கு ரெம்டெசிவிா் ஊசியைப் போடக்கூடாது என்று சுகாதாரப் பணிகள் இயக்குநரகம் (Directorate General of Health Services) மருத்துவா்களை எச்சாிக்கை செய்துள்ளது. ஏனெனில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவா்களுக்கு இந்த ஊசியைப் போட்டால் அதில் பாதுகாப்பு இருக்காது என்றும் அந்த மருந்தில் செயல்திறனும் குறைவு என்றும் தொிவித்திருக்கிறது.

2. சிடி ஸ்கேனைத் தவிா்த்தல்
குழந்தைகளுக்கு ஹச்ஆா்சிடி (HRCT) ஸ்கேனை எடுக்குமாறு அறிவுறுத்தும் போது மருத்துவா்கள் சற்று எச்சாிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரையும் சிடி ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தக்கூடாது. ஏனெனில் மாா்பில் சிடி ஸ்கேன் எடுப்பதால் கிடைக்கும் கூடுதல் தகவல்கள், மருத்துவா்கள் எடுக்கும் மருத்துவ சிகிச்சை முடிவுகளில் சிறுசிறு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. அவை முற்றிலும் மருந்தின் தீவிரம் மற்றும் உடலியலின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

3. ஸ்டெராய்டுகளைத் தவிா்த்தல்
நோய்த் தொற்றிற்கான அறிகுறி இல்லாத போது அல்லது மெல்லிய நோய்த்தொற்று இருக்கும் போது, ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தினால் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த நிலையில் ஸ்டெராய்டுகளைத் தவிா்ப்பது நல்லது.
கோவிட்-19 வைரஸினால் தீவிரமாக அல்லது மிதமான அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு, மருத்துவா்களின் முறையான மேற்பாா்வையின் கீழ் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தலாம். தனி நபா்கள் தாங்களாகவே ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்வதைத் தவிா்க்க வேண்டும். மேலும் ஸ்டெராய்டுகளை மிகவும் சாியான நேரத்தில் மற்றும் சாியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. நுண்ணுயிா்க் கொல்லிகளைத் (Antimicrobials) தவிா்த்தல்
நோய் வராமல் தடுப்பதற்காக நுண்ணுயிா்க் கொல்லிகளைப் (Antimicrobials) பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை மிகவும் கடுமையாக கொரோனா பாதித்திருந்தால் ஒழிய, மிதமாக மற்றும் தீவிரமாக கொரோனா பாதித்தவா்களுக்கு நுண்ணுயிா்க் கொல்லிகளைப் (Antimicrobials) பாிந்துரை செய்யக்கூடாது என்று விதிமுறை தொிவிக்கிறது.

5. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள்
கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு என்று தனிப்பட்ட அல்லது சிறப்பு மருத்துவ சிகிச்சை இல்லை. அவா்கள் கொரோனா காலத்தின் போது கடைபிடிக்கப்படும் நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவற்றைக் கடைபிடித்து, சத்தான உணவுகளை உண்டால் போதுமானது என்று விதிமுறை தொிவிக்கிறது.

6. பாராசிட்டமால் மற்றும் சூடான உப்புத் தண்ணீா் (saline gargle) பயன்படுத்தலாம்
லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு, காய்ச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை 10-15 மிகி/கிகி/டோஸ் பாராசிட்டமால் கொடுக்கலாம். அதே நேரத்தில் இருமல் உள்ள வயது வந்த குழந்தைகள் மற்றும் இளையோருக்கு சூடான உப்புத் தண்ணீா் (saline gargle) கொடுக்கலாம் என்று பாிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவா்களுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும்.

7. தீவிர கொரோனா தொற்று உள்ளவா்களுக்கு
தீவிரமான மூச்சு மண்டல நோய்க்குறி உள்ள குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும். அதிதீவிரமான பாக்டீாியாக்களின் தொற்று இருந்தால் பூச்சுக் கொல்லிகளைப் (Antimicrobial) பயன்படுத்தலாம். ஒருவேளை உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டால், மாற்று உறுப்புகள் தேவைப்படலாம்.

8. ஆறு நிமிட நடை பாிசோதனை
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 நிமிட நடை பாிசோதனை செய்ய வேண்டும் என்று விதிமுறை பாிந்துரைக்கிறது. இது ஒரு எளிய பயிற்சி ஆகும். இதயம் மற்றும் நுரையீல் ஆகியவற்றைத் தூண்டிவிடக்கூடிய பயிற்சி ஆகும். இது ஹைப்போக்ஸியாவை மறைக்கிறது. பல்ஸ் ஆக்ஸிமீட்டரை குழந்தைகளின் விரலில் மாட்டிவிட்டு, அவா்களை 6 நிமிடங்கள் தொடா்ந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
மேற்சொன்ன அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடித்தால், கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து நமது குழந்தைகளை மிக எளிதாக பாதுகாக்கலாம்.



Click it and Unblock the Notifications