For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயில்ல குழந்தையை கூட்டிட்டு போறீங்களா?... அப்போ இத கொஞ்சம் மனசுல வெச்சிக்கோங்க...

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தை தூக்கிக் கொண்டு வெளியில் செல்வதற்கு முன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள்.

By Vathimathi S
|

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தை தூக்கிக் கொண்டு வெளியில் செல்வதற்கு முன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள். அருகில் உள்ள மளிகை கடைக்கு உங்களது கை குழுந்தையை தூக்கி கொண்டு செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சில அடி தூரங்கள் நடந்தவுடனேயே உங்களது முகத்திலும் கழுத்து பகுதியில் வேர்வை மணிகள் சொட்ட தொடங்கிவிடும். இதை நீங்கள் உணர்ந்தால் உங்களின் குழந்தையுடயை நிலையை எண்ணிப் பாருங்கள்.

How Hot Is Too Hot For A Baby Outside? You Need To Follow These Guidelines

கோடை காலத்தில் மண்டை பிளக்கும் வெயில் அடித்தால் இது போன்ற ஆபத்தான சூழ்நிலையில் இருந்து உங்களது குழந்தையை நிச்சயம் பாதுகாத்தே தீர வேண்டும். தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப குழந்தைகளை கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகாட்டி நெறிமுறைகளை கூர்ந்து கவனித்தால் போதுமானது. இதன் மூலம் குழந்தையை வெயில் கொடுமையில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற முடிவை நீங்களே எடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாக்கம்

தாக்கம்

குழந்தையுடன் வெயிலில் வெளியே வரும் போது ஏன் கவலையை ஏற்படுத்துகிறது என்பதை முதலில் உணர வேண்டும். குழந்தைகளுக்கு பிறந்தது முதலே மேம்படுத்தப்பட்ட வேர்வை சுரபிகள் இருக்கும். பெரியர்வர்களை போலவே இந்த வேர்வை சுரபிகள் குழந்தை உடலில் ஏற்படும் அதிப்படியான சூட்டை உணர்ந்து அதை குளிரசெய்துவிடும். குழந்தையின் சிறிய உடல அதிகப்படியான திரவங்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஒரு முறை வேர்வை மணிகள் வறண்டவுடன் அவற்றால் பெரியவர்களுக்கு ஏற்படுவது போல் மீண்டும் வேர்க்காது. குறிப்பாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தும். அதனால் உடனடியாக நீரை விரைந்து அகற்றும். இதனால் அதிகப்படியாக வெப்ப சோர்வு அல்லது வெப்ப வாதம் ஏற்படும்.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

கடுமையான வெயிலில் ஒவ்வொரு முறை செல்லும் போது குழந்தை உடலில் வேர்வை நீர் உடனடியாக விரைந்து அகற்றப்படுவது அல்லது உஷ்ண வெளிப்பாடு ஏற்படுவதை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

நீர்அகற்றுதல்: தூங்குதல் அல்லது தலை தொங்குதல், வழக்கத்திற்கு மாறான எரிச்சல் அல்லது தாகம், தோல் சுருக்கம், கண்கள் அல்லது உச்சந்தலையில் குழி, குறைந்த அளவு கண்ணீர் அல்லது கண்ணீர் இல்லாத தொடர் அழுகை, அணைவு ஆடையில் குறைந்தளவு சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களது குழந்தை நீர்அகற்றலில் பாதித்துள்ளது என்று அர்த்தம்.

 உஷ்ண வெளிப்பாடு:

உஷ்ண வெளிப்பாடு:

மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமல் உங்களது குழந்தை மிகவும் சோர்ந்து காணப்பட்டாலோ அல்லது தாகம் மற்றும் குழந்தையின் தோலில் ஈரப்பதம் மற்றும் அதிக வேர்வை வெளியேறியதால் குளிர்ச்சி போன்ற அறி குறி இருந்தால் அது உஷ்ண வெளிப்பாடாகும்.

வெப்ப வாதம்: உங்களது குழந்தைக்கு உஷ்ண வெளிப்பாடு இருந்தால் உடனடியாக ஓரமாக உட்கார்ந்து சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் வெப்ப வாதத்தில் இருந்து குழந்தையை காப்பாற்ற முடியும். வாந்தி, காய்ச்சல், அமைதியின்மை, நாடி துடிப்பு அதிகரிப்பு போன்றவை வெப்ப வாதத்தின் அறிகுறியாகும்.

 சிகிச்சை:

சிகிச்சை:

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் குழந்தையை உடனடியாக வெப்ப சூழ்நிலையில் இருந்து அகற்றிவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு துணியை நனைத்து பிழிந்துவிட்டு குழந்தையின் தோல் பகுதியை துடைத்துவிட வேண்டும். ஸ்பாஞ்ச் குளியல் போல் இருக்க வேண்டும். ஆனால் ஸ்பாஞ்ச் பயன்படுத்த கூடாது.

குழந்தையின் உடல் ஈரமாகும் விரை விசிறிவிட வேண்டும். இது குழந்தையில் உடல் சூட்டை படிப்படியாக குறைக்க உதவும். ஆல்கஹால் துடைப்பான் பயன்படுத்தக் கூடாது. அதோடு குழந்தையை தொட்டி நீரில் மு க்க கூடாது. உடலில் தண்ணீரும் ஊற்றக் கூடாது. இவை ஆபத்தை ஏற்படுத்திவிடும். 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு கரண்டியில் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சொட்டு சொட்டாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தை தாய்ப்பால் குடிக்க தயாராகும் வரை இதை கடைபிடிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதோடு உடனடியாக டாக்டரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதையும் செய்யலாம்.

 முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

வெயில் அதிகளவில் அடிக்கும் போது வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் எங்கிருந்தாலும் சரி இதை பின்பற்ற வேண்டும். குழந்தைக்கு இலகு ரகம் மற்றும் காற்றோட்டமான பருத்தி போன்ற ஆடைகள் அணிவிப்பதை உறுதி செய்து கொள்ள வேண் டும். அதிகளவில் வேர்க்கும் போது ஆடைகள் மாற்ற, கூடுதல் ஆடைகளை உடன் எடுத்து செல்ல வேண்டும்.

நீங்கள் காரில் பயணம் செய்ய திட்டமிட்டால், குழந்தையை ஏசி அல்லது ஜன்னல் திறந்த நிலையில் காரின் உள்ளே விட்டுவிட்டு செல்ல வேண்டாம். இது குழந்தையை ஓவனில் விட்டு செல்வதற்கு சமம். இதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. குழந்தைகள் எப்போது மென்மையானவர்கள் மற்றும் பலவீணமானவர்களாக இருப்பார்கள்.

அதனால் அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை டாக்டரிடம் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Hot Is Too Hot For A Baby Outside? You Need To Follow These Guidelines

I love when spring weather creeps in and temperatures settle in the 70s, a cool breeze still in the air.
Story first published: Thursday, May 10, 2018, 18:05 [IST]
Desktop Bottom Promotion