For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் அமைதியான பெற்றோராக இருக்க சில டிப்ஸ்..!

கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் ஜாலியாக இருப்பவர்கள் குழந்தைகள். அவர்களை பராமரிக்கும் பெற்றோர் நிலைமை பாவம்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரின் நிலை சற்று குழப்பமாகவும், சிக்கலாகவும் உள்ளது.

|

கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் ஜாலியாக இருப்பவர்கள் குழந்தைகள். அவர்களை பராமரிக்கும் பெற்றோர் நிலைமை ஐயோ பாவம் தான். வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை பார்ப்பது, பிள்ளைகளின் வீட்டு பாடங்களுக்கு உதவி செய்வது, வீட்டு வேலைகளை பார்ப்பது என்று ஒரே நேரத்தில் படு பிசியாக வேலை செய்பவர்கள் பெற்றோர்கள். வழக்கத்திற்கு மாறான இந்த புதிய வழக்கம் என்பது சற்று கடினமாகவே உள்ளது. சற்று அழுத்தத்தை உருவாக்கக்கூடிய இந்த வேலைகள் காரணமாக உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் மாறுபடலாம்.

5 Tips To Be A Calmer Parent During The COVID-19 Pandemic

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக மனதில் குழப்பம் தோன்றும். நாம் சரியாக வேலை செய்கிறோமா இல்லையா, பெற்றோராக நமது கடமையை சரியாக செய்கிறோமா, வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்வது கடினமாக உள்ளதா என்று இந்த பெருந்தொற்று காலத்தில் பெற்றோரின் நிலை சற்று குழப்பமாகவும், சிக்கலாகவும் உள்ளது.

MOST READ: கொரோனா காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இந்த நிலைமை எப்போது மாறும் என்பது இதுவரை தெரியாத நிலையில் இந்த சூழலுக்கு ஏற்றவாறு நாம் எப்படி நல்ல பெற்றோராக நடந்து கொள்ளலாம் என்பதற்கான சில குறிப்புகளை இப்போது நாம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளுடன் விளையாடுங்கள்

குழந்தைகளுடன் விளையாடுங்கள்

உங்கள் குழந்தைகள் தங்கள் நேரத்தை சிறப்பான முறையில் செலவிட வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில், அவர்களுடன் பெற்றோராகிய நீங்களும் சிறிது நேரம் விளையாட முயற்சிக்கலாம். குழந்தைகளும் இந்த காலகட்டத்தில் ஒருவித அழுத்தத்தை உணர்கிறார்கள் என்பதால் அவர்களும் அரவணைப்பிற்காக ஏங்குகின்றனர். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவதால் அவர்கள் அழுத்தம் குறைந்து அமைதியடைகின்றனர். இதனால் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்குமான தொடர்பு அதிகரிக்கிறது.

தினசரி வழக்கத்தில் தரமான நேரத்தை ஒதுக்குங்கள்

தினசரி வழக்கத்தில் தரமான நேரத்தை ஒதுக்குங்கள்

பெற்றோர் வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்வது என்பது குறித்த ஒரு புரிதல் சிறு பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. ஆகவே உங்கள் தினசரி வழக்கத்தில் ஒரு அட்டவணையை பின்பற்றி பணிகளை தொடருவதால் ஓரளவிற்கு உங்கள் பணிகளை குறித்த கட்டுப்பாடு இருக்கும். ஒரு நாளில் இரண்டு வேளை உணவை ஒன்றாக அமர்ந்து அனைவரும் உட்கொள்ள வேண்டும் என்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் , லேப் டாப் போன்றவற்றை அணைத்து விடுங்கள். உங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு உங்கள் குழந்தைகளுடன் சற்று நேரம் உரையாடுங்கள். அந்த நாள் எப்படி இருந்தது என்று உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். இதனால் உங்கள் மனஅழுத்தத்தில் இருந்து ஒரு மாற்றம் கிடைக்கும் மற்றும் உங்கள் குழந்தைக்கும் அவர்கள் மீதான உங்கள் அக்கறை புரியும். ஒரு ஆரோக்கியமான மாற்றம் உண்டாகும்.

வலைத்தளங்கள் பரிந்துரைக்கும் திட்டங்களை பின்பற்ற வேண்டாம்

வலைத்தளங்கள் பரிந்துரைக்கும் திட்டங்களை பின்பற்ற வேண்டாம்

இன்றைய நாட்களில் குழந்தைகள் தங்கள் நேரத்தை அளவுக்கு அதிகமாக இன்டர்நெட்டில் செலவிடுகின்றனர். விளையாட்டு நேரம் குறித்த முக்கியத்துவத்தை நாம் குறிப்பிடும் போது அந்த நேரம் இன்டர்நெட்டில் வீணாக வேண்டாம். வலைத்தளங்கள் கற்றுக் கொடுக்கும் படைப்பாற்றல் மிக்க செயல்பாடுகளைத் தாண்டியது பெற்றோரின் படைப்பாற்றல் என்பதை மறக்க வேண்டாம். உங்களுடைய குறிக்கோள் உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மட்டுமே. அதனால் உங்களுக்கு தோன்றும் வகையில் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்.

உங்களுக்கு நீங்கள் அன்பாக இருங்கள்

உங்களுக்கு நீங்கள் அன்பாக இருங்கள்

ஒரு நல்ல உதாரணமாகவும், சிறந்த பெற்றோராகவும் இருப்பதற்கு முதல் படி உங்களிடம் நீங்கள் அன்பாக இருப்பது. நீங்கள் புதிய பெற்றோராக இருக்கலாம், அல்லது பதின் பருவத்து பிள்ளையின் பெற்றோராக இருக்கலாம் அல்லது பெரிய பிள்ளைகளின் பெற்றோராக இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் உங்கள் மனதளவில் அன்பானவர்கவும் அமைதியானவராகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆழ்ந்த தூக்கம் , ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான உதவியை உங்கள் பிள்ளைகளிடம் பெற்றுக் கொள்ளுங்கள். சந்தோஷமான பெற்றோராக இருங்கள்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் ஓரளவிற்கு சிறந்த பெற்றோராக உங்களால் பயணிக்க முடியும். எதற்கும் பயம் கொள்ள வேண்டாம். நீங்கள் தனியாக இல்லை. நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்வதால் உங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும் உங்களால் மாற்ற முடியும். அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியை கொண்டு வர முடியும்.

நல்ல நடத்தையை வலுப்படுத்துங்கள்

நல்ல நடத்தையை வலுப்படுத்துங்கள்

குழந்தைகள் தங்கள் நண்பர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர். அதனால் அவர்கள் சற்று கடினமாக இருக்க நேரலாம். அவர்களுடைய நடத்தையை எல்லா நேரங்களிலும் பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பிள்ளைகளின் குணநலனில் நேர்மறை பழக்கத்தை பயிற்றுவிக்க இது ஒரு சிறந்த காலகட்டம். அவர்களுடைய நல்ல நடத்தைக்காக அவர்களுக்கு பரிசளியுங்கள். புகழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணம் ஒருவரின் வாழ்க்கையில் அவரை நீண்ட தூரம் கூட்டிச் செல்லும். குறிப்பாக வளரும் பிள்ளைகளுக்கு நேர்மறை குணநலன்கள் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்.

தீவிர விளைவுகளை பற்றிய பயம் இல்லாமல் இந்த பெருந்தொற்று காலகட்டத்தை உங்கள் பிள்ளைகளின் நலனிற்காக பயன்படுத்தும்போது சிறப்பான விளைவுகளை உண்டாக்கும். பிள்ளைகளிடம் ஆக்ரோஷமான வெளிப்பாடுகள் உண்டாகும் வரை அவர்களிடம் கடினமான முறையில் நடந்து கொள்ளாமல் அன்பாகவே இருப்பது சிறந்த தீர்வை விரைவாக வெளிப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Tips To Be A Calmer Parent During The COVID-19 Pandemic

Here are some tips to be a calmer parent during the covid-19 pandemic. Read on...
Desktop Bottom Promotion