குழந்தைகள் இல்லாத சுற்றுலா பெற்றோர்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் 5 காரணங்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

குழந்தைகள் இல்லாமல் ஒரு சுற்றுலாவா என்று பல பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆம். வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் குழந்தைகள் இல்லாமல் ஒரு சுற்றுலா சென்று வரலாமே இதில் என்ன தவறு இருக்கிறது. குழந்தைகள் இல்லாமல் கணவன் மனைவி இருவர் மட்டுமே சுற்றுலா செல்லவேண்டியதன் அவசியங்கள் உங்களுக்காக...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. குழந்தைகளுக்கு பிடித்த இடம்

1. குழந்தைகளுக்கு பிடித்த இடம்

குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், விளையாட்டுகள், நிச்சல் குளங்கள் என இருக்கும் இடங்களுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும் இது உங்களுக்கு பொருத்தமான இடமாக இருக்காது. உங்களுக்கு போரான அனுபவமாக இருக்கும்.

2. உங்களுக்கு பிடித்த இடம்?

2. உங்களுக்கு பிடித்த இடம்?

நீங்கள் அமைதியான இடங்களை விரும்புவீர்கள். குழந்தைகள் விளையாடக்கூடிய அம்சங்கள் அங்கு இருக்காது. குழந்தைகள் ஏன் தான் வந்தோம் என நினைக்கும் படியாகிவிடும்.

3. குழந்தைகள் மீது கவனம்

3. குழந்தைகள் மீது கவனம்

நீங்கள் உங்களது குழந்தைகளுடன் சுற்றுலா சென்றால் உங்கள் கவனம் முழுவது அவர்கள் மீது மட்டுமே இருக்கும். அங்கே போகாதே .. அதை செய்யாதே.. இதை செய்யாதே என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். குறும்புக்கார குழந்தைகளாக இருந்தால் உங்களை வாட்டி எடுத்துவிடுவார்கள்.

4. மன அமைதி தரும் இடங்கள்

4. மன அமைதி தரும் இடங்கள்

நீங்கள் சத்தங்கள், மன அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கையை விட்டு சற்று அமைதியாக இருக்க கூடிய உலகத்திற்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். முன்னரே சொன்னது போல் இந்த இடங்கள் உங்களது குழந்தைக்கு ஒத்து வராது.

5. மனம் விட்டு பேசலாம்

5. மனம் விட்டு பேசலாம்

கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி தங்களது காதலை பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இரவு நேர பார்ட்டிகள், காலை நேர டிரெக்கிங் என உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Without Kid Outing is More Important for Couples

Why Without Kid Outing is More Important for Couples
Story first published: Friday, June 23, 2017, 12:30 [IST]