Latest Updates
-
வாஸ்து படி உங்க பர்ஸில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு எப்பவுமே போகாதாம் -
செட்டிநாடு மாங்காய் கார குழம்பு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - செமையா இருக்கும் -
குரு-செவ்வாய் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
பூமியின் ரகசிய 'தங்க தொழிற்சாலையை' கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்: எந்த இடத்தில் தெரியுமா? -
5 தக்காளியும், 3 வரமிளகாயும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் -
அடிக்கிற வெயிலுக்கு 1 கப் ரவை இருந்தா.. இப்படி ஒருவாட்டி வத்தல் செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்.. -
வாஸ்துப்படி வீட்டில் இந்த 5 பொருட்களை வாங்கி வையுங்க.. பணப் பிரச்சனையே வராது! -
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.!
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் 'தொடர் வாந்தி நோய்க்குறி' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!
குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பல முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் அதனை எளிதாக புறக்கணிக்கக் கூடாது . இதற்கு தொடர் வாந்தி நோய்க்குறி என்னும் சைக்ளிக் வாமிட்டிங் சின்ரோம் என்னும் பாதிப்பு காரணமாக இருக
ஒரு குழந்தையோ அல்லது பெரியவரோ ஒருமுறை வாந்தி எடுத்தால் அது ஒரு பிரச்சனை என்று மருத்துவரிடம் செல்வதில்லை. உடனே வாந்தியைப் போக்க சில எளிய தீர்வுகளை முயற்சிப்பது வழக்கம். இருப்பினும் ஒருமுறைக்கு மறுமுறை அல்லது மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தால் அதற்கான காரணத்தை நாம் யோசிக்கத் தொடங்குவோம். குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பல முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் அதனை எளிதாக புறக்கணிக்கக் கூடாது . இதற்கு தொடர் வாந்தி நோய்க்குறி என்னும் சைக்ளிக் வாமிட்டிங் சின்ரோம் என்னும் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

பொதுவாக இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ளது. தொடர் வாந்தியுடன் கூடிய குமட்டல் காரணமாக குழந்தையால் எதையும் சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இந்த நோய்க்குறிக்கு சரியான காரணம் எதுவும் இல்லை, ஆனால் சில குறிப்பிட்ட உணவுகள் இதனை மேலும் அதிகமாக்குகின்றன. இதனை வயிற்று மைக்ரைன் என்றும் கூறுவர், காரணம் இந்த நோய்க்குறியால் பாதிக்கப்படும் நபர் மிக அதிக வயிற்று வலியை அனுபவிப்பார்.

குழந்தைகளுக்கு பொதுவாக இந்த பாதிப்பு உண்டாகிறது
பொதுவாக 4 முதல் 8 வயது குழந்தைகள் தொடர் வாந்தி நோய்க்குறியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிறந்து 6 நாட்களே ஆன கை குழந்தைகள் மற்றும் 8 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் ஆகியோர் சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றனர். 70 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்களும் சில நேரங்களில் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பிள்ளைகள் வளர்ந்தபின் இந்த பாதிப்பு தானாகவே மறைந்து விடக்கூடும். பொதுவாக ஒரு நபர் உட்கொள்ளும் உணவு வாந்தி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது, ஆனால் அதுவே இரண்டு முறைக்கு மேல் வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டால் அது ஆரோக்கியத்தில் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.

தொடர் வாந்தி நோய்குறிக்கான அறிகுறிகள்:
தொடர் வாந்தி நோய்குறிக்கான அறிகுறிகள் சிலவற்றை இப்போது காண்போம்.
* ஒரு குழந்தை அல்லது பெரியவர் ஏதாவது ஒரு உணவை உட்கொண்டு ஒருமுறைக்கு மேல் குறைந்தது ஐந்து முறை வாந்தி எடுப்பது.
* ஒரு நாளில் 1-10 மணிநேரம் வாந்தி தொடர்ச்சியாக இருக்கும் போது குமட்டல் உணர்வும் சேர்ந்து இருக்கும்.
* ஒவ்வொரு நோயாளிக்கும் வெவ்வேறு வகையான அறிகுறிகள் காணப்படுகிறது .
* ஒரு மணிநேரத்தில் 4-5 முறை வாந்தி வரலாம் .
* அதிகாலை நேரம் அல்லது தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் பொதுவாக வாந்தி உண்டாகலாம் .
* வாந்தியுடன் குமட்டல், வயிற்று வலி மற்றும் சோர்வு ஆகியவை இருக்கும். சில நோயாளிகளுக்கு காய்ச்சல் உணர்வு இருக்கும். சிலர் வெளிர் நிறத்தில் மாறலாம்.
* சுற்றுப்புறக் காரணிகள் தொடர் வாந்தி நோய்க்குறிக்கு காரணமாக இருக்கலாம் . சிலருக்கு தலைவலி மற்றும் தலைசுற்றல் போன்றவை ஏற்படலாம்.

தொடர் வாந்தி நோய்குறிக்கான காரணங்கள் :
முன்னர் கூறியதுபோல் தொடர் வாந்தி நோய்குறிக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. ஆனால் இதற்கான சில காரணிகள் இருக்க முடியும்.
* தன்னுடல் சார்ந்த நோய்
* ஒற்றை தலைவலிக்கான குடும்ப வரலாறு
* பல்வேறு காரணிகளால் குழந்தைகளுக்கு அதிகரித்த மனஅழுத்தம் ஏற்படுவது . மனஅழுத்த ஹார்மோன்கள் பொதுவாக செரிமானம் தொடர்பான கோளாறுகளை எல்லா வயதினருக்கும் ஏற்படுத்துகிறது .
* சூடான நீரில் எப்போதும் குளிப்பது தொடர் வாந்தி நோய்குறிக்கான ஒரு சாத்தியமான காரணம் ஆகும்.

தொடர் வாந்தி நோய்குறிக்கான பகுதிகள்:
தொடர் வாந்தி நோய்க்குறிகள் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது என்று மருத்துவர் தீட்சித் குறிப்பிடுகிறார்.
1. தொடக்க நிலை
இந்த நிலைக்கான அறிகுறிகள்:
* தீடீரென்று வாந்தி உண்டாவது
* சருமம் வெளிர் நிறத்தில் தோன்றுவது
* வாந்திக்கு முன்னர் மற்றும் பின்னர் வியர்வை மற்றும் குமட்டல்

2. வாந்தி நிலை
இந்த நிலைக்கான அறிகுறிகள்:
* 20-30 நிமிடங்கள் நீடிக்கும் வாந்தி
* தொடர்ந்து 8-10 நாட்கள் , ஒரு மணி நேரத்தில் 5-6 முறை வாந்தி எடுப்பது
* வயிற்று வலி, குமட்டல், தலைவலி, காய்ச்சல், மயக்கம், அதிகரித்த எச்சில், வெளிர் நிற சருமம்

3. குணமடையும் நிலை
இந்த நிலைக்கான அறிகுறிகள்:
* குமட்டல் கட்டுப்பட்டு, வாந்தி மட்டும் இருக்கும்
* வாந்தி நிலையில் இருக்கும் அறிகுறிகள் சற்று குறைந்து காணப்படும்.
* குணமடைவதற்கான அடுத்த அடுத்த அறிகுறிகள் தென்படும்

4. குணமடைந்த நிலை:
இதுவரை அனுபவித்த அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலை.
ஆனால் மேலே கூறிய அறிகுறிகள் மற்றும் நிலைகள் மறுமுறை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைக்கான தீர்வை கேளுங்கள்.



Click it and Unblock the Notifications











