குழந்தையின் தந்தை இல்லாத குறையை போக்க ஆணாக மாறிய பெண் - பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

குழந்தையை வளர்ப்பது மிகப்பெரிய சவாலான விஷயம் தான். அதுவும் தந்தையில்லாமல் வளர்ப்பது அதைவிட சவாலானது. கணவனை பிரிந்த துயரம் ஒரு பெண்ணுக்கு அதிகமாக இருக்கும். அந்த பெண் தனது வாழ்வில் பெரும் பகுதியை இழந்ததை போல உணர்வாள். இனி தனியாக வாழ்க்கையை எப்படி சாமாளிக்க போகிறோம் என்பது போன்ற பல கேள்விகள் மனதில் எழும்.

அதுவும் சிறிய வயதிலேயே கணவனை இழந்த பெண்கள் என்றால் பல சோதனைகள் வருவது இயல்பு தான். இவ்வாறான சூழ்நிலையில் உள்ள பெண்கள் தங்களது குழந்தையை கவலை தெரியாமல் வளர்ப்பது எப்படி என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்

மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்

கணவனை இழந்த துக்கம் மனதில் இருந்தாலும், உங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக மனதை திடப்படுத்திக்கொள்வது அவசியம். தந்தையின் இடத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

தனிமையில் இருக்காதீர்கள்

தனிமையில் இருக்காதீர்கள்

நீங்கள் இதற்கு முன்னால் வேலைக்கு செல்லவில்லை என்றால், இனி வேலைக்கு செல்ல பழகிக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுங்கள். தனிமையில் மட்டும் இருக்காதீர்கள். இது உங்கள் உடல் மற்றும் மனநலனை பாதிக்கும். உங்களது இந்த நிலை உங்களது குழந்தையையும் பாதிக்கும்.

குழந்தையின் தேவைகள்

குழந்தையின் தேவைகள்

குழந்தையின் முக்கிய தேவைகளை அவர்கள் கேட்கும் முன்னரே பூர்த்தி செய்யுங்கள். தந்தை இல்லாத குறை தெரியாமல் வளர்க்கிறேன் என்ற பெயரில் ஆடம்பரம் வேண்டாம்.

வேலை இடத்தில் கவனம்

வேலை இடத்தில் கவனம்

வேலை செய்யும் இடங்களில் நீங்கள் கவனமாக இருப்பது முக்கியம். உங்களது கவலைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குறிப்பாக ஆண்களிடம் வேண்டாம்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் தன் சின்னஞ்சிறு குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பதற்காக செய்த காரியம் பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையை தரும் என நம்புகிறோம்.

பள்ளி விழா

பள்ளி விழா

கடந்த வருடம் தனது மகன் பள்ளியில் இருந்து தேம்பி தேம்பி அழுது கொண்டு வருவதை அந்த தாய் பார்த்திருக்கிறார். தனது கைக்குட்டையை எடுத்து தன் மகனின் கண்ணீரை துடைத்து விட்டுவிட்டு என்ன நடந்தது என கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்லக்கூட முடியாமல் அந்த சிறுவன் அழுதுகொண்டே இருந்தான்.

பின்னர் அவரது ஆசிரியர் வந்து, இன்று பள்ளியில் தந்தையுடன் பிள்ளைகள் பிசா சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது எனவும், இது தந்தை மற்றும் பிள்ளைகளின் உறவை வழுபடுத்துவதற்காக நடத்தப்படுகிறது எனவும் கூறினார். உடனே அந்த பெண், தந்தை இல்லை என்பதை நினைத்து தான் தன் மகன் அழுகிறான் என்பதை உணர்ந்தார்.

இந்த வருடம் தந்தையுடன் சென்ற மகன்

இந்த வருடம் தந்தையுடன் சென்ற மகன்

இந்த வருடமும் பள்ளியில் சென்ற வருடம் போலவே பிசா சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அந்த பெண் தன் மகன் இந்த வருடமும் வருத்தப்படக்கூடாது என்பதற்காக, ஆணை போன்று உடை அணிந்து கொண்டு, போலியான மீசை வைத்துக்கொண்டு ஆண் போன்ற தோற்றத்தில் தன் மகனுடன் சென்றார். அந்த குழந்தையும் மனநிறைவு அடைந்தது.

உங்களுக்கான பாடம்

உங்களுக்கான பாடம்

பெண்கள் எந்த இடத்திலும், எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்களது குழந்தையை நன்றாக வளர்த்து சமூகத்தில் உயர்ந்தவராக மாற்ற வேண்டியது உங்கள் கடமை என்பதை மனதில் வைத்துக்கொண்டு தைரியமாக வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why This Single Mom Came to School Dressed as Dad

Here are the some parenting tips for single mother
Story first published: Friday, June 16, 2017, 14:30 [IST]